 
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதி மக்களுக்காக தனது ராகவேந்திரா மண்டபத்தைத் திறந்து விட்டதோடு, அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் தமிழகத்தின் பல மாவடங்கள் பாதிக்கப்பட்டன. தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தரை தளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தங்க இடமில்லாமல் தவித்த இவர்களுக்கு பலரும் அடைக்கலம் கொடுத்து உதவினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் வெள்ளத்தில் வீடிழந்து தவித்த குடிசைவாசிகளுக்காக மண்டபத்தைத் திறந்த வைக்குமாறு உத்தரவிட்டார். மழை முடியும் வரை மூன்று தினங்கள் இவர்கள் அனைவரும் மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மழை வெள்ளம் வடிந்த பிறகு அனைவரும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குத் திரும்பினர்.
-என்வழி
|