சிறந்த நடிகருக்கான விருது சிவாஜி – தி பாஸ் படத்துக்காக தலைவர் ரஜினிக்கு இன்று முதல்வர் கலைஞர் இன்று விருது வழங்கி கவுரவித்தார்.
விழாவில் ஏற்புரை வழங்கி பேசிய தலைவர்..
"ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கொடுத்து இருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும், கமலுக்கும் கிடைத்தது மிகபெரிய பாக்கியம்.
உடல் நல குறைவாக இருந்ததால் கொஞ்சம் தூங்கி விட்டேன். சற்று தாமதமாக விழாவிற்கு வருகிறேன் என்று எங்களிடம் கலைஞர் சொன்னார். அந்த பன்பு, அடக்கத்தை எப்படி சொல்வது? அய்யா.. நீங்க நல்ல இருக்கணும்.
கலைஞர் எத்தனை மேடுகள், சிகரங்களை பார்த்தவர். எத்தனையோ மேடுகளும், சிகரங்களும் காணாமல் போனதையும் பார்த்து இருக்கிறார். அவர் யாரை அணைத்து கொண்டாலும் அவர் பெரிய ஆளாகி விடுவார். அவர் வீட்டுக்கு சாய்பாபா வந்து சென்றது சாதாரண விஷயம் அல்ல..
சிவாஜி படத்திற்காக, கலைஞர் கையினால் பரிசு பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தை தயாரித்த எவிஎம்.சரவணன் சார்க்கு என் மனமார்ந்த நன்றி. படத்தை இயக்கிய ஷங்கருக்கு எனது மனமார்ந்த நன்றி.
நான் திரையுலகத்திற்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும் (தலைவா...........அப்படி சொல்லாதீங்க...), தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என்றார்.
'எனக்கும், ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை. ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள். அவர் எந்திரனை சீக்கிரம் முடித்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் சார்பில் நான் கேட்டுகொள்கிறேன்' என்றார்.
|