CM Theaters
TN Theaters
Australia
Bangalore
Bahrain
Canada
Chennai
Coimbatore
Dubai - UAE
Erode
France
Germany
Hyderabad
Japan
Kadalore
Kerala
Kuwait
London
Madurai
Malaysia
Mayiladuthurai
Pondichery
Singapore
Sri Lanka
Trichy
USA

  Join our Official Superstar Fan Group

  Picture Gallery

Video Gallery

Kuselan Corner

Chandramukhi First Day First Show (FDFS) Celebration

Chennai

>>> Click here for Video Coverage at Uthayam Theater

ரோகிணி, ராகினி, நந்தின


சென்னை கோயம்பேட்டில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகள் உள்ளன. இதில் ரோகிணி, ராகினி, நந்தினி என்ற 3 தியேட்டர்களில் ரஜினி நடித்த `சந்திரமுகி' படமும், ருக்மணி, ரூபினி ஆகிய 2 தியேட்டர்களில் விஜய் நடித்த `சச்சின்' படமும், ரக்சினி தியேட்டரில் கமலஹாசன் நடித்த `மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் திரையிடப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

225 ரூபாய் கட்டணம்

இங்கு ரஜினி படத்துக்கு பால்கனி 225 ரூபாய், முதல் வகுப்பு 175 ரூபாய், இரண்டாம் வகுப்பு 125 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து இருந்தார்கள்.

இந்த தியேட்டர் வளாகத்தில் முன்னணி கதாநாயகர்கள் நடித்த மூன்று படங்களும் ரிலீசாகி இருந்ததால், தியேட்டருக்கு வெளியேயும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.


உதயம், மினி உதயம், சூரியன்

சென்னை கே.கே.நகரில் உள்ள உதயம் காம்ப்ளக்ஸில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என 4 தியேட்டர்கள் உள்ளன. இதில் சந்திரனில் மட்டும் ஜெய் ஆகாஷ் நடித்த `செவ்வேல்' படம் ரிலீசாகி இருக்கிறது. மற்ற மூன்று தியேட்டர்களிலும் தலா 4 காட்சிகளாக ரஜினியின் `சந்திரமுகி' படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருந்தது.

உதயம் காம்ப்ளக்ஸில் ரஜினி படத்துக்கு பால்கனிக்கு 70 ரூபாயும், மற்ற வகுப்புகளுக்கு பொதுவாக 60 ரூபாயும் வசூலித்தார்கள். நேற்று காலை 11 மணிக்கு நடந்த முதல் காட்சியின் போது இங்கே 60 ரூபாய் டிக்கெட் 400 ரூபாய் வரை `பிளாக்'கில் விலை போனது. ஆனால் போலீசாரின் கண்காணிப்பு காரணமாக பிளாக்கில் அதிக விலைக்கு விற்ற பலர் மாட்டிக் கொண்டதால், பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் எண்ணத்தில் வந்த ரசிகர்கள் தடுமாறிய நிலையில் தவித்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

உதயம் தியேட்டருக்குள் நுழையும் முன்பாக, 4 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ரஜினியை உட்கார வைத்து அவரது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா சாரட்டை ஓட்டிக் கொண்டு போவது போன்ற பெரிய `கட்_அவுட்' வைக்கப்பட்டு இருந்தது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ரஜினி குடும்பம்

நேற்று மதியம் 2.30 மணி காட்சியின் போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் நடிகருமான தனுஷ் ஆகியோர் படம் பார்க்க வந்தார்கள். காரில் இருந்து இறங்கிய தனுஷை ரசி கர்கள் `அலேக்'காக தியேட்டருக்குள் தூக்கிக் கொண்டு போனார்கள். இந்த காட்சியை தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.

உதயம் தியேட்டரில் வருகிற 18_ந் தேதி வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
 

சாந்தி்


சென்னை அண்ணா சாலை யில் உள்ள சாந்தி தியேட்டரில் ரஜினி நடித்த சந்திரமுகி படத் துக்கான கட்-அவுட், தோரணங்கள் எக்கச் சக்கமாக காணப்பட்டன. இங்கு ரஜினியுடன் பிரபு படமும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இங்கு கட்டண விகிதத்தை 80 ரூபாய், 60 ரூபாய், 40 ரூபாய் என மூன்று நிலைகளில் நிர்ணயித்து இருந் தார்கள்.


இங்கும் ஒரு வாரம் ஹவுஸ்புல் என்ற போர்டு தான் காணப் பட்டது.

கட்அவுட் இல்லாத தியேட்டர்

சென்னை சத்யம் காம்ப்ளெக் சில் சத்யம் தியேட்டரில் கமல ஹாசன் நடித்த `மும்பை எக்ஸ் பிரஸ்' படமும் சாந்தத்தில் ரஜினியின் சந்திரமுகி படமும் ரிலீசாகி இருந்தது. இங்கு ஒரு அதிசயம் தியேட்டர்காரர்கள் வைத்த `ஹோர்டிங்' விளம்பரம் மட்டுமே இடம் பெற்று இருந் தது.

ரஜினி, கமல் ரசிகர்கள் சார்பில் எந்தவித கட் அவுட்டோ, பேனர் விளம்பரமோ இங்கே பார்க்க முடியவில்லை.

நேற்று மாலையில் சந்திரமுகி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருந்ததால் சுபம் தியேட்டரில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த படத்தை நிறுத்தி விட்டு சந்திரமுகி படத்தை திரையிட்டார்கள்.

 

Other Photos at Chennai Theaters

 

 

 

 

Ticket booking at Shanthi Theater.

The banner was placed by rajinifans.com

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

Visitors Since January 2007


Warning: fread(): Length parameter must be greater than 0. in /hsphere/local/home/rajinifa/rajinifans.com/counter.php on line 8

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information



 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View