Related Articles
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
Best Rajini guest role film - Poll Result
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
இந்த சாதா வெற்றிக்கே இத்தனை ஆர்ப்பாட்டமா...!
(Sunday, 21st September 2008)

முதலிலேயே சொல்லி விடுகிறோம்.... கமல்ஹாசனைத் திட்டுவதல்ல நமது நோக்கம். அவரது படம் தசாவதாரம் 100 நாள் இலக்கைத் தொட்டுவிட்டதே என்ற பொறாமையும் நமக்கில்லை.

காரணம் 100 நாள் கொண்டாட்டங்கள் நமக்கு அடிக்கடி வருபவை. கமல் படங்களுக்கு அரிதாக வருபவை!

ஆனால் இந்த தசாவதாரத்தை நமது தலைவரின் சிவாஜியை விட மிகப் பெரிய படமாகச் சித்தரிக்க அதன் தயாரிப்பாளர் ‘ஏஸ்கர்’ (அதானே இப்ப அவர் அடைமொழி?) ரவிச்சந்திரன் செய்த தகிடுதத்தங்கள், மலிவான விளம்பர உத்திகளைப் பார்த்துவிட்டதால், சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறோம்.

இந்த ரவிச்சந்திரனை சாதாரணமாக எடைபோட வேண்டாம்... ‘மனிதருள் விஷம்’ என்ற அடைமொழிக்கு முற்றிலும் பொருத்தமான நபர். தலைவரின் சந்திரமுகி ஓடிய ஓட்டம் பார்த்து பொறாமையில் வெந்து வெதும்பி, சத்யம் மேலாளரிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

என்னய்யா... அந்தாளு படத்தை இப்படி தாங்கிப் பிடிக்கிறீங்க... தூக்கி வீசிட்டு யூத்புல்லா நம்ம அந்நியனை ரிலீஸ் பண்ணுங்கப்பா...

அதற்கு சத்யம் மேலாளர்: அதெப்படி சார் முடியும்... நல்ல கலெக்ஷனுடன் 100 நாளைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கு (சத்யத்தில் மட்டுமே 2 தியேட்டர்களில்!). அப்படியெல்லாம் தூக்க முடியாது சார்...

ரவிச்சந்திரன் மேலும் உபயோகித்த சில வார்த்தைகளை இங்கே பிரயோகித்தால் ‘உதைக்க வேண்டாமா இந்தாளை?’ என்று நம் தலைவர் பாணியில் கிளம்பி விடுவீர்கள்!

சரி மேட்டருக்கு வருவோம்...

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த ஒரு படம் 100 நாள் இலக்கைத் தொட்டிருக்கிறதென்றால் அது தசாவதாரம்தான். தன் நடிப்பு புகழப்பட்டாலும் வர்த்தக ரீதியாக தனக்கு எப்போதும் இழப்புகள் ஏற்படுவது ஏன் என கமல் அடிக்கடி கேள்வி எழுப்புவார் பத்திரிகையாளர்களிடம்.

ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவையே அவருக்குத் தந்தன.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்றவை சராசரிப் படங்களாகவே அமைந்துவிட்டன. இந்த நிலையில் அவருக்கு ஓரளவு கைகொடுத்த படம் வேட்டையாடு விளையாடு மட்டும்தான். அதுகூட இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

எனவே தனக்கு பிளாக் பஸ்டர் என்று சொல்லும் வகையில் ஒரு படம் அமைய வேண்டும் என்ற வெறியுடன் கமல் தசாவதாரத்தை உருவாக்கினார். 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல் இந்தப் படத்தில்.

இந்தப் படம் குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் குறைகளை கமல்ஹாசனே ஒப்புக் கொண்டு பேட்டியும் அளித்தார்.

ஆனாலும் வசூல் ரீதியாக அந்தக் குறைகளை மறக்கடித்துவிட்டது தசாவதாரம்.
இன்று அந்தப் படத்தின் 100-வது நாள் விழா. ரஜினி ரசிகர்களான நாமும் வாழ்த்துவோம்.
ஆனால்...

