Other Articles
Kuselan Audio launch - Invitation design
Video clip of Superstar speech in a school function in 90's
King Khan vs Southern Shehanshah Rajini
Superstar Rajini among 50 most admired Indians!
Thalaivar style finds eager fans in Pakistan
Superstar Rajinikanth will soon be seen in comics
Superstar at Vairamuthu's son marriage function
Rajini's charm stuns foreigners
Kuselan Telugu Gallery – Completely different from Tamil
Kuselan - Audio on June 30
Exclusive New Kuselan Stills
Kuselan - Counting starts...
Big Music gets Kuselan audio for Rs 2.25 crore - record price
Rajini mania taking wings
"Excellent Kamal" - Super Star
Is Kalki qualified?
Kuselan insured for Rs 40 crore
Thalaivar's special gift to Mr Chitra (Photographer)
Superstar short interview by Asianet TV
Abishek Bachchan Imitate Rajini - Dubai Gulf News Paper

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Kuselan - Super Star ordered?
(Tuesday, 1st July 2008)

குசேலன் பாடலை முன்னணி நடிகர்களை வைத்து எடுப்பதாக திட்டமிட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் ரஜினி ரசிகர்களை வைத்து படமாக்கியது அனைவருக்கும் தெரிந்து விஷயம்தான். 

ரஜினியே தன்னுடைய ரசிகர்களை வைத்து படமாக்குமாறு வாசுவிடம் சொன்னதாகவும் தன்னுடைய ரசிகர்களை படப்பிடிப்பில் பங்குபெற ஏற்பாடு செய்ததாகவும் வரும் செய்திதான் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. 

படப்பிடிப்பில் கலந்து கொள்ளுமாறு எந்தவொரு ரசிகர் மன்றத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. சென்னையை சேர்ந்த எந்தவொரு ரசிகர் மன்றமும் குசேலன் படக்குழுவினருடன் பணியாற்றவில்லை.

படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவருமே பெப்சியில் உறுப்பினராக இருக்கும் துணை நடிகர்கள்.  அதை பெப்சியும் உறுதி செய்திருக்கிறது.

ரஜினி தான் சம்பந்தப்பட்ட எந்தவொரு படத்துக்கும், தான் கலந்து கொள்ளும் எந்தவொரு விழாவுக்கும் வருமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்வதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை அவர் கடைப்பிடிக்கிறார்.
 
ரஜினியை நேரி்ல் சந்திப்பது என்பது இயலாத காரியம். ராகவேந்திரா மண்டபம் தவிர வேறு எங்கேயும் ரசிகர்களை சந்திப்பதி்ல்லை. ரஜினி முலம் ரசிகர்களுக்கு எந்தவொரு உத்தரவும் நேரடியாகவோ மறைமுகமோக வந்ததில்லை.  ரஜினியிடமிருந்து வரும் செய்தி அறிக்கை முலமாக ரசிகர் மன்றத்தின் வாயிலாக மட்டுமே வெளிவரும்.  சம்பந்தப்பட்ட அறிக்கையும் பத்திரிக்கைகளுக்கு அளிக்கப்பட்டுவிடும்.

ரஜினி தன்னுடைய ரசிகர்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனத்துடன் இருப்பவர். குடும்பப் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு தியேட்டர் வாசலில் தவம் கிடக்கும் ரசிகர்களை ரஜினி என்றும் ஊக்கப்படுத்தியதே இல்லை.  ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்கள் என்கிற காரணத்தினாலேயே கடந்த 15 ஆண்டுகளாக பிறந்தநாளின் போது ரஜினி ஊரில் இருப்பதில்லை.

ரசிகர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்கிற காரணத்தினாலே 15 வருஷங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டியிருந்தது.  அதே எண்ணத்தின் காரணமாகத்தான் அடுத்தடுத்து அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கவும் காரணமாக இருந்தது.
ரசிகர்களுக்காகத்தான் 2004 பாராளுமன்ற்த்தேர்தலில் ரஜினி அப்படியொரு அரசியல் முடிவெடுக்க காரணம் என்பது தெரிந்த விஷயம்.

இந்நிலையில் குசேலன் படத்தை புரோமோட் செய்வதற்காக ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் படத்தின் இயக்குநர் உள்ளிட்டவர்கள் இழிவு படுத்துவது ஏன் என்பதுதான் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.


Previous

Next
 
   
0 Comment(s)Views: 999

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information