Related Articles
சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!
கும்கி இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரையும் அது உணர்த்தும் பாடங்களும்!
2012 ஆம் ஆண்டில் ரஜினி கலந்து கொண்ட சில நிகழ்வுகள்
ரஜினியின் 62வது ரசிகர்களின் பிறந்த நாள் விழா! ரசிகர்கள் உற்சாகம்!!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் கோச்சடையான் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Superstar Rajinikanth fans offer prayers for Rajini his health recovery
ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் - முழு தொகுப்பு செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா திரைப்பட படப்பிடிப்பு இன்று தொடங்கியது
2011 ஆண்டு தலைவர் ரஜினி கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகள் தொகுப்புக்கள்
தலைவருக்கு என்.டி.டி.வி. சார்பாக ‘Entertainer of the Decade’ விருது

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர் ஸ்டாரை முதல்வரின் இருக்கைக்கு அடுத்து அமரச் சொன்ன புரோட்டோக்கால் அதிகாரி!
(Wednesday, 29th August 2012)

 

சற்று எக்ஸ்க்ளூசிவ்வான புதிய படங்களுடன் உங்களுக்கு பதிவை தர விரும்பியே சில நாட்கள் எடுத்துக்கொண்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்துகொள்ளப் போகிறார் என்று தகவல் கசிந்தவுடன் நிச்சயம் உண்மையாகத் தான் இருக்கும் என்று நமக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் 100% உறுதியாக தெரியாததால் அதை பற்றி நம் தளத்தில் எதுவும் சொல்லவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற அன்று காலை தான் அவர் வருவது கிட்டத்தட்ட உறுதியாக தெரியும்.

 

* சூப்பர் ஸ்டார் ரஜினி வருகிறார் என்பதால் நான் போக விரும்பியது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் திரையுலகின் இசை சாமாராஜ்ஜியத்தில் முடி சூடா மன்னர்களாக திகழ்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரு பெரும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுவதையும், அவர்கள் தலைமையில் இசைக்கச்சேரி நடப்பதையும் பார்க்க எவர் தான் விரும்ப மாட்டார்? அந்த ஆர்வமே நமக்கு இந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

* அழைப்பிதழ்கள் வந்து சேர்ந்தவுடன், நண்பர்களை அழைப்பது குறித்து ஒரு சிறிய தயக்கம் நிலவியது. இதற்காக எவரும் தங்கள் பணியை நிறுத்திவிட்டு வருவதை நான் விரும்பவில்லை. ஒரு சிலரை மட்டும் அழைத்தேன். காரணம் அவர்களின் பணியின் தன்மை எனக்கு தெரியும். அப்போது கூட தலைவர் வருகிறார் என்று சொல்லி அழைக்கவில்லை. (அதை சொன்னாத் தான் என்ன வேலையில இருந்தாலும், ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருந்தாலும் ஓடி வந்துடுவாங்களே நம்மாளுங்க!) ஒரு வழியாக முன்னரே நம்மிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்த மற்றும் வர முடிந்த நண்பர்களுடன் நிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.

* முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழா என்பதால் அழைப்பிதழில் “பாதுகாப்பு காரணங்களுக்காக 4.00 மணிக்கே இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

* ஆனால் நான் அலுவலகத்தில் பர்மிஷன் போட்டுவிட்டு கிளம்பவே 3.45 மணியாகிவிட்டது. நண்பர்கள் முன்னரே சென்று எனக்கு இடம் ரிசர்வ் செய்துவிட்டார்கள். (நண்பர்களை மதியமே அழைத்து அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டேன்.) “ஜி… எங்கே இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. இங்கே செமை கூட்டமா இருக்கு” என்று எனக்கு கால் செய்து என் பல்ஸை ஏற்றிக்கொண்டிருந்தனர். டிராஃபிக்கில் நீந்தி ஒரு வழியாக நேரு ஸ்டேடியம் செல்ல 4.30 pm ஆகிவிட்டது.

* இந்த மாதிரி பங்க்ஷனுக்கு டூ-வீலர்ல வர்றது ஒரு பெரிய தண்டனைங்க. பார்க்கிங் ஆல்ரெடி ஃபுல். பைக்கை பார்க் செய்ய இடமே கிடைக்கலை.  எப்படியோ கிடைத்த கேப்பில் வண்டியை சொருகி பார்க் செய்துவிட்டு ஓடினேன்.

