Related Articles
உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் - கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு
இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் ... தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் நிச்சயதார்த்தம்! அசத்தல் படங்கள் !!
கலையுலக விழா நேரடி ரிப்போர்ட்
ரஜினி கலந்துகொண்ட... ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் ... கோவா ... ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு காட்சி
ஜக்குபாய் பிரஸ் மீட் ... திரைத்துறையினர் மனு ... ஜக்குபாய் பிரீமியர் ... சூப்பர் ஸ்டார் ரஜினி
புனேவிலும் சூப்பர் ஸ்டாரை காண அலைமோதும் கூட்டம் - எந்திரன் ஷூட்டிங்
சூப்பர் ஸ்டார் திறந்து வைத்த ஓட்டல்; வெளியே நிலவிய பரபரப்பான சூழ்நிலை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
முள்ளும் மலரும் வந்து 31 வருசம் ஆகுது ...
(Thursday, 25th February 2010)

இந்த படம் வந்து 31 வருசம் ஆகுது!! நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man!!).. இந்த ரெண்டு விசயமும் தான் இந்த பதிவ எழுத நம்பிக்கை கொடுத்தது..

நான் ஆர்ட் பிலிம் பார்க்குற ஆளு கிடையாது.. பாட்ஷா, பில்லா, போக்கிரி மாதிரி மாஸ் படங்களோட ரசிகன்.. இது நிச்சயம் விமர்சனமும் அல்ல.. என்னால் தலைவர் படத்த விமர்சனம் பண்ணவும் முடியாது.. So, இந்த படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடித்த விசயங்கள் தான் இந்த பதிவு.. இதனோட இருக்கிற போட்டோ ஆல்பத்த மிஸ் பண்ணிடாதீங்க.. please.. இந்த பதிவ + படங்கள் உங்க Bandwidth-அ ரொம்ப சாப்டிருந்தா அதுக்கு ஒரு advance sorry

படம் பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன introduction.. படத்தோட கதை ரொம்ப ரொம்ப எளிமையானது (simple - yet powerful).. அண்ணன் - தங்கைக்கிடையே இருக்குற பாசமும், முரட்டு அண்ணன் (ரஜினி - காளி), வெகுளி தங்கச்சி (ஷோபா) மற்றும் ஒரு மென்மையான காதல்தான் (சரத்பாபு - ஷோபா) கதையோட முக்கிய அம்சங்கள்...

கதை: உமா சந்திரன்
...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை!...'
(நன்றி azhagan for pointing me out)

இனி இதில் வர முக்கியமான கேரக்டர்ஸ் பத்தி..

சரத்பாபு:-
படித்த பட்டதாரியா, கிராமத்து அதிகாரியா வரும் இவரு உண்மையில ரொம்ப நல்ல யதார்த்தமான ஆளு.. ரஜினியோட முரட்டு சுபாவத்த புரிஞ்சுக்கிறதும், எப்ப பாத்தாலும் ரூல்ஸ் பேசறதும் அதே சமயம் கஷ்டம்னு வரும்போது கூட இருந்து உதவி பண்றதுமா மெச்சூர்டான கேரக்டர்.. தலைவர் தன் தங்கைய தர மறுக்கும் போது அவரோட முரட்டு சுபாவத்த கண்டு பின் வாங்கறது ரொம்ப இயல்பு.. படத்துல எனக்கு பிடிச்ச இவரோட வசனம் (தம்பிக்கா வக்காலத்து வாங்கற க்ளார்க்குகிட்ட பேசறது)..

"சரத்: ஆமா நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராவது இருக்காங்கலா??
க்ளார்க்: ஏன் சார்?
சரத்: நான் காளிய பத்தி உண்மையான விவரங்கள தெரிஞ்சிக்க ஆசை படறேன்!!


ஷோபா:-
ரொம்ப வெகுளியா வர பொண்ணு.. படம் முழுக்க ரொம்ப நல்ல expressions!! அண்ணனுக்காக காதல விட்டு கொடுக்க க்ளைமேக்ஸ்ல முன் வரது ரொம்ப டச்சிங்

ரஜினியின் மனைவி்யா நடிச்சிருக்கிறவங்க..
ரொம்ப casual-ஆ அதே சமயம் கொஞ்சம் அடாவடியான கேரக்டர்.. ஆரம்பத்துல சோத்து மூட்டையா காட்டினாலும் காளி தவறான ஒரு ஆளுக்கு தன் தங்கச்சிய கட்டி கொடுக்கும் முடிவ எடுக்கும் போது எதிர்க்கிறதும், காளிய கையில்லனு கிண்டல் பண்றது தாங்காம போட்டியில கலந்து ஜெயிக்கிறதும், சரத்பாபு கிட்ட போய் பேசி ஷோபாவ கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கறதுமாக கேரக்டர் போகும்.. பிடித்த வசனம்..

casual-ஆ படுத்திருக்கும் போது பார்க்கும் ரஜினியிடம்.. "ஏன்யா முன்ன பின்ன பொம்பளயயே பாத்ததில்லியா!!".. தலைவரோட ரியாக்ஷன் சூப்பர்.. 


மகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா..
Deadly Combination!! ஒவ்வொறு கேரக்டர்லயும், ப்ரேம்லயும் மகேந்திரன் அவருடைய முத்திரை இருக்கும்... இசையராஜா (let the typo to be) பிண்ணனி இசையிலயும், பாடல்களிளையும் வெளுத்து வாங்கியிருக்காரு.. he and this film's music is my all-time favorite.. பாலு மகேந்திரா கிராமம், காடு, மலை, வானமுன்னு கலக்கியிருப்பாரு.. எதோ ஏற்காடு பக்கத்துல (உண்மைல சிக்கமங்களூர்னு நினைக்கிறேன்) எடுத்த மாதிரியோ ஒரு பீலிங்.. முப்பது வருசம் முன்னமே இவ்வளவு டீடெய்லா - royal salute :) இந்த படத்துல இவங்க work பத்தி இன்னும் பத்து பதிவு போடலாம்.. நேரமி்ன்மை காரணமா இவங்கள பத்தி இதோட நிறுத்திக்கிறேன்..

LAST BUT NOT THE LEAST, தலைவர் ரஜினி்யோட (முரட்டு) காளி Performance பத்தி... இந்த படத்துல தலைவர் நடிக்கல, வாழ்ந்திருக்காரு (விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன).. இப்ப திரும்ப இதே மாதிரி படமெல்லாம் அமையுமா?? எல்லோரும் வழக்கமா கேக்குற அதே கேள்வி,, ஏன் இதே கூட்டணியில இது மாதிரி, ஜானி மாதிரி இன்னும் நிறைய படங்கள் வரல?????

இனி ஒரு போட்டோ மாலை.. படங்களை பெரிதாக்கிட க்ளிக் செய்யவும்.. Don't miss my comments too :)

1978 ஆம்.. நம்ப முடியல!!


சின்ன பசங்க.. கண்ணுல கூட நடிப்பு.. மகேந்திரன்!!


தலைவர் Intro!!!!!!!!!!


(சரத்பாபு யாருன்னு தெரியாம)  சார் யாருன்னு சொல்லலயே???

 

கோபம், சமாளிப்பு :)


விளையாட்டு + In Direct message to சரத்பாபு


தலைவர் casual-ஆ உக்காந்து இருக்கிற போஸ் பாருங்க,


வாசிங்க சார்..... வாசிங்கடா டேய்!!

 

அவசரமா கூப்பிட்டாரா.. தா உடனே வந்துடறேன்...


தங்கச்சி காலுக்கு மருதாணி... ஐயோ, ஐயோ இப்ப இப்படி Natural-ஆ பாக்க முடியறதில்லியே..

 

பார்த்துக்கிறேன் சார்..

 

 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!!

 

 

 

 

 

மேலே கல்யாணத்திற்கு முன்... கீழே கல்யாணத்திற்கு பின்.. தலைவருக்கு கூடவா.. சும்மா காமெடி!!!

 

 

(வேலைய விட்டு நீக்கும் போது) என்னா முடிவே பண்ணிட்டீங்களா..

 

 

(எனக்கு ரொம்ப பிடிச்ச சீன், வசனம்) கெட்ட பையன் சார் இந்த காளி.. ரெண்டு கை, ரெண்டு கால் போனா கூட பொழச்சிக்குவான் சார்.. என்னா ஒரு ego!!!

 

 

தலைவரோட ஷ்டைல், என்னா ஒரு முரட்டு தோற்றம்!!

 

தங்கச்சிக்கு அட்வைஸ்

 

 

தங்கச்சியவாடா தப்பா பேசறே... (கீழே கெடக்கறது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!!)

 

 

டச்சிங் க்ளைமேக்ஸ்..

 

 

கண்ணீர்

 

பிரிவு

 

 

சேர்க்கை, மகிழ்ச்சி!!

 

பெருமை

 

இன்ஞினியர் சார் எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.. இருந்தாலும் என் தங்கச்சிக்காக..

 

 


எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு சீன்ஸ்..

உண்மையில் இந்த பதிவ எழுத ஆரம்பிக்கும் போது தலைவர் பிறந்த நாள் இன்னும் ஐஞ்சாறு நாள்ல வரது ஞாபகம் இல்ல.. இப்ப இது தலைவருக்கும், அவரோட ரசிகர்களுக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு..

வித்தியாசமான பிறந்தநாள் பரிசை நம் ரசிகர்களுக்கு தந்தமைக்காக நமது சேலம் வசந்திற்கு நமது பாராட்டுகள்.

சேலம் வசந்தின் ப்ளாக் முகவரி : http://salemvasanth.blogspot.com  






 
0 Comment(s)Views: 1217

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information