 தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதுமே இப்போது குசேலன் பற்றித்தான் பேச்சு. இதுவரை வந்த ரஜினி படங்களைப் போல் அல்லாமல் தெலுங்கு குசேலேடுவில் சில பிரத்யேக காட்சிகள் இடம்பெற போகிறதாம்.
இந்நிலையில் குசேலன் வெளியாகும் தேதி குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. குசேலன் படம் சுதந்திர தினத்தன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
குசேலனில் ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் சில பாக்கி இருக்கின்றனவாம். அதற்கான படப்பிடிப்பு சென்னையில் இந்த மாதம் முழுவதும் நடக்கவிருக்கிறது. ஜீலையில் மற்ற பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
படத்தின் பாடல் வெளியீடு அடுத்த மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. எளிமையான முறையில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று கவிதாலாய தரப்பு தெரிவிக்கிறது.
மற்ற நடிகர்களின் படங்களைப்போல் அல்லாமல் ரஜினி படங்களில் வெளியீட்டு தேதி என்றுமே தள்ளிப் போனதில்லை. அதன் காரணமாகவே குசேலன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தும் முழுப்பொறுப்பையும் வாசு ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் குசேலன் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடவிருப்பதையும் பாடல் வெளியிட்டு விழா பற்றிய அறிவிப்பும் வாசுவிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கலாம். |