* எந்தெந்த கலர் அழைப்பிதழ் எந்தெந்த வழியே செல்லவேண்டும் என்று தெளிவாக போர்டு வைத்திருந்தார்கள். நான் வைத்திருந்த அழைப்பிதழுக்கு 2 ஆம் எண் கேட் வழியே செல்லவேண்டும் என்று தெரிந்து, கேட் நம்பர் 2 நோக்கி ஓடினேன். அங்கே போனா, உள்ளே போறதுக்கு மைல் நீளத்துக்கு கியூ. முதல்வர் கலந்துகொள்ளும் விழா என்பதால், மெட்டல் டிடக்டர் ஃபிரேம் வழியே ஒவ்வொருவராக செல்லவேண்டும். சுமார் பத்து நிமடத்திற்கு மேல் பொறுமையாக காத்திருந்து ஒவ்வொருவராக செக்கிங் முடிந்து உள்ளே போய்க்கொண்டிருக்கிறார்கள்.

* பாஸ் கிடைக்காத பலர் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தனர்.

* ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். ரஜினி அவர்கள் வருவதோ அல்லது கமல் அவர்கள் வருவதோ கடைசி வரை பகிரங்கப்படுத்தப் படவில்லை. எனவே இந்த மேற்படி டிமாண்ட் அனைத்தும் எம்.எஸ்.வி. மற்றும் ராமாநாதன் அவர்களின் இசைக்கு கிடைத்த மகத்துவமே அல்லாது வேறு ஒன்றுமில்லை. முதல்வர் கலந்துகொள்வதால் கூட கூட்டமிருக்கலாம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். அ.தி.மு.க. கரைவேட்டி காட்டிய கட்சிக்கார்களை இங்கே பெரும்பாலும் பார்க்கமுடியவில்லை.

* எம்.எஸ்.வி. அவர்கள் கௌரவிக்கப்படுவதை பார்க்க விரும்பியே பலர் வந்திருந்தனர். திரையுலகினர் அனைவரையும் வரவழைத்ததும் அவர்களது அன்பும் இசை ஆளுமையுமே அன்றி ஆளுங்கட்சி அல்ல.

* இந்த நிகழ்ச்சியை எப்பாடு பட்டாவது ஹிட்டாக்கியே தீரவேண்டும் என்றெல்லாம் ஜெயா டி.வி.யோ அல்லது அரசோ எந்த விதத்திலும் தங்களது பலத்தை பிரயோகிக்கவில்லை என்பது எனது கருத்து. இயல்பாகவே நிகழ்ச்சி சிறப்பாக அமைந்துவிட்டது.

 

* தனது 14 வது ஆண்டுவிழாவை கொண்டாட விரும்பிய இந்த சேனல், அதனுடன் திரு.எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி ஆகியோரை கௌரவிக்க முன்வந்து அவர்களுக்கு பதக்கமும், பாராட்டும், பணமும், காரும் அளித்து சிறப்பித்தது, உண்மையில் மிக மிக பெரிய விஷயம். பாராட்டத்தக்க ஒரு முடிவு. போற்றத்தக்க ஒரு சாதனை. அதற்காக அவர்களுக்கு நாம் இசை ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

* நாம் எத்தனையோ விழாக்களில் இதுவரை கலந்துகொண்டிருக்கிறேன். இப்படி ஒரு பாதுகாப்பு கெடுபிடியை பார்த்ததில்லை. மொத்தம் மூன்றடுக்கு செக்கிங். முதல் அடுக்கில், நான் தோளில் பை மாட்டியிருந்ததால் மேற்கொண்டு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எப்படியோ பேசி உள்ளே சென்றால், அதற்கு அடுத்த அடுக்கில் நிறுத்திவிட்டார்கள்.

* வாட்டர் பாட்டில்கள், பைகள் என எதையும் உள்ளே விடவில்லை போலீசார். உள்ளே தண்ணீர் விற்கப்படுகிறது என்று சமாதானம் சொல்லி அவற்றை பறிமுதல் செய்தனர் போலீசார்.

