Other Articles
Kuselan breaks first-day records!
Kuselan Audio Review - Simply stunning
The highly anticipated Thalaivar's Speech..
Superstar's Kuselan audio launch at Le Meridian.
Kuselan - Super Star ordered?
Kuselan Audio launch - Invitation design
Video clip of Superstar speech in a school function in 90's
King Khan vs Southern Shehanshah Rajini
Superstar Rajini among 50 most admired Indians!
Thalaivar style finds eager fans in Pakistan
Superstar Rajinikanth will soon be seen in comics
Superstar at Vairamuthu's son marriage function
Rajini's charm stuns foreigners
Kuselan Telugu Gallery – Completely different from Tamil
Kuselan - Audio on June 30
Exclusive New Kuselan Stills
Kuselan - Counting starts...
Big Music gets Kuselan audio for Rs 2.25 crore - record price
Rajini mania taking wings
"Excellent Kamal" - Super Star

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Kusalan songs - Howz it?
(Friday, 4th July 2008)

குசேலன் ஆடியோ வெளியாகி ஒரே நாளில் இரண்டு லட்சம் சிடி விற்று சாதனை படைத்திருப்பது தெரிந்த விஷயம்தான். வழக்கம்போல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் குசேலன் பாட்டு எப்படி என்று ரசிகர்களிடமே கேட்டோம்.

டி.வி. ராஜேஷ், சென்னை

'நிஜமாவே அசத்தல்தான்.  ஜி.வி. பிரகாஷிடமிருந்து இப்படி பிரமாதமாக வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.  3 பாடல்கள் ஹிட்.  பேரின்ப பாட்டு ரசிகர்களுக்கு சரியான வேட்டு. தியேட்டர் களை கட்டும் என்பது நிச்சயம்'

நவீன், மலேசியா

'தலைவர் ஜி.வி பிரகாஷை பாராட்டியதில் தப்பேயில்லை. இங்கே மலேசியாவில் குசேலன் கலக்குகிறது. சினிமா சினிமா, ஓம் சாரரே, சொல்லம்மா என்னோட பேவரைட்'

சீனிவாஸ் நாயுடு, பெங்களுரு

'கடவுள் யாரென்னு யார் பார்த்தா வரிகள் கலக்கல்.  பாட்டில் ஒண்ணும் புதுசா இல்லைன்னு பேச்சு வருவது உண்மைதான். குசேலன் பாட்டெல்லாம் கூல் ட்டிரிங்க்ஸ் மாதிரி. திரும்ப திரும்ப கேட்டா நிச்சயம் திருப்தியா இருக்கும்'

தீபக், சென்னை

'பேரின்ப பாட்டு சூப்பர்.  தலைவரை புகழ்ந்து தள்ளியிருக்காங்க. தலைவர் படத்துல தலைவரை புகழ்ந்து நிறைய பாட்டு வருவது இதுதான் முதல் தடவை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்'

ஸ்ரிராம் நிஷ்

'படையப்பாவுக்கு அப்புறம் ரசிகர்களுக்காகவே வந்திருக்கும் பாடல்கள் குசேலனில்தான் இருக்கிறது. சினிமா. சினிமா பாட்டை எஸ்பிபி பாடியிருக்கலாம்.  பசுபதிக்கான டுயட் சொல்லம்மாவும் நயன்தாராவுக்கான பாட்டு சாரலும் நன்றாக இருக்கறிது.  பேரின்ப பாட்டுதான் பெஸ்ட் ஆப் த ஆல்பம்"

கி்ருஷ்ணன், சென்னை

'பாட்டெல்லாம் மனசுல ஒட்டற மாதிரியே இல்லை. ரஜினி படத்து பாட்டா என்று சந்தேகமா இருக்கு.  பேரின்ப பாட்டு பரவாயில்லை. யுகபாரதி அருமையாக எழுதியிருக்கிறார்கள். தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிவிடுவார்கள். மத்ததெல்லாம் சராசரிக்கும் கீழே.'


குசேலன் பாட்டு பற்றித்தான் இப்போது ஊரெல்லாம் பேச்சு. பாட்டு ரசிகர்களை நிறையவே திருப்திப்படுத்தியிருக்கிறது.  சராசரி சினிமா ரசிகனை திருப்திப்படுத்துமா என்பதை படம் வந்தபின்னர்தான் சொல்ல முடியும். அதுவரை குசேலனை கேட்டு ரசியுங்கள்.


Previous

Next
 
   
0 Comment(s)Views: 1214

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information