சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (மே 13) கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இத்தகவலை புகைப்படத்துடன் அவரது இளைய மகள் சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாக இந்திய மக்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றுடன் சேர்த்து முக்கியமான இன்னொரு பாதுகாப்பு நடவடிக்கையும் கடைப்பிடிப்பதற்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதனை பல முன்னணி மருத்துவ நிபுணர்களும் அரசு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அதுதான் தடுப்பூசி. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் விளைவாக பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் பற்றி பல தரப்பில் இருந்தும் பிரச்சாரங்களை விழிப்புணர்வுக்காக அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தம்முடைய இல்லத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், “தலைவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து ஒன்றாக சேர்ந்து கொரோனாவை வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்தே திரைப்பட படப்பிடிப்பு முழுமையாக முடித்துவிட்டு சென்னை திரும்பினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பிற்கு பின் சென்னை திரும்பிய ரஜினிகாந்துக்கு லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் தான் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தம் ட்விட்டரில் அறிவித்த அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், “தலைவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து ஒன்றாக சேர்ந்து கொரோனாவை வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
|