Related Articles
மகள் திருமணம் : சூப்பர் ஸ்டார் ரஜினி அழைப்பு விடுத்த வி.ஐ.பி.க்கள்
திரைப்பட நகர அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி
திருவிழா ரேஞ்சுக்கு எந்திரன் இசை வெளியீட்டை கொண்டாடிய ரசிகர்கள்
Hindi Robo audio launch
Endhiran (Robot) audio release in Telugu
மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டு விழா
ஆஷ்ரம் பள்ளியின் 19வது ஆண்டு விழா - சூப்பர் ஸ்டார் ரஜினியின் உரை
நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், பாலாபிஷேகம் என தூள் கிளப்பிய சைதை ரஜினி ரசிகர் நற்பணி விழா!
முள்ளும் மலரும் வந்து 31 வருசம் ஆகுது ...
உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் - கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
80 களில் நடித்த நண்பர்களின் சந்திப்பில் இரண்டாம் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி
(Tuesday, 31st August 2010)

80 களில் ஒன்றாக நடித்த பிரபல நடிகர்களில் சந்திப்பு நிகழ்ச்சி சென்ற ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷனின் சென்னை வீட்டில் நடைபெற்றது. லிஸ்ஸி பிரியதர்ஷன் & சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இதற்க்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆண்டும், இதே போல சந்திப்பு ஒன்று ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு புது வரவாக, அர்ஜூன், சிரஞ்சீவி, சரத்குமார், மோகன்லால், ரம்யா க்ரிஷ்ணன், குஷ்பூ ஆகியோர் இடம்பெற்றனர்.

இது பற்றி இன்றைய ஹிந்து நாளிதழில் வெளியாகியுள்ள பக்கத்தை அப்படியே ஸ்கேன் செய்து தந்திருக்கிறேன்.

 

Tamil Translation

எவர்க்ரீன் 80௦ -  பசுமை நிறைந்த நினைவுகளே

தமிழ் திரைப்பட வரலாற்றில் நடிப்பு, இயக்கம், இசை என்று அனைத்து விஷயங்களும் கை கோர்த்து சாதனை படைத்த நிகழ்வுகளில் மைல் கல்லாக அமைந்தது 1980களின் காலகட்டம். அப்போது தென்னிந்திய திரைப்பட உலகையே ஆட்டிப்படைத்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றுமையுடனும், சகோதரத்துடனும் இணைந்து உருவாக்கி உள்ள அமைப்பு “எவர்கீரின் ’80” .
இந்த அமைப்பில் உள்ள நடிகர், நடிகைகள் ஆகஸ்ட் 29 ந் தேதியன்று சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டைரக்டர் பிரியதர்ஷன் லிசி தம்பதிகளின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இதற்கான விழா ஏற்பாட்டினை சுஹாசினி மணிரத்தினம் பொறுப்பேற்று நடத்தினார்.  நிகழ்ச்சியினை லிசி பிரியதர்ஷன் தொகுத்து வழங்கினார்.
இரண்டாம் ஆண்டாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சுஹாசினி தெரிவித்தார்….. இந்த இனிய விழாவின் ட்ரெஸ் கோட் (அ) தீம் கருப்பு, பச்சை என முடிவு செய்யப்பட்டு நாங்கள் அனைவரும் அதே நிறத்தில் உடை உடுத்தியுள்ளோம் என்று கூறினார்…. மேலும், அடுத்த வருடம் இந்த சந்திப்பை யார் நடத்துவது என்பதில் பெரிய போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்….

தென்னிந்தியாவின் நான்கு மாநிலத்தின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், மோகன்லால், அம்பரீஷ் மற்றும் வெங்கடேஷ் ஒருங்கே கூடியிருந்ததில் அந்த விழா நடக்கும் இடமே களைகட்டி காணப்பட்டது…. கமலஹாசன் டூரில் இருப்பதாலும், மம்மூட்டி ரம்ஜான் நோன்பு இருப்பதாலும் பங்கு பெறவில்லை என்று நிகழ்ச்சி அமைப்பாளர் தெரிவித்தார்…கடந்த ஆண்டு நடந்த முதல் விழாவில் கலந்து கொண்ட ரஜினி இந்த ஆண்டும் வருகை தந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். சிரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன்லால், சரத்குமார், அர்ஜூன் மற்றும் குஷ்பு போன வருடம் கலந்து கொள்ளவில்லை… ஆனால், இந்த வருடம் முதன் முறையாக கலந்து கொண்டனர்.
எவர்கிரீன் ‘80ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் இணைந்துள்ளனர். இந்த நட்பின் மகிழ்ச்சியை கொண்டாடிய நடிகர்கள் : ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், அர்ஜூன், பிரபு, கார்த்திக், மோகன், சுரேஷ், சுமன், நரேஷ், பிரதாப் போத்தன், பானுசந்தர், முகேஷ் சங்கர், அம்ரீஷ்.
நடிகைகள் : நதியா, ஷோபனா, ராதிகா, அம்பிகா, ராதா, லிஸி ப்ரியதர்ஷன், குஷ்பூ, சுஹாசினி, பூர்ணிமா பாக்கியராஜ், ரம்யாகிருஷ்ணன், சுமலதா ஆகியோர்.

ஒரு மிகப்பெரிய போஸ்டர் தயாரிக்கப்பட்டு, அதில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் தங்கள் ஆட்டோகிராஃப் இட்டனர்…. ஆடியோ, வீடியோ ப்ரசண்டேஷன், இசை, நடனம், நாட்டியம், விளையாட்டுகள் என்று அந்த இடமே திமிலோகப்பட்டது…..

நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், ராதா மற்றும் குஷ்பு ஆகியோர் நாயகன் படத்தின் “நிலா அது வானத்தின் மேலே” பாடலுக்கு நடனமாடினர்….  கூடவே மற்றவர்களும் இணைய, அங்கு ஒரே இசை கோலாகலம்தான்….

நீண்ட வருடங்களுக்கு பிறகு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக “மைக் மோகன்” தெரிவித்தார்….கூடவே, பணம், புகழ், வெற்றி, தோல்வி என அனைத்து விஷயங்களையும் கடந்தது தங்கள் நட்பு இணைப்பு என்றும் தெரிவித்தார்…

குஷ்பு பேசும்போது, இந்த சந்திப்பு மிகவும் அருமையான ஒன்று என்றும், இங்கு யாரும் நடிகர்களோ, நட்சத்திரங்களோ இல்லை…. பள்ளியில் படிக்கும் மழலையர்கள் போல என்றார்…. அதுவும், சூப்பர் ஸ்டார் சர்வ சாதாரணமாக தரையில் அமர்ந்து, எங்கள் எல்லோரையும் ரசித்த படி உள்ளார்….. இன்னும் சில தினங்களில் அவர் மகளின் திருமணம் இருந்த போதிலும், எங்களுக்காகவும் நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்….
மேலும் குஷ்பு பேசும் போது, நானும், வெங்கடேஷ் அவர்களும் 1986 ஆம் வருடம் “கலியுக பாண்டவலு” என்ற படத்தில் ஒன்றாக அறிமுகமானோம்…. அது தான் என் தென்னிந்திய திரையுலகின் அறிமுக வருடம்… இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது…. நினைத்தாலே புல்லரிக்கிறது என்றார்…..இவ்வளவு வருடங்கள் ஆனாலும், நாங்கள் இன்னமும் அதே ஒற்றுமை உணர்வுடன் இருக்கிறோம்… அதுவே எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார் குஷ்பு….

Translated by :RGopi


 
0 Comment(s)Views: 710

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information