* மேற்படி சோதனையில் தப்பியது மொபைல் ஃபோன்கள்  மட்டுமே (அத்தியாவசியமாகிவிட்டதால்). மற்றபடி காமிரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் உள்ளே அனுமதிக்கவில்லை போலீசார். விலை உயர்ந்த காமிரா கொண்டுவந்திருந்த பலர் அதை எங்கே வைத்துவிட்டு செல்வது யாரிடம் கொடுத்துவிட்டு செல்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

* பேக்கை இங்கே வைத்துவிட்டு போகமுடியாது என்றவர்களிடம் பைகளில் உள்ளவற்றையெல்லாம் வெளியே கொட்டுங்கள் என்று சொல்லி ஒரு ஹேர்ப்பின்னை கூட உள்ளே விடாது பறிமுதல் செய்தனர்.

 

* போலீசாரின் கெடுபிடியில் கடுப்பான ஒருவர் தனது ஷூவை எல்லாம் கழற்றி காண்பித்தது தனிக்கதை.

* இந்த கெடுபிடி கூட இல்லை என்றால், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்?

* என்னை செக் செய்த போது, நான் எனது பாக்கெட்டில் வைத்திருந்த USB CARD READER ஐ வெளியே எடுக்கச் சொன்ன போலீசார், அது என்ன? எதற்கு?  என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துவிட்டனர். அதை ‘காதலன்’ படத்தில் உருட்டிவிடப்படும் எலுமிச்சம்பழத்தை செக் செய்வது போல தீவிரமாக பல கோணங்களில் செக் செய்தே என்னுடன் எடுத்து செல்ல அனுமதித்தனர்.

* இங்கே செக்கிங்கிலேயே கால் மணி நேரம் சென்றுவிட…. உள்ளே நிகழ்ச்சிகள் துவங்கி நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவர் உள்ளே வரும்போது அந்த சூழ்நிலையை நோட் செய்யவேண்டுமே அது மிஸ்ஸாகிவிடக்கூடாதே என்று இங்கே வரிசையில் காத்திருந்த எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டுவிட்டது.

* இடையிடையே, உள்ளேயிருந்த நண்பர்கள் “சார் சீக்கிரம் வாங்க… சார் சீக்கிரம் வாங்க” என்று கூறி என் பல்ஸை ஏற்றிய வண்ணமிருந்தனர்.

* ஒரு வழியாக செக்கிங் முடித்துவிட்டு உள்ளே ஓடினேன். ஏதோ எவரஸ்ட் மலையை ஏறிட்ட திருப்திங்க.

* உள்ளே நண்பர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் போய் உட்கார்ந்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். மணி சரியாக அப்போது 4.55 pm.

* வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். வி.வி.ஐ.பி.க்கள் மட்டும் மேடையில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்தார்கள்.

* சரியாக 5.00 மணி இருக்கும். ஆடிட்டோரியமே ஒரு திடீர் பரபரப்பில் மூழ்கியது. ஒரு கூச்சல், விசில், கைத்தட்டல்… புரிந்துவிட்டது… சூப்பர் ஸ்டார் வருகிறார் என்று. நமது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அவருக்கு ஒரு STANDING OVATION கொடுத்தோம். ஆடியன்ஸ், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. என அனைவரும் எழுந்து நின்றுவிட்டார்கள். அடுத்த சில வினாடிகளில் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்றுவிட்டிருந்ததது.

* மேடையில் எரிய சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் தனது டிரேட் மார்க் ஸ்டைலில் வணக்கம் கூறிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார்.

* இருக்கையில் அமர்ந்தவர் கமலுடன் அடிக்கடி ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்.

* தனக்கு பின்னால் இருந்த ஏ.கே.47 வைத்திருந்த செக்யூரிட்டி ஆபீசரிடம் அடிக்கடி எதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

* ஒரு பத்து நிமிடங்கள் போயிருக்கும். வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் வந்துவிட்டார். அவர் வரும்போது அரங்கமே அதிர்ந்தது.

