Other Articles
கிருஷ்ணனும் அர்ஜுனனும் நுண்ணரசியலும்....
கலைஞானி கண்டு எடுத்த கலை உலக ராஜா
என் கஷ்டத்தை தெரிஞ்சி உதவி செஞ்ச ரஜினி - நடிகை விஜயலட்சுமி
படையப்பன் கற்பூரம் மாதிரி யார் கொளுத்தினாலும் ஜோதியை தருவான்!!!
Superstar Rajinikanth looks dashing in new Darbar stills
சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் தலைவர்
ரஜினியின் மறுபிறவி - என்னவெல்லாம் நடந்தது?
தண்ணீர் பஞ்சம் போக்குவதில் ரஜினியின் பங்கு என்ன?
ரஜினி மக்கள் மன்றத்தினர் பணிகள் மக்களுக்கும் கடவுளுக்கும் தெரியும் .. அது போதும்!
ஐந்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தலைவர் - வயித்தெரிச்சல் படாதீங்க பொறாமைக்காரர்களே!
சிவாஜி படம் : ஓர் அனுபவம் !!! - 12 Years of Shivaji : THE BOSS
Indian superstar Rajinikanth’s 2018 blockbuster “2.0” is set for a July 12 release across China, under the title “Bollywood Robot 2: Resurgence.”
மோடி பதவியேற்பு விழாவில் தலைவர் ரஜினிகாந்த்
`மோடி என்கிற தனிமனிதரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!' - ரஜினி
ரஜினி பிஜேபியின் B டீம்மா?
பாராளுமன்ற தேர்தல் உணர்த்தும் பாடம்
விகடனாரே! நீங்கள் மன்னிப்புக் கட்டுரை வெளியிடத் தயாரா?
க்யாரே! செட்டிங்கா??
கணவர் விசாகனின் கரம் பற்றிக் கொண்டு பேசுகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்
'படையப்பா' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த ஒரு ரீவைண்டு!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
44 வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது - A Nostalgia
(Saturday, 17th August 2019)

1975 ஆம் ஆண்டு. பொதுவாக இந்தியாவின் வரலாற்றை எழுதுவோர் அதை ஒரு கருப்பு ஆண்டாக குறிப்பிடுவார்கள். காரணம் இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு.

 

இந்த வருடத்தோடு 44 ஆண்டுகள் முடிந்து 45 ஆம் ஆண்டுவிழாவை நோக்கி நகர்கிறது !!

 

அப்போது தான் கிரிக்கெட்டில் முதல் உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்து இருந்தது. இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத காலம். சொல்லப்போனால் கபில் தேவ் இந்திய அணியிலேயே நுழையவில்லை (1978 இல் நுழைந்தார்), கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் அப்போது இரண்டு வயது குழந்தை !!! தோனி பிறக்கவே இல்லை  !!!

 

காலம் எவ்வளவு மாறிவிட்டது என இப்போது நினைக்கையில் பிரமிப்பாக உள்ளது.

 

இப்போது நமது வலைப்பக்கத்தில் உள்ள கிறுக்கல்களெல்லாம் சில நொடிகளிலேயே உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது. ஆனால் அப்போது மிகப்பெரும் செல்வந்தனாக இருந்தால் தான் உங்களால் ஒரு ட்ரங்க் கால் செய்ய முடியும் !!!  

 

அவசர செய்தி தொடர்புக்கு டெலெக்ராம் (தந்தி), செல்போன் எனும் ஒரு கருவி மூலம் அலைவரிசையில் பேசலாம் என சொல்லி இருந்தால் நம்மை கிறுக்கன் என சொல்லி இருப்பார்கள் !!!

 

காரணம் அப்போது தான் இந்தியா ஒரு செயற்கைக்கோளை செலுத்தி இருந்தது (அதுவும் ரஷ்யா மண்ணில் இருந்து). 

 

எம்.ஜி.ஆர் அப்போது தான் அரசியல் கட்சி துவங்கி இருந்தார் !!! நாளை நமதே , இதயக்கனி என 1975 இல் மட்டும் 4 படங்கள் !!! (இப்போதெல்லாம் அறிமுக நடிகர்களே வருடத்திற்கு ஒரு படம் தான் !!!)

 

கலர் படம் என்றால் என்னவென்றே தெரியாது. மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் ஈஸ்ட்மேன் கலர் !!

 

1975 - 80 காலகட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு 2,700 கோடி பட்ஜெட் இருந்தது. ஆனால் இப்போது 2018-19 க்கு மட்டும் 4 லட்சம் கோடி !!! 

 

1975 இல் இருந்து எவ்வளவு மாற்றங்கள் !!! அந்த எமர்ஜெண்சி சமயத்தில் மாற்றப்பட்ட பல விஷயங்களை 1978 ஆம் ஆண்டு 44ஆம் சட்ட திருத்த மசோதா மூலம் சரி செய்ய முனைந்தது அப்போதைய ஜனதா அரசு !!!

