Related Articles
Lingaa First Day First Show at Malaysia
Lingaa movie is very touchy that left her in tears - Raai Laxmi
Lingaa is all-time 2nd highest grossing Tamil film in the US
நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்
Rajini-Starrer Becomes Highest 3-Day Grosser of 2014 in Chennai
Superstar Rajinikanth storm into 100 Crore Club within 3 days
Rajinikanth-Starrer Creates New Record Worldwide
Roaring Lingaa celebration by Rajinikanth fans in California
Maharaja Rajinikanth as Raja Lingeswaran
Lingaa earns more than the latest Hunger Games movie at U.S. box office

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
KS Ravikumar opens up about Lingaa climax criticism
(Thursday, 18th December 2014)

சென்னை: ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை கேள்வியே கேட்காமல் பார்ப்பவர்கள், ரஜினி படத்தில் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார்கள். எனக்கு ரஜினிதான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லாமே, என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

லிங்கா படத்தில் இடம்பெறும் க்ளைமாக்ஸ் பலூன் சண்டைக் காட்சி குறித்து சிலர் விமர்சனங்கள் எழுப்பியதற்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நேற்று பதிலளித்தார்.

அவர் கூறுகையில், “அந்த காலத்திலிருந்தே குறை சொல்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பதினாறு வயதினிலே பிடிக்காதவர்கள் இருந்திருக்கிறார்கள், அரங்கேற்றம் பிடிக்காதவர்கள் இருந்தார்கள். அவ்வளவு ஏன், முத்து, படையப்பாவையும்தான் குறை சொன்னது ஒரு கூட்டம். அந்த குரூப் எப்பயும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்தப் படத்தில் பலூன் சண்டை ஏன்னு கேட்கிறாங்க.. பலூன் பைட் வைக்காம வேற எந்த பைட் வச்சா ரசிப்பே… ஏற்கெனவே இதே படத்துல ராஜா லிங்கேஸ்வரன் ட்ரைன் பைட் பண்ற காட்சி வச்சாச்சி. சரி, இந்த கேரக்டருக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சோம். நான் என்ன சொல்றேன்னா.. அந்த பலூன் சண்டைக்கு முன்னாடியே படம் முடிஞ்சி போச்சி. தாத்தாவோட பெருமையைக் கேட்டு பேரன் திருந்தி ஊரைவிட்டு கிளம்பும் போதே கதை முடிஞ்சிடுச்சி. ஆனா ரஜினி சாரோட ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு ஆக்ஷன் வைக்கணுமேன்னு அந்தக் காட்சி வச்சோம்.

ஏன் இதை நாங்க பண்ணா ரசிக்க மாட்டேங்கிற, ஸ்பைடர்மேன் பண்ணா குறை சொல்லாம பாக்கறீங்க. நான் கேக்கிறேன், ஸ்பைடர்மேனும் மனுசன்தானே.. அவன் மட்டும் என்ன தெய்வப் பிறவியா? அவன் மட்டும் எங்கிருந்தோ வந்து விழறான், க்ளாப்ஸ் பண்றீங்க.. ஏன்? அவன் கிராபிக்ஸுக்கே 1500 கோடி செலவழிக்கிறான். நமக்கு பணம் பத்தாது. ரூ 100 கோடிதான் செலவு பண்ண முடியும். அவனுக்கு உலக மார்க்கெட். நமக்கு தமிழ்நாடுதான். உலகளவில தமிழ் சினிமாவுக்கு மார்க்கெட் இருக்கலாம்.. ஆனா என்ன பர்சன்டேஜ்?  அதனால எனக்கு கொடுத்த பட்ஜெட்ல புதுசா ஏதாவது பைட் வைக்கணும்னு நினைச்சோம்.

