கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே விபச்சார வழக்கு ஒன்றில் சிக்கிய நடிகை புவனேஸ்வரி, சமீபத்தில் மீண்டும் அதே கேசில் மாட்டிக்கொண்டார். மாட்டிக்கொண்ட புவனேஸ்வரி, சும்மா நில்லாது, “என்னை மட்டும் என் பிடிக்கிறீங்க…. என்னை மாதிரி சினிமா இண்டஸ்ட்ரில இன்னும் நிறைய நடிகைங்க இந்த தொழில்ல ஈடுபடுறாங்க… அவங்களையும் கைது பண்ணுங்க…” என்று சில நடிகைகளின் பெயர்களை மறைமுகமாக கூறி சீரியதாகவும்… இதையடுத்து அந்த செய்தியை மறுநாள் வெளியிட்ட தினமலர் நாளிதழ் புவனேஸ்வரி கூறியதாக முக்கிய நடிகைகள் சிலரது பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட, கொந்தளித்தனர் நடிக நடிகையர்.
உடனே நடிகர் சங்க உறுப்பினர்கள் அவசரமாக கூடி சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரை நேரில் சந்தித்து தினமலர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தனர். மேலும் இன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் அவசர கண்டன கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் இதில் கலந்து கொண்டால் அந்த பிரச்னைக்கும் கூட்டத்திற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று கருதி, நடிகர் சங்க உறுப்பினர்கள் சூப்பர் ஸ்டாரை கூட்டத்திற்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சூப்பர் ஸ்டார் வருவதாக சம்மதித்தவுடன் நடிகர் சங்க வளாகம் பரபரப்படைந்தது. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தனர். நடிகர் சங்க வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இன்றைய கண்டன கூட்டத்தில் சூப்பர் ஸ்டார் பேசியது என்ன?
இந்த் கண்டன கூட்டத்தில் கருப்பு நிற உடையணிந்து கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.
“எனக்கு கோவம் வந்தா பேச வராது. இப்போ நான் ரொம்ப கோவமா இருக்கேன். பொதுவா விபச்சார வழக்குகளில் பெண்கள் கைதுன்னு அப்படி இப்படின்னு பேப்பர்ல செய்தியும் போட்டோவும் வந்தாலே எனக்கு பாக்குறதுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும். கேவலம் ரெண்டு வேலை சோத்துக்கு தானே இதை செய்றாங்கன்னு பரிதாபமா இருக்கும். தப்பு செஞ்ச அவங்க மேலேயே நமக்கு இத்தனை அனுதாபம் வருதுன்னு சொன்னா, எந்த தப்பும் செய்யாத இங்க உட்கார்ந்திருக்குற நம்ம சகோதரிகளை பத்தி போட்டோவோட ந்யூசை பார்த்தா எப்படி இருக்கும்… அந்த செய்தியையும் போட்டோவையும் பார்த்த அன்னைக்கு ராத்திரி எனக்கு தூக்கமே வரலை.
நான் சொல்றேன்… உங்களுக்கு தெரியும் நீங்க எந்த தப்பு செய்யலைன்னு… உங்க அப்பா அம்மாவுக்கு தெரியும்… அந்த ஆண்டவனுக்கு தெரியும்…. இதெல்லாம் ஒண்ணுமில்லை…
இப்போ கடைசீயா செய்தி வந்தது… அந்த ந்யூசை போட்ட அந்த பத்திர்க்கை ஆசிரியரை கைது பண்ணிட்டாங்கன்னு…. காவல் துறையினருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த ஆக்க்ஷன் எடுக்குறதுக்கு காரணமாயிருந்த முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் என் நன்றி. ”
நடிகர் சங்கம் எதிர்ப்பார்த்து போலவே உடனே காவல் துறை நடவடிக்கை எடுத்து தினமலரின் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இரவு தொலைக்காட்சிகளில் நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் ஆசரியர் கைதுக்கு நடிகர் ரஜினிகாந்த் முதல்வருக்கு நன்றி என்று ந்யூஸ் ஸ்க்ராலிங் ஓட ஆரம்பித்தது.
சூப்பர் ஸ்டாருக்கு இதற்க்கு முன்பு பல சமயங்களில் பிரச்னைகள் (சில சமயம் சக நடிகர்களாலேயே) வந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது நடிகர் சங்கம். ஆனால் இதோ சக கலைஞர்களுக்கு பிரச்னை என்றவுடன் சூப்பர் ஸ்டார் ஆஜராகி அவர்கள் மீதான பழியை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஒரு பத்திரிக்கைக்கு எதிராக தனது கருத்தையும் பதிவு செய்துவிட்டார். இதை நடிகர் சங்கம் என்றும் மறக்ககூடாது என்பதே நம் வேண்டுகோள்.
தென்னிந்திய நடிர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், சூர்யா, ஜீவா, விவேக், விஜயகுமார், சத்யராஜ், எஸ்.வி.சேகர், விவேக், கவுண்டமணி மற்றும் நடிகைகள் சீதா, ஸ்ரீபிரியா, நளினி , லதா, ஊர்வசி , ரேவதி , ரோகிணி , சங்கீதா, இயக்குநர்கள் சேரன், செல்வம ணி மற் றும் ராதார வி உள்ளிட்ட ந டிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
|