இந்தப் படம் சிவாஜியை மிஞ்சி சாதனை செய்துவிட்டதாக ரவிச்சந்திரனும் அவரது எடுபிடிகளான சிலரும் பரப்பி வரும் பொய்களை அப்படியே விட்டுவிட மனசில்லை. காரணம் உண்மை நிலை வேறு.

இதுவரை நம் தலைவரின் சிவாஜி வசூல் சாதனையை முறியடிக்க எந்தப் படத்தாலும் முடியவில்லை. அதை இன்னொரு சூப்பர் ஸ்டார் படத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பது இந்தியத் திரையுலகுக்கே தெரியும்.

பிரமாண்டத்திலும் சரி, வசூலிலும் சரி... உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொழுது போக்கு அம்சங்களிலும் சரி... நம்ம தலைவரின் சிவாஜி உலகத்தரமான திரைப்படம்.

சிவாஜி – தசாவதாரம் சில உண்மைகளைப் பார்ப்போம்:
சென்னையில் மட்டும் 6 திரையரங்குகளில் தாசாவதசாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது (அதிலும் பெரும்பாலும் ஒரு காட்சிதான், ஆனால் 4 காட்சி என பொய் சொல்லுகிறது போஸ்டர் விளம்பரம்!). சென்னைக்கு வெளியே மாயாஜாலில் ஒரு காட்சியாக 100-வது நாளை எட்டிப் பிடித்துள்ளது.

ஆனால் நூறாவது நாள் விளம்பரத்தில் செகண்ட் ரிலீஸ் செய்யப்பட்ட திருவள்ளூர், கும்முடிப்பூண்டி தியேட்டர்களையும் சேர்த்துக் கொண்டிருப்பது, அப்பட்டமான டி.ராஜேந்தர்தனம்!

மற்றபடி பல ஊர்களில், நகரங்களில் 25-வது நாளோடு தூக்கப்பட்ட படம்தான் தசாவதாரம்.

ரஜினி போட்டுக் கொடுத்த ரூட்டு!

ரவிச்சந்திரனுக்கு சொந்த சரக்கு கிடையாது. தன் படத்தை அவர் மார்க்கெட்டிங் செய்வதிலிருந்து ரிலீஸ் செய்வது வரை அனைத்துக்கும் சிவாஜியைத்தான் காப்பியடித்தார். அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து சீக்கிரம் லாபம் பார்க்கும் முறையை தலைவரின் ‘சிவாஜி’தான் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தது.

இன்னொன்று, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜிக்குப் பிறகுதான் இங்கே உள்ளவர்களுக்கு வெளிநாட்டு மார்க்கெட் இடம் கொடுத்தது. அதற்கு முன்புவரை தமிழ்ப் படங்கள் எங்கோ ஒரு தியேட்டரில் ஓரிரு நாட்கள் ஓடிவிட்டு மறைந்துவிடும். ஆனால் தலைவரின் முத்து படம் தொடங்கி குசேலன் வரை வெளிநாட்டில் திருவிழாக் கூட்டத்துடன் வசூல் சாதனை புரிந்து வருகின்றன.

வெளிநாட்டு ரசிகர்களைப் பொருத்தவரை ரஜினிதான் இன்று இந்திய திரைப் படங்களின் முகம். தமிழ்த் திரைப்படங்கள் இன்றைக்கு வெளிநாடுகளில் ஓரளவுக்காவது ஓடக் காரணம் ரஜினி என்ற சூப்பர்ஸ்டார்தான்.

கமலுக்கு இப்போது வெளிநாடுகளில் கிடைத்துள்ள அங்கீகாரம் அல்லது அவர் படம் இன்றைக்கு இத்தனை பெரிய அளவில் வெளிநாடுகளில் ரிலீசாகக் காரணமும் ரஜினி படங்கள் தொடர்ந்து பெறும் வெற்றிகள்தான். இதை கமல் ரசிகர்களாலும்கூட மறுக்க முடியாது.

