Other Articles
Exclusive New Kuselan Stills
Kuselan - Counting starts...
Big Music gets Kuselan audio for Rs 2.25 crore - record price
Rajini mania taking wings
"Excellent Kamal" - Super Star
Is Kalki qualified?
Kuselan insured for Rs 40 crore
Thalaivar's special gift to Mr Chitra (Photographer)
Superstar short interview by Asianet TV
Abishek Bachchan Imitate Rajini - Dubai Gulf News Paper
Kuselan for Independence Day!
A song with Rajinikanth and Nayanthara is being picturised
Dalar on action for Thalaivar's title song...
Vasu has made the charecter change in Kuselan..
I wish we had this chapter while we were in school. ..
Stated that it would hit the screens sometime during September..
After reaping success with his latest flick Sandai in ..
Superstar in CBSE School Book
"Rajinikanth is my biggest role model" - Salman Khan
According to film crew sources. the film's shooting is

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Kuselan - Audio on June 30
(Thursday, 19th June 2008)

குசேலன் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

கவிதாலயாவின் சார்பில் எளிமையான முறையில் நடைபெறவிருக்கும் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் கலந்து கொள்ளவிருக்கிறார்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. இதில் 3 பாடல்களில் சூப்பர் ஸ்டார் தோன்றுகிறார். சந்திரமுகியில் வந்த தேவுடா தேவுடாவை ஞாபகப்படுத்துமளவுக்கு அட்டகாசமான அறிமுகப்பாடல் குசேலனிலும் உண்டு.

இது தவிர சூப்பர் ஸ்டாராக நடிக்கும் ரஜினியும்  நயன்தாரா சம்பந்தப்பட்ட டுயட்டை  படம்பிடிப்பது போன்ற ஒரு பாடலும் இன்னொரு குழு பாடலிலும் சூப்பர் ஸ்டார் இடம்பெறுகிறார்.

75 ஆண்டு தமிழ் சினிமா வரலாறு பற்றிய பாடல் படத்தில் இடம் பெறுகிறது. சினிமா… எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா… இனிமேல் இதுபோல் வருமா வருமா என்று அப்பாடல் தொடங்குகிறதாம். 

இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக இயக்குநர் வாசு தெரிவித்திருக்கிறார்.

 பாடல் கேசட் உலகம் முழுவதும் வரும் 30 ஆம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும்.  ஆனாலும் படம் வெளியாகும் தேதி பற்றி தயாரிப்பு தரப்பு உறுதியான தகவல்களை தரவில்லை.

படம் ஜீலை இறுதியில் ரெடியாகிவிடும் என்றாலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் திரைக்கு வரும் என்கிறார்கள்.

ஏற்கனவே வெளிவந்த 30 ஸ்டில்களும் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. எது எப்படியோ ஆடியோவையாவது சீக்கிரம் வெளியிடுங்கள் என்கிறது ரசிகர்கள் வட்டாரம்.


Previous

Next
 
   
0 Comment(s)Views: 1211

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information