Other Articles
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு ..

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
(Thursday, 25th September 2008)


ரஜினி இப்போது அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறார்... அல்லது சமூக இயக்கம் தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரிதாகிக் கொண்டே போகிறது.

சிலர் இந்த நிலையை 1996-ல் நிலவிய சூழலுடன் ஒப்பிடுகிறார்கள்... சில பத்திரிகைகளிலும் இந்த ரீதியிலான அலசல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அன்றைய சூழலில் செய்திக்காக ரஜினியின் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகாலம் சுற்றியவன், அவரது அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பங்கேற்றவன் என்ற முறையில் இது குறித்த என் பார்வை...


1996-ல் மக்கள் ஒரு நிஜமான அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ரஜினிதான் பொருத்தமான தலைமையைத் தருவார் என்றும் தீவிரமாக நம்பினர்.
அவருடைய ஒரு வார்த்தையை மட்டுமே மந்திரம் மாதிரி நம்பி அவர் பின்னால் ஓடிவரத் தயாராக இருந்தார்கள்.

அரசியல் கட்சிகள் பக்கமும் அவருக்கிருந்த செல்வாக்கு அபரிமிதமானது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் எனும் கட்சியைத் துவங்கிய மூப்பனார், அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ரஜினியை ஒருமுறையல்ல 4 முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் அழைத்தார்.
தனிப்பட்ட முறையிலும் ரஜினியை கட்சித் தலைமை ஏற்கும்படி மூப்பனார் எந்த அளவு வேண்டிக் கொண்டார் என்பதை சோ பலமுறை மேடைகளிலேயே கூறியது உங்களுக்கும் நினைவிருக்கும்.

டெல்லியிலோ, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ரஜினி முதல்வராக ஒப்புக் கொண்டால், காங்கிரசுக்கு கூட்டணியே வேண்டாம். சில உதிரிக் கட்சிகளுடன் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கூறினார்.

இந்த அளவு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட வாய்ப்பைத்தான் ரஜினி மறுத்தார். உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. வேறு நபராக இருந்திருந்தால்...

நினைக்கவே முடியவில்லை அல்லவா...

ஆனால் ரஜினி இந்தப் பதவிக்கும், அதை ஒரு வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் என்றுமே விரும்பியதில்லை.

அவர் விரும்பியது ஒரு நல்ல ஆட்சி... அதை யார் தந்தால் என்ன? என்பதுதான் அவரது வாதம். அந்த நல்ல எண்ணத்தில் மக்கள் தந்த அரிய வரத்தை வேறு சிலரிடம் ஒப்படைத்தார். என்ன... அன்று அதைத் தரக் கூடாதவர்களிடம் தந்துவிட்டார். அதுதான் பிரச்சினையே!

அன்று ரஜினிக்கு நிலவிய செல்வாக்கைப் பார்த்து, நிச்சயம் அடுத்த எம்ஜிஆர் அல்லது அவரையும் தாண்டி ஒரு படிமேலே கூடப் போய்விடுவார் இந்த மனிதர் என்று நிருபர்களிடம் கமெண்ட் அடித்த ரகுபதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்கள் இன்னும்கூட அமைச்சர் என்ற அந்தஸ்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று மட்டும் ரஜினி மந்திரிசபை அமைத்திருந்தால், இவர்கள் ஒருபோதும் கோட்டைக்குப் போயிருக்க முடியாது...

இதற்காக, கருணாநிதி உள்ளிட்டவர்கள் ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது.

உண்மை... இது மிகைப் புகழ்ச்சியில்லை. இந்த விவரங்கள் நம்மில் பலருக்கும் நன்கு தெரியும், எனவே மேம்போக்காக இவற்றை நினைவுபடுத்துகிறேன்.

அன்றைய சூழல் இது... இன்றைக்கு...?

தொடரும்!

Vinojasan






 
9 Comment(s)Views: 2009

johnroyal,chennai
Wednesday, 1st October 2008 at 08:55:56

you are right viojasan g but what happen all government after 1996 had failed serve people thalaiver should beside this shouldn't occur again
Anonymous,
Monday, 29th September 2008 at 21:04:44

thla ........ u r the only person to rule the world
J.S.M.Mubarak,India/Nagore
Saturday, 27th September 2008 at 14:33:06

அரசியல்வாதிகள் அப்படிதான்
bala,chennai
Saturday, 27th September 2008 at 08:29:55

we feel really very sad,thalaiva.nee potta pichaila vaalra avanga enna naatuku nallathu senchitanga.nee vaa thalaivaa,unnal matume mudiyum,intha natuku nallthu seiya.
Raj T,usa
Friday, 26th September 2008 at 23:28:31

கருணாநிதி உள்ளிட்டவர்கள் ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது. நூறு சதவீதம் உண்மை! ஆனால் நன்றி என்கிற வார்த்தைக்கும் கருணாநிதிக்கும் 0.1 சதவீதம் கூட சம்பந்தம் இல்லையே!
T.JAWAHAR,india , tirupur
Friday, 26th September 2008 at 02:07:55

மனசு ரொம்ப வலிக்குது.....

jawahar.t

rajni bala,dubai
Friday, 26th September 2008 at 00:26:16

mr. govindh nethitadi kudu thinga..Really they scared about thalaivars masssssssssssss.That s why they are publishing flse news ...Thalaivar has to come to politics and he ve lead our tamil nadu.....
govind,abu dhabi
Thursday, 25th September 2008 at 13:29:00

நல்லாட்ச்சி தருவார்கள் என்றுதான் அன்று எண்ணினார், என்ன வாயிற்று, பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது, இது அனைவருக்கும் தெரியும், வேண்டும்மென்றே தலைவரின் இமேஜை கெடுப்பதர்க்கு ஒரு நாசகார கூட்டம் மீடியாக்களின் உதவி மூலம் இறங்கி உள்ளது, இன்று கூட ஒரு கல்லூரி கருத்து கணிப்பில் ரஜினிக்கு அரசியல் செல்வாக்கில்லை என்று செய்தி வெளியிட்டு உள்ளது, ரஜினியின் செல்வாக்கில் பாதிஅளவு கூட இல்லாதவர்களுக்கு வேண்டுமென்றே அதிக வாய்ப்பு உள்ளதாக வெளியிட்டு உள்ளது,தவறிகூட தலைவர் அரசியலுக்கு வரகூடாது என்ற வகையில் செய்திவெளியிட்டு உள்ளன, காற்றுள்ள பந்தை தண்னீரில் என்னெதான் அமுக்கினாலும் பந்து வெளிவரும், எனவே பந்தில் உள்ள காற்றை(மக்கள் சக்த்தியை) பிடிங்கினால் பந்தை தண்ணீரில் அமுக்கிவிடாலம் என்ற நோக்கில் தவறான பிரச்சாரம் மக்கள் சக்த்தியை பிறிக்கலாம் என்று கங்கன்ம் கட்டி அலைகிறார்கள், இந்த மக்கள் சக்த்தி தானாக, அன்பால், "ஒன்றுபட்ட சக்த்தி" இதை யாராலும் பிரிக்க முடியாது(மண்ணில் இந்த உயிர் இருக்கும் வரை), தலைவருக்கு எதிராண சக்த்திகள் விரைவில் நம் காலில் விழும் காலம் விரைவில்....,
K .KANNAN,Chennai
Thursday, 25th September 2008 at 12:41:09

Chumma nachinnu sonneenga....

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information