இப்போ ரெண்டு சுமோ பறந்து போற மாதிரி எடுத்தா, இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே எடுப்பீங்கன்னு எழுதுவீங்க.. மோட்டர் போட், சேஸிங் எல்லாமே படங்களில் வந்தாச்சு. தினமும் டிவில இங்கிலீஷ் படம் பார்க்கறாங்க.. அதனால எதை எடுத்தாலும், அந்த அளவுக்கு இல்லன்னு ஈஸியா சொல்லிடுவாங்க. நம்ம இன்டஸ்ட்ரிக்கு புதுசா ஏதாவது வேணுமேன்னுதான் இந்த பைட் வச்சேன். இதையும் குறை சொன்னா வேற எந்த படத்தையுமே உங்களால பார்க்க முடியாது. ஒன்லி ஆர்ட் பிலிம்தான் பார்க்கணும்.. கமர்ஷியல் படம்னு பார்த்தா நிறைய முடியாத விஷயங்கள் இருக்கு.

எந்த பைட்ல அடிச்சா பறந்து பறந்து கீழே விழுந்து பவுன்சாகி எழுந்து வருவானா ஒருத்தன்.. அதை தியேட்டர்ல ரசிக்கறாங்களே.. அது மட்டும் நேச்சுரலானதா..? லிங்கா க்ளைமாக்ஸை நேச்சுரலா நீங்க ஃபீல் பண்ணனும்.. ஸ்பைடர்மேன் மாதிரின்னு பீல் பண்ணி பாருங்க. எனக்கு ரஜினிகாந்த் சூப்பர் மேன்தான். ஏன்னா அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு அவர் சூப்பர் மேன். ரோபோ மிஷின் பண்ணாதான் இதையெல்லாம் ஒத்துப்போம்.. லைவா ஒரு மனுஷன் பண்ணா ஒத்துக்க மாட்டேன்னா அது தப்பு. இது மாதிரி நிறைய இருக்கு.

ஸ்பைடர்மேன் மட்டுமில்ல, எக்ஸ்மேன், பேட்மேன் இவங்கள்லாம் என்ன தெய்வப் பிறவிகளா? பறந்து பறந்து என்ன வேணா பண்ணலாம். ஆனா அதை எங்க ரஜினிகாந்த் பண்ணக்கூடாதா? எல்லாம் பண்ணுவாரு.. உனக்கு இஷ்டம் இல்லையா.. பலூன் பைட்டுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிப் போச்சு.. எழுந்து கிளம்புன்றேன் நான்! யாருக்குப் பிடிக்குதோ அவங்க பாக்கட்டும். குழந்தைங்கள்லாம் விசிலடிச்சு பார்க்கறாங்க அந்த சீனை. பெரியவங்க கைத்தட்டி ரசிக்கிறாங்க. அவங்களுக்குதானே நான் படம் எடுக்கணும். கிரிட்டிக்ஸ் எப்பவுமே எதையாவது குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. அது அவங்க வேலை. அவங்களுக்கு பதில் சொல்லும்போதுதான் பல விஷயங்கள் மக்களுக்கு தெரியும். இதே கிரிட்டிக்ஸ் ஆறு மாசத்துக்குப் பிறகு இதைப்பத்தி பேச மாட்டாங்க. லிங்கா டிவில வரும்போது ஆஹா அருமையா இருந்தது.. என்னா கேரக்டர்ன்னு சொல்வாங்க…”

-என்வழி






 
4 Comment(s)Views: 503

Mahalingam Srinivasan,Bangalore
Sunday, 21st December 2014 at 03:46:47

Excellent super sir, give always same punch to everyone,
Because I am seeing thalivar has god in my life and you are the peopele behind him,

As for Lord Raman how Anjenya helped, I am
viewing the same .....

vijay,india
Friday, 19th December 2014 at 11:06:54

excellent answer for the critics for the culprits who are jealous on our superstar..
priyankar,india
Friday, 19th December 2014 at 00:48:50

super interview by ks ravikumar xcellent
kumar.m,
Thursday, 18th December 2014 at 12:00:37

Super ans sir... Superstar gr8... Luv u

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information