Related Articles
கஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம்
4K version of Rajinikanth's 1995 superhit 'Muthu' to release in Japan
ரஜினியின் விளம்பரமா? அடையாளமா?
2.0 - ஏன் கொண்டாடணும்?
All about Superstar Rajinikanth's 2.0
கணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்
Rare Old Rajini Movie Audio Covers (LP Records)
பரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி
என்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்
அட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
2.O விற்கு ப்ரோமோஷன் இல்லையா?
(Saturday, 24th November 2018)

2010 ஆம் ஆண்டு. அப்போது நான் 12 ஆம் வகுப்பில் இருந்தேன். அது ஒரு Residential School வகை என்பதால் ஹாஸ்டல் வாழ்க்கை. வெளியில் எது நடக்கிறது என்பது கூட தெரியாது. நானும் எனது அம்மா மட்டும் பள்ளிக்கு அருகிலேயே வாடகை  வீட்டில் இருந்தாலும் அதுவும் கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் வாழ்க்கை தான். ஒரு தொலைகாட்சி கூட வீட்டில் இல்லை . (12th Std effect)


ஒரு ரஜினி படம் ரிலீஸ் ஆகிறது என்ற எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லை. சொல்லப்போனால் ரிலீஸ் ஆன அன்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பேசிக்கொண்ட போது தான் எனக்கு படம் வந்ததே தெரிந்தது.


அடுத்த நாள் காலையில் அனைத்து பத்திரிக்கையும் பார்த்து புரட்டி விமர்சனங்களை படித்து முழு கதையையும் அங்குலம் அங்குலமாக படித்து விட்டேன். அம்மாவிடம் மாலைக்காட்சி போகலாம் என்று சொன்னேன்.


இரண்டு  வருடமாக வெளியில் தெரியாமல் இருந்ததாலும், அது ரஜினி படம்  என்பதாலும் 12 ஆம் வகுப்பு Factor ஐயும் மீறி உடனடி சம்மதம் கிடைத்தது.


இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு என்றால்....


கடந்த சில வாரங்களாக நமது தலைவரின் ரசிகர்களை மிகவும் வருந்த செய்வது 2.O விற்கு போதுமான ப்ரோமோஷன் இல்லை என்பதே... அவற்றில் சில :


* சன் பிக்ச்சர்ஸ் ப்ரோமோஷன் வேற லெவெல்லில் இருந்தது, லைக்காவிற்கு அது தெரியவில்லை. 


* எந்திரன் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் அதன் தீம் மியூசிக் மனப்பாடம் ஆகும் வரை ப்ரோமோ போட்டார்கள்.  


* அடுத்த வாரம் ஒரு ரஜினி படம் வருகிறது என்றே பரபரப்பு இல்லை. 


* ஷங்கர் முக்கிய கதை கருவை ட்ரைலரில் சொல்லி விட்டார்...


எனக்கு எந்திரனுக்கு எப்படி ப்ரோமோஷன் செய்தார்கள் என்பது சத்தியமாக தெரியாது. வீட்டில் தொலைகாட்சி இல்லை. தியேட்டரில் ட்ரைலரை வெளியிட்டு அதை ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பதும் தெரியாது.


அவ்வளவு ஏன், படம் ரிலீஸ் ஆனதே அன்று காலை தான் தெரிந்தது. ( நீயெல்லாம் ரஜினி ரசிகனா என்று கேட்டு விடாதீர்கள், தமிழகத்தின் 12th Std ஜுரம் பற்றி நினைத்து பார்த்து என் மீது பரிதாபம் கொள்ளுங்கள் !!!)


ஆனால் படம் ரிலீஸ் ஆனா அடுத்த நாளே காலை முதல் மாலை வரை அனைத்து பத்திரிக்கையும் படித்து, லைன் பை லைன் கதையை அறிந்துக்கொண்டு தான் தியேட்டர் உள்ளே சென்றேன்.


பின்பு நான் அனுபவித்த பிரம்மாண்டம், உணர்ச்சி, பிரம்மிப்பு, மிரட்சி ஆகியவற்றை வெறும் வரியில் சொல்லி விட முடியாது.
அது ஒரு உணர்வு. உணர்ந்தவர்களுக்கு தான் புரியும். Black Sheep Mehhh என்று தலைவர் கூறும் போது அந்த 12 ஆம் வகுப்பு மாணவன் தன்னை மறந்து தலைவா என்று கூச்சலிட்டது, "என்னை யாராலும் அழிக்க முடியாது" என்று அவர் கூறிய போது அருகில் அம்மா இருப்பதையும் மறந்து விசில் அடித்தது எல்லாம் தலைவரின் மாயாஜாலம் மட்டுமே.


அதன் பிறகு 12 ஆம் வகுப்பையும் மறந்து தொடர்ந்து நான்கு ஞாயித்துக்கிழமை அம்மாவுடன் சென்றேன். அந்த பிரமாண்டத்திற்காக , அந்த வசீகரனுக்காக !!


மேலே கூறிய அனைத்தும் உண்மை சம்பவமே. இத்தனைக்கும் எந்திரன் வசூல் சாதனையெல்லாம் நான் பள்ளி படிப்பை முடித்த பின்பு தான் தெரிந்தது.


இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், ப்ரோமோஷனை பற்றி கவலையே படவில்லை நான். தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரியாத போதே, முழு கதையும் அறிந்த பின்பு பார்க்கும் போதே, 12 ஆம் வகுப்பில் இருக்கும் போதே, சாதாரண ஒரு சிறுவன் நானே படம் ரிலீஸ் ஆன பின்பு எழுந்த மக்களின் வாய்மொழி ப்ரோமோஷனில் 5 தடவை பார்த்தேன்.


இதற்கு தலைவரே கூறிவிட்டார். படம் பார்த்துட்டு மக்களே ப்ரோமோஷன் பண்ணுவாங்கனு . பிறகு நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். நிச்சயம் மக்கள் இதை பார்ப்பார்கள் ; ரசிப்பார்கள் ; வரவேற்ப்பார்கள் ; கொண்டாடுவார்கள்.


அதற்கு ஒரு சிறிய சாட்சி தான் வெளிநாடுகளில் தொடங்கியுள்ள புக்கிங். 4 நாட்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது .
ஏதோ சென்னை கோவை நிலை இல்லை. துபாய், கத்தார் , ஆஸ்திரேலியா , UK, அமெரிக்கா போன்ற நாடுகளில் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது.


பாகுபலி இரண்டாம் பாகத்தின் மொத்த தியேட்டர் எண்ணிக்கையை முந்தி உலகமெங்கும் 10,000 தியேட்டரில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை துவம்சம் செய்ய காத்து இருக்கிறது...


2.0 தமிழகத்தின் பெருமை இல்லை, இந்தியாவின் பெருமையும் இல்லை. சினிமாவின் பெருமை.
சினிமா எனும் கலைக்கு பெருமை.


அடுத்த வாரம் இந்த நாள், பாக்ஸ் ஆபிஸ் எந்த வகையில் சிக்கி சின்னாபின்னம் ஆகி உள்ளது என பாப்போம் !!


- விக்னேஷ் செல்வராஜ்.






 
1 Comment(s)Views: 483

Niwas,Chennai
Saturday, 24th November 2018 at 10:08:48

Ore aasai ennavendral endhiran 1 create panna bench mark 2.0 vum create pananum adhavadhu one decade unbreakable (only thalaivar did it again kabali) adhe maari 2.0 oru unbreakable bench mark pannanum panum

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information