* முதல்வர் நேராக மேடையேறினார். மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

* மேடையில் அமர்ந்திருந்த அனைவரிடமும் சென்று ஒவ்வொருவராக வணக்கம் தெரிவித்து வரவேற்றார் முதல்வர்.

* பின்னர் இருக்கையில் அமர்ந்தார்.

* அடுத்தல் சில நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கியது.

* நடிவர் விஜய் ஆதிராஜும் பாடகி சின்மயி இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தேவையற்ற புகழுரைகள் எதுவும் இல்லாது இவர்கள் தொகுப்பு மிகவும் நீட்டாக இருந்தது. குறிப்பாக் சின்மயி வழங்கிய தொகுப்புரை அனைத்தும் சூப்பர். ஷார்ட் & சுவீட்.

* முதலில் பேசியது இசைஞானி இளையராஜா. அடுத்து ஏ.வி.எம்.சரவணன். அடுத்து கே.பி., அடுத்து கமல்.

* முதல்வரை போற்றி கூறப்படும் துதி பாடல்கள் இந்த விழாவில் அறவே இல்லை.’

* எவரும் முதல்வரிடம் திரையுலகிர்க்காக கோரிக்கைகள் எதையும் வைக்கவில்லை.

* முதல்வரின் உரைகளில் ‘நான்’, ‘எனது’ என்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றது.

* அ.தி.மு.க. கட்சி சார்புடைய பேச்சாளர்கள் எவரும் பேச அனுமதிகப்படவில்லை.

* “இப்போது சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை பேசவருமாறு அழைக்கிறேன்” என்று கூறி சின்மயி அழைத்தார்.

* சூப்பர் ஸ்டார் என்று பெயரை குறிப்பிட்டது தான் தாமதம்…. விசில் சத்தத்தாலும் கைத்தட்டல்களாலும் அரங்கமே அதிர, அதற்கு பிறகு சின்மயி சொன்னது எதுவும் காதில் விழவில்லை.

* தன் பெயரைக் கேட்டது ஒரு டீன் ஏஜ் இளைஞனின் துள்ளலை போல விறுவிறுவென விரைந்தார் சூப்பர் ஸ்டார். சென்றவர் திரும்ப அதே வேகத்தில் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

* என்னடாவென்று பார்த்தால் “ஜெயா டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் அவர்கள் திரு.ரஜினிகாந்துக்கு தற்போது ஒரு நினைவுப் பரிசை வழங்குவார்” என்று சின்மயி கூற, அதை பெறுவதற்கு தான் ரஜினி தன் இருக்கைக்கு திரும்பினார் என்று தெரிந்துகொண்டோம். சில வினாடிகளில் கே.ஆர்.ராவ் ஒரு நினைவுப் பரிசை ரஜினிக்கு வழங்க, அதை பலத்த கைதட்டல்களுக்கிடையே வாங்கிய சூப்பர் ஸ்டார் தனது இருக்கையில் வைத்துவிட்டு மைக்கை நோக்கி சென்றார்.

* இத்துனையும் நடந்துகொண்டிருக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் கூட விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

* தலைவர் மைக்கை பிடித்தவுடன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவர் பேராக சொல்லி முடித்து, என்னை வாழவைத்த வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே என்று கூறியது தான் தாமதம் அரங்கில் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அடங்க நேரம் பிடித்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் மேலும் அதற்கு இடம் கொடுக்காமல் தனது உரையை உடனே தொடங்கிவிட்டார்.

* சூப்பர் ஸ்டாரின் உரையை அனைவரும் உன்னிப்பாக கேட்டுகொண்டே இருந்தனர். இடையிடையே அவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவர், புரத்சித் தலைவி என்ற பதத்தை பயன்படுத்தும்போதெல்லாம் கைத்தட்டல்கள் காதை கிழித்தன.

* கலைஞர் பெயரை அவர் குறிப்பிட்டபோது ஒரு வகையான நிசப்தம் நிலவியது.

* முதல்வர் முகம் சற்று இறுகிப் போனதை கவனிக்க முடிந்தது.

* ஒட்டுமொத்த அரங்கமும் சூப்பர் ஸ்டாரின் பேச்சை கேட்க ஆவலாக இருந்தது அனைவரின் முகபாவங்களை வைத்ஹே உணர முடிந்தது. முதல்வர் மிக மிக உன்னிப்பாக கேட்டார்.

