Other Articles
Rajni fans reaction
Rajni joined with Tamil Cinema Protest
Security tightened in Poes Garden
Will Rajni consider Tamil cinema request?
Will he come?
Kuselan news in Punjab newspaper
Interview with Dr. Gayathri Sreekanth
Superstar's look on par with Hollywood - Rathnavelu
Robot varudhu oram po – a distinct fan & an auto!!
A handicapped fan’s minutes with Superstar
Survival guidelines
Yellow Reporter - Apologise or We Will Boycott You Forever!
Actor Raghuvaran passes away!
Superstar ‘n’ megastar, make for a Kuselan Telugu launch
Superstar Releases Vijay’s Mother’s Album
Kuselan - Denotes poverty but will be rich in content
I would have wait for Super Star
Superstar attended Sherya Reddy Marriage
AVM gave cash bonus to all its employees for Sivaji success!
Kuselan Poojai & Superstar's Speech

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Thalaivar warns Kannada Politicians
(Friday, 4th April 2008)

“The Kannadiga politicians, whom I respect most, are acting in a nasty way to get political gains”, said Superstar Rajinikanth, while talking during the hunger strike organised by Tamil film industry in Chepauk, Chennai today (April 4).

 Exclusive Stills and Videos from the spot

Exclusive Stills and Videos from the spot

Rajini warned the leaders like Deve Gowda, Kumarasamy, Yediyuurappa, and Siddharamaiyya, that the people would teach them lesson if they continue to play with the issue for political gains. “People are equal to God. They would not remain silent if you continue to act in such manner”, thundered the Superstar.

Rajini went on to explain the legitimacy of Tamil Nadu’s claim in Hoganekkal water project. He accused the veteran Kannadadiga political leaders that they were acting in such a way keeping the forthcoming election in mind. He called upon the central government to intervene to ensure justice for Tamils.

Rajinikanth requested the Tamil Nadu leaders including Kalaignar that the issue should be nipped in the bud. “This is the right occasion for that”, added the Superstar.






அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அழிந்துவிடுவீர்கள்-கர்நாடகத்துக்கு ரஜினி சூடு


நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் அனைவருமே இன்று அரசியல்ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்... அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அழிந்துவிடுவீர்கள் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ரஜினி,

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.

கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...?

எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.

இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்த பிரச்னைக்கு இப்ப‌ோது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டி தீர்வு காண முடியாது.

இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள் என்றார் ஆவேசமாக.













 
0 Comment(s)Views: 1235

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information