கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார்
பிரபல கிரிக்கட் வீரர் ஸ்ரீகாந்த் கடந்த பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
அவரது மகன் அதித்யாவின் திருமணம் சென்னையில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார்.
விஜய் யேசுதாஸ் இல்லத்தில் சூப்பர் ஸ்டார்
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸின் புதல்வர் விஜய் யேசுதாஸ் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நெருங்கிய நண்பராவார். ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் ரஜினி வீட்டில் நடக்கும் விஷேஷம் எதுவானாலும் நிச்சயம் விஜய் யேசுதாசும் அவரது மனைவி தர்ஷனாவும் இருப்பார்கள்.
சமீபத்தில் விஜய் யேசுதாஸின் பெண் குழந்தை அமய்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. குடும்பத்துடன் வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். (சமீபத்திய ஆனந்த விகடன் இதழில் செய்தியும் படமும் இடம்பெற்றுள்ளது).
சென்னையில் சுவாமி தயானந்த சரஸ்வதி - நேரில் சந்தித்து ஆசி பெற்ற சூப்பர் ஸ்டார்!
சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80 வது பிறந்த நாள் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டனர். (இது பற்றிய செய்தி தினத் தந்தியில் விரிவான செய்தி வெளியானது. தந்தி, தினகரன் தவிர்த்து தினமணி, எக்ஸ்பிரஸ், தினமலர் உள்ளிட்ட பிற நாளிதழ்களில் இந்நிகழ்ச்சி பற்றி செய்தி இடம்பெற்றபோது ரஜினி கலந்துகொண்ட விபரம் மட்டும் இடம்பெறவில்லை.)
‘ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம்.’ - நூலை வெளியிட்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டாரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
கேரக்டர் ரோலில் நடித்த்கொண்டிருந்த ரஜினியை ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ஆக்கிய பெருமை எஸ்.பி.எம். என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.முத்துராமனையே சாரும்.
சூப்பர் ஸ்டாருக்கும் எஸ்.பி.எம்.முக்கும் எப்படியோ அதே போன்று தான் ஏ.வி.எம். நிறுவனத்திற்கும் எஸ்.பி.எம்.முக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. ஏ.வி.எம்.ம்மின் பல வெற்றிப் படங்களை இயக்கியதும் எஸ்.பி.எம் தான்.
இவரின் வாழ்க்கை அனுபவங்கள் பிரபல எழுத்தாளர் ராணி மைந்தன் அவர்களின் எழுத்தில் ‘ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம்’ என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை சூப்பர் ஸ்டார் நேற்று தமது இல்லத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்.
விகடன் பிரசுரம் பதிப்பாளர் பா.சீனிவாசன் முதல் பிரதியை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடைபெற்ற இந்த எளிய நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், விகடன் பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் ஆசிரியர் வி.எஸ்.வி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நூலாசிரியர் ராணிமைந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏராளமான புகைப்படங்களுடன் தரமாக உருவாகியிருக்கும் இந்த நூலின் விலை ரூ.125/-. மொத்த பக்கங்கள் 384. (வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002.)
‘ஈரம்’ - பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்
தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளை குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்க சூப்பர் ஸ்டார் என்றுமே தயங்கியதில்லை. பரபரப்பாக பேசப்படும் நல்ல படங்களை அவர் நிச்சயம் பார்க்க தவறுவதில்லை. பல நல்ல திரைப்படங்களை ப்ரீவியூ தியேட்டரில் பார்த்து சம்பந்தப்பட்ட படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார். இதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமும் புத்துணர்ச்சியும் அளித்திருக்கிறார்.
|