|
Pondichery
புதுச்சேரி, ஏப். 15-
"சந்திரமுகி" படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களுக் கிடையே
தள்ளுமுள்ளு ஏற் பட்டதால் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
விடுதலை சிறுத்தைகளின் எதிர்ப்பு காரணமாக கமல ஹாசன் நடித்த "மும்பை
எக்ஸ்பிரஸ்" படம் திரை யிட்ட தியேட்டர்களில் போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சந்திரமுகி
தமிழ் புத்தாண்டை யொட்டி ரஜினி காந்த் நடித்த சந்திரமுகி
திரைப்படம் புதுவை ஆனந்தா தியேட்டர், ராமன் தியேட்டரில்
திரையிடப்பட்டது. இந்த திரைப் படத்தை காண காலை முதலே
ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
தியேட்டர் திறந்ததும் அவர் களை உள்ளே விடுவதற்கு ஏது வாக
போலீசார் வரிசையாக நிறுத்தினர். அப்போது ரசிகர் களுக்குள்
தள்ளுமுள்ளு ஏற்பட் டது.
தடியடி
இதைத் தொடர்ந்து லேசாக தடியடி நடத்தி அவர்களை போலீசார்
ஒழுங்கு படுத்தி னார்கள். படம் போட்டதும் தியேட்டருக்குள்
ரசிகர்கள் சூடம் ஏற்றி காண்பித்தனர்.
தியேட்டர்களில் ரஜினியின் கட்-அவுட்டுகள் ஆங்காங்கே
வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்
தனர்.
|