|
Erode -
Gopichatipalayam

கோபி, ஏப்.15-
`சந்திரமுகி' படம் நேற்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து
ரஜினிகாந்தின் உருவப்படத்துக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம்
செய்தனர்.
புத்தாண்டு விருந்து
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த `சந்திரமுகி'
திரைப்படம் வெளியானது. இது ரஜினி ரசிகர்களுக்கு புத்தாண்டு
விருந்தாக அமைந்து இருந்தது.
`சந்திரமுகி' படம் திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்களின் முன்பு
ரஜினி ரசிகர்கள் கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ரஜினி
காந்திற்கு பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைத்தும், கொடி தோரணங்கள்
கட்டியும் கொண்டாடினர்.
பாலாபிஷேகம்
ஈரோடு மாவட்டம் கோபியில் ரஜினி ரசிகர்கள் ஒரு படிமேலே சென்று
ரஜினிகாந்தின் உருவப்படத்துக்கு பாலாபிஷேகமேநடத்தி உள்ளனர்.
கோபியில் உள்ள இந்திரா தியேட்டரில் `சந்திரமுகி' படம் திரை
யிடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் முதல் காட்சி திரை
யிடப்படுவதற்கு முன் தாலுகா ரஜினி ரசிகர்மன்றம் சார்பில் விழா
நடைபெற்றது. ரஜினி மன்ற செயலாளர் டி.முத்துக்குமார் தலைமை
தாங்கினார். மன்ற தலைவர் எல்.ஐ.சி.நடராஜன் படச் சுருளை
வெளியிட தியேட்டர் உரிமையாளர் ஜி.கே.நடராஜன் பெற்றுக்
கொண்டார்.
பின்னர் தியேட்டர் முன்பு ரஜினிகாந்தின் உருவப்படத்துக்கு
பாலாபிஷேகம் நடைபெற்றது. ரஜினி ரசிகர்கள் 10 குடம் பாலை
படத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
அதன் பிறகு படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள்
முண்டியடித்து சென்றனர்.
|