|
Trichy
திருச்சியில் கலையரங்கம்,
மெகாஸ்டார் தியேட்டர்களில் சந்திரமுகி திரையிடப்பட்டது.
இருப்பினும் இன்று அதிகாலை முதலே இந்த 2 தியேட்டர்கள்
முன்பும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது.
உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே பட்டாசுகளை
வெடித்து மகிழ்ந்தனர்.
தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பதை பார்த்து அதிர்ந்து போன
தியேட்டர் ஊழியர்கள் ஓடி வந்து வெடித்துக்கொண்டிருந்த
பட்டாசுகளை அப்புறப்படுத்தினர்.
கூட்டம் அதிகமானதால் டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்கள்
தியேட்டருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒருவரை வருவர்
முண்டியடித்துக்கொண்டு நின்றனர். போலீசார் எவ்வளவோ
எச்சரித்தும் ரசிகர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதை
தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த ரசிகர்கள் மீது
தடியடி நடத்தினார்கள். இதனால் ரசிகர்கள் அங்கிருந்து தப்பி
ஓடினர்.
ஓடும் போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்
மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
போலீசார் நடத்திய தடியடியால் பரபரப்பு ஏற்பட்டது.
|