 

1975 எவ்வளவு முக்கியமோ அதே அளவு 1978 ம் முக்கியம். அடுத்த ஆண்டு (1979) அத்திவரதர் காஞ்சியில் எழுந்தருளுகிறார். (40 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது தரிசனம் தருகிறார்)

 

மாற்றத்திற்கான விதைகள் தூவப்பட்ட ஆண்டுகள் அவை !!!

சரி இப்போ இவன் இந்த ரெண்டு வருஷம் பத்தி பேசவேண்டிய அவசியம் என்னவென்று யோசிக்கிறீர்களா ?

 

முதல் வரியில் குறிப்பிட்டதைப்போல 1975 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டாக கூறுவார்கள். அதே ஆண்டு தான் ஒரு கருப்பு வைரத்தின் பிரவேசமும் நடந்தது !!!

 

 

ஆம், அதே கதவை திறக்கும் காட்சி தான் !!!

 

மீண்டும் முதலில் இருந்து படியுங்கள் !!! ரஜினி அறிமுகம் ஆன காலத்தில் இருந்து எவ்வளவு மாற்றங்கள் !!! ஆனால் மாறாதது ரஜினி மட்டுமே !!!

 

44 ஆண்டுகள் ஒருவர் திரைத்துறையில் சாதித்தார் என சொல்லி இருந்தால் வடிவேலு பாணியில் "ஆஹான்" என கடந்து போய் இருக்கலாம்.

 

ஆனால் இத்தனை மாற்றங்களையும் சந்தித்து அதனூடே பயணித்து அந்த அனைத்து காலகட்டத்திலும் தன்னை சக்கரவர்த்தியாக நிலைநிறுத்திக்கொண்ட ஆளுமையை என்னவென்று வியக்க !!!

 

சரி 1978 இல் மாற்றத்திற்கான விதை என்று கூறினேனே ??

 

ஆம், அதே வருடம் தான் ரஜினி சூப்பர்ஸ்டார் எனும் பட்டத்திற்கு அதிபதியானார் !!!

 

சரி ஒரு குட்டிக் கற்பனை !!!

 

1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு போய்விட்டார் என வைத்துக்கொள்வோம் !!! அவர் இப்போது சுயநினைவுக்கு வருகிறார் என்றால் என்னவெல்லாம் கேட்பார் என ஒரு சின்ன கற்பனை !!!

 

* யாருப்பா இப்போ முதலமைச்சர் ?

 

* என்னது ஜெயலலிதா அதிமுக ல உறுப்பினரா ?

 

* அது என்னப்பா பாஜக ன்னு புது கட்சி பெயரை சொல்லுற ?

 

* கையில என்ன வெச்சி இருக்க ? செல்போனா ... அப்படின்னா ?

 

* என்னப்பா டிவி ல எல்லாமே கலர் படமா இருக்கு !!

 

* 3 டி டீவியா , அப்படின்னா என்ன ? முதல்ல 3 டி ன்னா என்னப்பா ?

 

* என்னயா பாட்டு ஓடுது, அப்போ இளையராஜான்னு ஒரு புது பையன் வந்தான் , அநேகமா பெரிய ஆளா வந்து இருப்பான் !!!

 

* யாருப்பா எ.ஆர்.ரகுமான் ? இந்தியாவுக்கு ஆஸ்கார் வந்து இருக்காமே ?

 

* கலைஞர் பையன் இப்போ தலைவரா !!! , பேரன் இளைஞர் அணி செயலாளரா ?

 

* கமல்ஹாசனா, சின்ன வயசுல செம அழகா நடிச்சிட்டு இருந்தானே , இப்போ என்னப்பா டீவில ஷோ பண்ணிட்டு இருக்கார் ?

 

* என்னப்பா இது, எல்லார் வீட்டுலயும் காரும் பைக்கும் சர்வ சாதாரணமா நிறுத்தி இருக்காங்க ?

 

கடைசியாக விஜய் சேதுபதி பாணியில் :

 

* என்னது சிவாஜி செத்துட்டாரா ???

 

மேற்கொண்ட அனைத்து கேள்விக்கும் அவர் கோமாவிற்கு செல்லும் போது அவரது நினைவில் இருந்த பதில் இப்போது கிடைத்திருக்காது.

 

ஒரே ஒரு கேள்வியைத் தவிர !!!

 

ஆமா, இப்போ சூப்பர் ஸ்டார் யாரு ???

 

அதே பதில் தான் கிடைக்கும் !!!

 

44 Years Challenge !!!

- விக்னேஷ் செல்வராஜ்


 
0 Comment(s)Views: 11509

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information