Other Articles
Balakumaran takes care of dialogues in Robot
Superstar Gets Sai Baba's blessings in Puttaparthi;
This message isn't meant to ignite any
Bharathi Raja slashes Sathyaraj
MDMK will stand with Rajini on Ohenakkal issue..
"Tamil Film Artists are Unreasonable!" - Say Ameer
What Nadigar Sangam do?
Proud to be friend of Rajnikanth
Superstar denies insulting Kannadigas
Thalaivar and other actors in Cauvery and Hogenakkal
Linguistic chauvenist!
What Sathyaraj said?
When the LION ROARED - An eyewitness report of Superstar's Fast
An unusually aggressive Tamil demy god Rajnikanth, today (April 4) launched...
Thalaivar warns Kannada Politicians
Rajni fans reaction
Rajni joined with Tamil Cinema Protest
Security tightened in Poes Garden
Will Rajni consider Tamil cinema request?
Will he come?

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Yellow Reporter on www.rajinifans.com
(Tuesday, 15th April 2008)

சென்ற முறை நாம் குமுதத்திற்கு சொன்ன அறிவுரையில் விட்டுப்போன முக்கியமான அறிவுரை இது.

குமுதம் ரிப்போர்ட்டரில் நல்ல ரிப்போர்ட்டர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளவும். நன்றாக சிறுகதை ஏழுதத் தெரிந்த எழுத்தாளர்களை அல்ல.

மற்றவை-
http://rajinifans.com/detailView.php?title=556
 

மறுபடியும் ரஜினி ரசிகர்களோடு மோத வந்திருக்கிறது குமுதம். பெங்களுரு வாசகர்(!) போன் செய்ததால் கீழ்ப்பாக்கம் (இருக்க வேண்டிய இடம்தான்!) அலுவலகத்திலிருந்து அண்ணாநகருக்கு அரக்கப் பரக்க ஓடிவந்திருக்க வேண்டிய அவசியமேயில்லை.

குமுதம் அலுவலகத்திலேயே யாரும் கேட்பாரின்றி கிடக்கும் லைப்ரரிக்குள் நுழைந்திருக்கலாம். அங்கே 1979 வருஷம் குமுதம் வெளியிட்ட ரஜினி ஸ்பெஷலை எடுத்து புரட்டியிருக்கலாம்.

பிடித்த பேச்சாளர் வாட்டாள் நாகராஜ். அவர் பேசுதை ரசித்துக்கேட்பேன். அதற்கு மேல் யோசிக்க மாட்டேன் என்று ரஜினி சொன்னதாக குமுதம் சொல்லியிருப்பது அந்த குமுதம் ஸ்பெஷலில்தான்.

ஒரு நடிகருக்காக முதல்முதலாக ஸ்பெஷல் தயார் செய்து அதிலும் ஏகப்பட்ட காசு பார்த்து கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொண்டதை குமுதம் இன்னும் மறந்துவிடக்கூடாது.

ரஜினி எந்த சந்தர்ப்பத்தில், எங்கே, யாரிடம் அவ்வாறு சொன்னார் என்பதை குமுதம் வெளியிடுமா?

அதே பேட்டியைத் தொகுத்து 'ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்' என்னும் பெயரில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிடுவதற்கு குமுதம் எப்படி அனுமதித்தது?

மணிமேகலைப் பிரசுரத்துடன் தொடர்புடைய லேனா தமிழ்வாணன்தான் குமுதத்தின் உதவி ஆசிரியர், அவரிடமும் கேட்டு விளக்கத்தை வெளியிடுமா?

இதற்கு பதிலளிக்க வேண்டியது குமுதத்தின் தார்மிக கடமை.

ரஜினி நடிக்க வந்த புதிதில் அவர் கொடுத்ததாக சொல்லப்படும் பேட்டி அது. இன்று வை,கோவின் பேச்சைக் கேட்டு விசிலடிக்குமளவுக்கு ரஜினி பல பேச்சாளர்களின் பேச்சை ரசித்துக் கேட்கும்போது இப்படியோரு தகவல் உண்மைதானா, இப்படியொரு ஸ்டோரி தேவைதானா என்று குமுதம் எடிட்டோரியல் சிந்திக்காததுதான் ஆச்சர்யம்.

தளபதி சத்யநாராயணா, எங்களது சக நண்பர் சுந்தர் ஆகியோரின் எடிட் செய்யப்படாத பேட்டியை வெளியிட்டு நடந்த சம்பவத்துக்கு குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குமுதத்தை சட்ட ரீதியாக அணுகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

பின்குறிப்பு - இதுவரை ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த பத்திரிக்கைகளின் அசிங்கமான முகங்கள் அம்பலமாகி வருகின்றன. 1978 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் குமுதம், ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டது பற்றி ஒரு தொடராக வெளியிட இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை 'குமுதத்தின் கோலம்' என்ற பெயரில் வெளியாக இருக்கும் செய்தியையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

The above article is based on the following "Yellow" Reporter article
http://img.photobucket.com/albums/v243/rajinifans/Reporter_ControversyJ.jpg?t=1208327432






 
0 Comment(s)Views: 1340

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information