Other Articles
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 6 - பணக்காரன்
ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.
ரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே!
ரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக என்ன செய்ய வேண்டும்?
நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி
பாடகர் மலேசியா வாசுதேவன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 75 இயர்ஸ் ஆஃப் மலேசியா வாசுதேவன் !!
தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த சிவாஜி !!!
ஃப்ளாஷ்பேக் : பெத்தராயுடு படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி (1995)
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 4 - அருணாச்சலம்
அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை!! இறங்கி வந்த திருமாவளவன் !!
எம் ஜி ஆர் உருவாக்கி வைத்திருந்த மாஸ் ஹீரோ பார்முலாவை மாற்றியமைத்த ரஜினி
அவ்வளவு அழகான பாடலை படத்தில் இருந்து நீக்குவதற்கு எப்படி மனம் வந்தது?
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா
எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா?
சூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர்! கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியமா வேறு நடிகர்களை தேடிக்கொண்ட படங்கள்
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 2 - மன்னன்
மீண்டும் படையப்பா ரஜினியால் அலறப்போகும் சன் டிவி TRP
Thillu Mullu Thillu Mullu - Intro Song Review

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஒரே ஒரு போன் கால் மூலம் ... சாத்தன்குளம் அநீதியை உலகத்தின் பார்வைக்கு எடுத்த சென்ற ரஜினிகாந்த்!!!
(Monday, 29th June 2020)

ஒரே ஒரு போன் காலில் சாத்தான் குளத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வை இந்தியா முழுவதும் போய் சேர்த்திருக்கிறார்  என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால் இதுவரைக்கும் இந்த நிகழ்வு தமிழகத்துக்கு உள்ளேயே தான் விவாதிக்கப்பட்டது, இந்தியா முழுவதும் அது பார்வையை பெறவில்லை.  ஆனால் இன்றைக்கு தலைப்பு செய்தியாய் இந்தியா முழுவதும் போடுகிறார்கள்,  அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடைய அந்த ஒரு டெலிபோன் பேச்சு.  அதாவது எதை எவர் சொல்லும்போது அது உலகம் முழுவதும் கண்காணிக்கபடும் கவனிக்கபடும். உதாரணத்திற்கு உத்திரபிரதேசத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் நமக்கு அது கவனம் ஈர்க்காது.  அதேமாதிரிதான் தமிழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வும் இந்திய முழுவதும் கவனம் ஈர்க்காமல் இருந்தது. என்னதான் ட்விட்டரில் நிறைய ஹாஷ் டாக் போட்டு ட்ரெண்ட் ஆக்கினாலும் இந்திய முழுவதும் ரீச் ஆகவில்லை.  ஆனால் ரஜினி தனது ஒரே ஒரு போன் கால் மூலம் இந்த நிகழ்வை இந்திய முழுவதும் பேசு பொருளாக மாற்றிவிட்டார்.

"சாத்தான் குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார் ரஜினி". இந்த செய்தி தலைப்பு செய்தியானதும், தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.  " சாத்தான் குளம் வியாபாரிகள் உயிரழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.  நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்டும்" இப்படி ஒரு அறிக்கை வந்தது. இதுவரைக்கும் சரியாக பதில் அளிக்காத அரசு சூப்பர் ஸ்டார் ரஜினியுடைய அந்த ஒரு போன் காலால் இப்படி அறிக்கையை வெளியிட்டது . இதை ஒரு மீம் மூலம் அழகாக வெளிபடுத்தி இருந்தார்கள். "கேட் திறந்தா தான் ப்ரேகிங் நியூஸ்ல வரும், இப்போ கால் பண்ணாலும் ப்ரேகிங் நியூஸ்ல போடுறாங்க தம்பி". இந்த மீம் வந்து சில அரசியல் கட்சிக்கு புரியும்.

ஒரு அநீதி இளைக்கபட்டவுடன் இரண்டு பக்கமும் விசாரணை செய்ய வேண்டும். ஏனென்றால், உணர்ச்சியின் வசம் ஒரு முடிவு எடுப்போம், மற்றொண்டு ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரணும். இப்போது யோசித்து பார்த்தால் தமிழகத்தில் லாக்டௌன், நாம் முதலில் யாரை ஹீரோனு சொல்லிட்டு இருந்தோம், இதே காவல்துறை அதிகாரிகளை தான் அவங்க நமக்காக எவ்ளோ அர்ப்பணிப்பா வேலை செய்தார்கள் என்பதை நாம் மறக்ககூடாது.  போலீஸ் என்றாலே கெட்டவன் அப்படி முத்திரை குத்தகூடாது.

அந்த சாத்தன்குளம் போலீஸ் மீது தவறுன்னு உறுதியான பின்பு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயராஜின் மனைவி மகளுக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். ஒரு சாதாரண அரசியல்வாதி என்றால் இதை அரசியல்லுக்கு கொண்டு செல்வார்கள், ஆனால் ரஜினிகாந்த் அரசியல்வாதி கிடையாது.  அவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மனிதர். அதனால்தான், நன்மையை உயர்த்தணும் என்பதுதான் அவருடைய நோக்கம்.  அரசியல்வாதிகள் தான் எதற்கு எடுத்தாலும், எதிர் குரல் குடுத்துட்டு இருப்பாங்க, ஆனால் உண்மையான தலைவன் எல்லாத்தையும் விசாரிச்சு சரியான தீர்ப்பு வழங்குவார் .ஒரு போன் காலுக்கு பிறகு எவ்வளவு முன்னேற்பாடு நடந்து இருக்கிறது. சூப்பர் ஸ்டாருடைய குரல் ஒலிக்கும்போது அது நியாயத்தின் பக்கம் இருக்கும். எப்போதும் நியாயத்தின் பக்கம் இருந்து தான் பேசுவார் ஆட்சியாளர் பக்கம் இருந்து பேசமாட்டார், அதனால் தான் அவர் தலைவர்.


 
0 Comment(s)Views: 4466

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information