* சோ அவர்களை முதல்வர் முன்னிலையில் ரஜினி போட்டுகொடுத்ததும் மோதட ஆடிட்டோரியமும் சிரிப்பில் மூழ்கியது. சோவோ தலையில் கைவைத்துக்கொண்டார்.

* அதற்கடுத்து பேசிய முதல்வர், அனைவரையும் வரவேற்று தனது உரையை துவக்கினார். நடிகர்கள் திரு.ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று தான் குறிப்பிட்டார். எவரையும் சூப்பர் ஸ்டார் என்றோ கலைஞானி என்றோ அவர்களின் சிறப்பு பெயரை கூறி அழைக்கவில்லை.

* முதல்வர் பேசிய பிறகு எம்.எஸ்.வி. அவர்கள் பேசினார். ஆனால் அவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

* தொடர்பது மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

* மெல்லிசை நடைபெறும்போதே இடையில் சிவகுமார் அவர்கள் பேச அழைக்கப்பட்டார். இவர் ரொம்ப பேசுவாரே என்று பயந்தோம். ஆனால சுருக்கமாக முடித்துக்கொண்டார் சிவா.

* தண்ணீ பாட்டில்கள் முதல் அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்பட்டுவிட்டதால் குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். வளாகத்தில் இலவசமாக வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை போய் வாங்கிவருவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

* காபி, டீ, சமோசா, பாப்கார்ன் போன்றவை உள்ளே கிடைத்தன. நியாயமான விலையில் என்பது தான் ஆச்சரியம்.

* மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் மேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

* ரஜினி அவர்கள் கீழே வந்ததும், (இசைஞானிக்கு பக்கத்தில்) இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். உடனே புரோட்டோகால் அதிகாரி பதறியடித்து ஓடிவாந்தார். “சார் நீங்க அங்கே உட்காருங்க” என்று முதல்வரின் இருக்கைக்கு அருகே உட்காரச் சொன்னார். இதையடுத்து, முதல்வரின் செருக்கு அருகே அமர்ந்தார் ரஜினி. அப்போது முதல்வர் தன் இருக்கையில் இல்லை.

* முதல்வர் சிறிது நேரத்தில் வந்து அமர்ந்ததும் நிகழ்ச்சி துவங்கியது.

* முதல்வர் தேர்வு செய்த பாடல்களில் இருந்து பாடல்கள் இசைக்கப்பட்டன.

* முதலில் கிருஷ்ண கானத்தில் வரும் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாடல் இசைக்கப்பட்டது. (காலத்தால் அழியாத அற்புத பாடல் இது!)

* இடையிடையே முதல்வரும் ரஜினியும் அடிக்கடி பேசிக்கொண்டேயிருந்தனர்.

* இளைய திலகம் பிரபு, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் முதல்வர் மற்றும் சூப்பர் ஸ்டாரை நோக்கி வந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்துவிட்டு சென்றனர்.

* முதல்வரிடம் தங்கள் வணக்கத்தை வந்து தெரிவித்தவர்கள் அனைவரும் மறக்காது சூப்பர் ஸ்டாருக்கும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்.

* ஃபோட்டோக்ராபர்கள் இதை மின்னல் போல படமெடுத்து தள்ளினர். இருவர் முன்பும் ப்ளாஷ் மழை மின்னியது, கும்மிருட்டில் மின்னல் வெட்டியது போல இருந்தது.

* தொடர்ந்து இந்த அற்புத காட்சியை (முதல்வர் + ரஜினி) சுட்டுக்கொண்டேயிருக்கலாம் என்று சில ஃபோட்டோக்ராபர்கள் அவர்களுக்கு முன்னால் சிறிது தூரம் தள்ளி தரையில் அமர்ந்தேவிட்டனர். அமர்ந்துகொண்டு அவர்கள் பாட்டுக்கு  படமெடுத்துக் கொண்டிருந்தனர்.

* முதல்வர் மற்றும் ரஜினி அவர்களுக்கு முன்னாள் ஒரு பெரிய எல்.சி.டி. டி.வி. வைக்கப்பட்டிருந்தது. அதில் தான் இருவரும் நிகழ்ச்சியை பார்த்தனர். அதில் மேடை நிகழ்வுகள் குளோசப்பில் காட்டப்பட்டுவந்தது.