கமலின் பஞ்ச தந்திரத்தை வெளியிட கனடா, மலேஷிய மற்றும் வளைகுடா நாடுகள் தடை போட்டது நினைவிருக்கட்டும்.

சில புள்ளி விவரங்கள்!

சிவாஜியின் வெற்றி பிரமாண்டமானது. சொல்லப்போனால் சிவாஜியை தசாவதாரத்துடன் ஒப்பிடுவதே தவறு. ஆனால் அப்படி ஒரு ஒப்பீட்டை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்ததால் இங்கே சொல்கிறோம் (சிவாஜிக்கு கொடுத்ததை விட அட்லீஸ்ட் 1000 ரூபாயாவது மேலே போட்டுத் தாங்க என்று கலைஞர் டிவியிடம் கெஞ்சினாராம் இந்த ஏஸ்கரு!).

 சிவாஜி உலகமெங்கும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டியது, நல்ல வசூலுடன்.

உலகெங்கும் 121 திரையரங்குகளில் 100-வது நாள் விழாவைக் கொண்டாடிய ஒரே இந்தியத் திரைப்படம் சிவாஜி மட்டுமாதான் (சிவாஜி தமிழ் 108 திரையரங்குகளில் 100 நாள், தெலுங்கு 13 திரையரங்குகள்).

வெளிநாடுகளில் ஓரிரு வாரங்களைத் தாண்டுவதே இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சிரமம். ஆனால் 16 வெளிநாட்டுத் திரையரங்குகளில் சிவாஜி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

மலேஷியா – 6 தியேட்டர்கள்
சிங்கப்பூர் – 2 தியேட்டர்கள்
அமெரிக்கா – சியாட்டில் சிட்டி
மஸ்கட் – ரூபி சினிமா
தென்னாப்பிரிக்கா – 2 தியேட்டர்கள்
கனடா – 2 தியேட்டர்கள்
இலங்கை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள்

சிவாஜி வெள்ளி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:

சென்னை: பால அபிராமி – பகல் காட்சி (சென்னையில் 17 தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது)
காஞ்சிபுரம்: பாபு – 4 காட்சிகள்
அம்பத்தூர்: ராக்கி – 4 காட்சிகள்
பெங்களூர் பிவிஆர் – 2 காட்சிகள்

மலேஷியாவில் சிவாஜியின் வசூல் சாதனை மகத்தானது. எட்டு வார கலெக்ஷன் மட்டும் 2,422,788 டாலர்கள். கிட்டத்தட்ட ரூ. 11 கோடியே 63 லட்சம்!

ஆனால் தசாவதாரம் வசூல் 7 கோடியே 80 லட்ச ரூபாய்தான்.



 பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே திரைப்படம் சிவாஜி மட்டுமே. முதல்வாரம் 9-ம் இடத்தில் இருந்தது சிவாஜி. பிரிட்டனில் மொத்தம் ஏழு வாரங்கள் ஓடியது சிவாஜி. மூன்றாவது வார முடிவில் சிவாஜியின் வசூல்: 5 கோடியே 74 லட்சம் ரூபாய்.

ஆனால் தசாவதாரம் டாப் டென் வரிசைக்குள்ளும் வரவில்லை. வசூலித்ததோ: 4 கோடி ரூபாய்தான், அதுவும் கடைசிநாள் தூக்கப்படும் வரையிலான வசூல்!

 மலேஷியா, சிங்கப்பூரில் சிவாஜியின் 100வது நாள் கொண்டாட்ட போஸ்டர்களை இங்கே தந்திருக்கிறோம்.

அத்துடன் உள்ளூரில் தசாவதாரம் 100-வது நாள் விழா கொண்டாடிய லட்சணத்தையும் கொடுத்துள்ளோம்...


இதுபோதும் தலைவரின் ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள!

பின்குறிப்பு :  ரஜினியையும் ரஜினி படத்தையும் யாரோடும் ஒப்பிடுவது எங்களது நோக்கமல்ல. அதற்கு அவசியமுமில்லை. ரஜினியோடு ஒப்பிடுமளவுக்கு இங்கே தமிழ்நாட்டில் யாருமில்லை என்பதும் தெரிந்த விஷயம்.  தசாவதாரத்தின் வெற்றி,  வேறு எந்த படத்துடனும் ஒப்பிடப்படாமல் சிவாஜியோடு ஒப்பிடுவது கடந்த 100 நாட்களாகவே தொடர்ந்து வந்தது.  தொடர்ந்து நாங்களும் மௌனம் சாதித்தால் அது சம்மதம் என்கிற வகையில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மட்டுமே இந்த கட்டுரை.

Sanganathan
for www.rajinifans.com






 
40 Comment(s)Views: 16804

123Next Page
Next
mettu street k.muthu,chennai
Wednesday, 8th October 2008 at 05:01:01

look guys everyone knows that only superstar movies can able to beat his own movies records, the other stars only fight to beat thier other co-stars movies, surely they can't able to atleast near by superstars records, dasavatharam is better than sivaji or not it's not bother, but sivaji's huge hit than dasavatharam on collection wise as well as media wise, it's only true !
Gobinath,India
Wednesday, 8th October 2008 at 02:49:14

First of all i would like to say don't degrade..
The collection issue and records are really true..The film dasaavatharam did a very huge collection (around 300 cr) it's true. If u wants a other than this bid hit then u try some thing good in story. Not a rich man fall to poor and then he become very rich.Don't encourage this type of film and Chandramugi is quite different b'se of over expectation created by producer and director p.vasu the film cusalen b'me flop. But u'r all having a very big hit Robo. Because the story for kamal. So it's going to having a different style of film. All the best.

Rasa,
Thursday, 2nd October 2008 at 03:56:08

I am Rajini Fan,
Sivaji movie is nothing in front of Dasavatharam



Rasa,
Thursday, 2nd October 2008 at 01:46:02

I am die-hard fan of SuperStar Rajini!
But i like Dasavatharam than Sivaji.
Excellent

Balasubramanian,Chennai/ndia
Monday, 29th September 2008 at 15:53:08

Ascar(copy cat)Ravichandran tried all options to get publicity for his Dasavatharam in media but was a complete failure, in contrast Sivaji without anybody's request or pressure was given the highest publicity in Indian Media till date by the media itself, rajini Sir made tamil industry proud by winning the award from NDTV. People stop comparing rajini sir or his movies with anybody as he is incomparable, he is THE SULTAN OF INDIAN CINEMA.

I think Ravichandran should learn maths before talking about figures, he is such a cheap fellow that he had name his production house as OSCAR films

karthik,hyderabad
Monday, 29th September 2008 at 12:53:03

dont compare kamal with our super star becoz we know wat is the ability of our super star .
sundar,
Thursday, 25th September 2008 at 13:01:52

kamal is a copy cat.see the videos here http://jackofall.blogspot.com/2008/09/inspired-2.html
sundar,
Thursday, 25th September 2008 at 13:01:10

kamal is a copy cat.see the videos here http://jackofall.blogspot.com/2008/09/inspired-2.html
jack,india
Thursday, 25th September 2008 at 11:25:33

is kuselan a hit-comparing to dasavtharam---did rajini sir ask u people to compare his films with kamal sir---dont u people have any other work-try to do good things in the name of rajini sir--dont create a rivalism or faction--in tamil cinema-they are good friends---sorry if i had hurt rajini fans
siva prakash,singapore
Wednesday, 24th September 2008 at 13:53:02

சிவாஜீ THE BOSS ran for 100days in singapore. a remarkable record for a tamil movie here. whereas dasavaratham ran a month plus. when rajni appear on screen, there is an electrifing energy. kamal movies can make u sleep half way through the movies. superstar rocks!!!