* ‘அன்பே வா’ படத்திலிருந்து ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடல் இசைக்கப்பட்டபோது, சூப்பர் ஸ்டாரையும் முதல்வரையும் குளோசப்பில் காட்டினார்கள். அரங்கம் ஒரு கணம் கரகோஷத்தால் அதிர்ந்தது.

* மேடையின் பேக்ரவுண்டில் இருந்த திரையில் அந்தந்த பாடல்களின் காட்சிகள் பாடலின் கூடவே காட்டப்பட்டது. ஆகையால் ஒரு லைவ் பீலிங் கிடைத்தது.

* ஐந்தாறு பாடல்களை ரசித்த முதல்வர் அதற்கு பிறகு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிச் சென்றுவிட, முதல்வர் சென்றதும், ரஜினி எழுந்து போய், சற்று தள்ளி அமர்ந்திருந்த இசைஞானி அருகே அமர்ந்துகொண்டார்.

* இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டேயிருந்தனர். ரஜினி ஏதோ கேட்பதும் ராஜா அதற்கு பதில் சொல்வதும் இருந்தது.

* முதல்வர் சென்றதால் சற்று சுதந்திரமாக உணர்ந்த ஃபோட்டோக்ராபர்கள் ராஜாவும் ரஜினியும் பேசிக்கொண்டிருந்த அற்புத காட்சியை க்ளிக்கிகொண்டே இருந்தனர். மற்றவர்கள் எவரும் கண்டுக்கொள்ளப்படவில்லை.

* ஒரு கட்டத்திற்கு மேல், நிறைய பேர் ஒவ்வொருவராக வந்து ரஜினிக்கும் ராஜாவுக்கும் கைகுலுக்கி சென்றவண்ணமிருந்தனர்.

* இருவருக்கும் பின்னே நின்றுகொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது அதிகரித்த்தது.

* ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டம் தாங்கமுடியாத அளவிற்கு போனது. (இவர்களில் பெரும்பாலானோர் விழாக் குழுவை  சேர்ந்தவர்கள் தான்).

* உடனே ராஜா அங்கிருந்து கிளம்பிவிட்டார். ரஜினி தனியே மாட்டிக்கொண்டார்.

* நிறைய பேர் கைகுலுக்குவதும், ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுமாக இருந்தனர். எனவே ரஜினியும் உடனே கிளம்பிவிட்டார். மணி அப்போது 7.30 இருக்கும்.

* நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தில் இருந்ததால் அடுத்த சிறிது நேரத்தில் அரங்கம் காலியாகத் துவங்கியது.

* வெளியே வந்த இளையராஜா சூப்பர் ஸ்டாரின் இன்னோவாவில் ஏறிக்கொள்ள, இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்றனர். (சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு அவரது அழைப்பின் பேரில் இளையராஜா சென்றதாக தெரிகிறது.)

* முன்னதாக இளையராஜாவும் ரஜினி அவர்களும் ஒரே காரில் ஏறுவதை பார்த்த ரசிகர்கள் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* குத்தாட்டம், அருவருப்பான டான்ஸ் போன்றவை இல்லாது, மிக மிக நாகரிகமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

* மற்ற சானல்களும் தங்களது ஆண்டுவிழாவையோ அல்லது வேறு ஏதேனும் விழாவையோ இது போன்று பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டாடும்போதும், இது போன்ற இசைத் துறை சாதனையாளர்களை கௌரவிக்கவேண்டும். அவர்களது வாட்டத்தை போக்கவேண்டும். தமிழ் திரையுலகில் இது போன்ற கவனிக்கப்படாத சாதனையாளர்களும் அவர்களது வாரிசுகளும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

(சூப்பர் ஸ்டார் அப்படிப் பேச காரணம், மற்றும் அவரின் பேச்சு ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு, AFTER EFFECTS உள்ளிட்ட விஷயங்கள் அடுத்த பதிவில். கூடுதல் படங்களுடன்!)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 






 
0 Comment(s)Views: 1093

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information