Dhanendran,MALAYSIA
Wednesday, 24th September 2008 at 04:48:30

DID KAMAL RESPECT RAJINI SIR IN ANY MOVIE BUT NOT AT ALL. ONLY THALAIVAR RESPECT KAMAL. OUR SUPERSTAR IS GREAT. HE IS LEADER FOR EVERYBODY. HE SPEND HIS EARNING TO POOR PEOPLE BUT NOT KAMAL. THIS WEBSITE ONLY FOR SUPERSTAR FANS MIND IT. VALGE THALAIVAR.
arun,salem
Wednesday, 24th September 2008 at 02:21:32


Sanganathan sir good job !

VIJAYENDRA,INDIA, BANGALORE
Wednesday, 24th September 2008 at 01:04:14

STUPID FELLOW RAVICHANDRAN JUST KILL THE BASTAD NO ONE CAN BEAT OUR SUPERSTAR IF ANYONE TRIES TO SUBMERGE OUR SUPERSTAR IT IS NOTHING BUT THEMSELVES ARE GOING TO SUBMERGE ,
raajesh,India/Chennai
Tuesday, 23rd September 2008 at 23:11:53

Aascar ravi wanted projected this buildup as equal to sivaji. Not only this film during 2005 he is the guy one who created a buildup stating that anniyan as equal to rajni film CM collection. Atlast what happened Anniya ran only 100 days only in chennai whereas in Andhara was huge hit. Same case happended in Dasa too. Atleast anniyan ran 38 theaters 100 days in Andhara but Dasa removed in andhara after the 50th day. But our boss ran 100 days in 13 centers in Andhra and 206 theaters 50 days. Friends it is confirmed that dasa ran 100 days in 10 theaters in TN. Chennai 6 theaters (actually in the ad it was 7 no. Woodlands symphony the film ran for 91 days) Kanchi 1, Trichy 1, Nellai 1 and Tutukudi 1 totally 10. But immediate 100 th day except albert complext all theaters removed but still the film is running papers successfully. Yenna koduma pa.
Sekar,India
Tuesday, 23rd September 2008 at 22:54:03

some of you all mention that we should not talk bad about Dasa here as Kamal is Rajini's friend. The point here is that this site did this article due to Oscar Ravichadran bad attitude. Even though Rajini sir respect Kamal but do you all think Kamal respect Rajini?
manuraj,tirunelveli
Tuesday, 23rd September 2008 at 14:25:42

kamal is best friend to superstar.he is also a good actor in indian film.comparision is not good between them because they are ownderful friends.so we are happy to kamal film reach 100 days.
Anonymous,
Tuesday, 23rd September 2008 at 06:09:11

Dear all, as we all know our thalaivar and kamal hassan sir are good frens.. If anyone notice, in most of thalaivar's movies he will praise or talk greatly obout Kamal sir... Watch carefully Muthu, Sivaji or Kuselan... There are certain part where Rajini sir indirectly or direcly shows his respect to his fren Kamal sir... Disrecpecting our thalaivar's fren is the same like disrecpecting him... I am a die hard rajinikanth fan but in my opinion i think that dasavtharam is one of kamal sir's masterpiece...
Sekar,India
Tuesday, 23rd September 2008 at 04:28:55

Great article. Now, Kamal fans are stomach burning. Now, they will understand what will happen if they were to compare their idol with our Thalaivar.

Sanganathan, you have missed out the Sivaji performance at North India. This is first and last south movie rocked bollywood. Only Thalaivar can overtake.

Did any chance Dosa Hindi version released? Even, if it is released, i don't think, it would have touched Tamil version collection in North India

Dhanendran,MALAYSIA
Tuesday, 23rd September 2008 at 04:19:55

SUPERSTAR IS GREAT FOREVER.
Anonymous,
Tuesday, 23rd September 2008 at 00:58:05

Please don't make such comparisions... My feeling is that both Thalaivar and Kamal are accomplished Actors in their own ways. All we can do is be PROUD about Kamal's accomplishments... Which even Thalivar does... I guess real Thalivar fan will have gr8 repect for Kamal...
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information