"தாயுக்கும் தாயான பூமி, அது தானே நம் எல்லோருக்கும் சாமி...." நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பாடல் நினைவிருக்கும்? தலைவர் அறிமுகமாகும் பாடல்களில் எனக்கு பிடித்தமான பாடல். படம்: ஊர்காவலன் (1987). இந்தப் பாடல் இங்கு எதற்கு? அதுதானே உங்கள் கேள்வி? நல்ல கேள்வி. அதற்கான பதிலை கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
தமிழ்நாட்டில் குக்கிராமங்கிளில் இருந்து புறப்பட்டு வேலை நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விட்டவர் கள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட நண்பர்களுக்குத்தான் இந்த செய்தி. எத்தனையோ ஊர்களுக்கு சென்றாலும், நம் இளமை காலத்தில் வசித்த ஊருக்கு இதயத்தில் தனி இடம் உண்டு அல்லவா? நமது ஊரைப் பற்றி வரும் எந்த ஒரு செய்தியும் சில நிமிடமாவது நம் நினைவுகளை பின்னோக்கி அழைத்து சென்றுவிடுவது உண்மதானே. எத்தனை நாடுகள் சென்றாலும், எப்படிப்பட்ட துறையில் பணியாற்றினாலும் என்னை முதலில் ஒரு விவசாயியின் மகனாக, விவசாயியாகத் தான் கருதுகிறேன்.
இது வரை என் வாழ்வின் பெரும் பகுதி எனது கிராமத்தில் தான். கல்லூரி படிப்பு வரை அனைத்து விவசாய வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். சில நேரங்களில் தற்போதைய நிலை கேள்விக்குறியாக இருக்கும். ஊர் நினைவையும் விட முடியாமல், இருக்கும் இடத்தையும் ஏற்று கொள்ள முடியாமல் ஓரு வித சலிப்பு ஏற்படுவதுண்டு. இந்த கால கட்டத்தில், நமது பிள்ளைகள், நாம் இருக்கும் ஊரில் மிக பரிச்சையமாகி விடுவார்கள். அவர்களின் இளமைக்காலம் இங்குதானே ஆரம்பிக்கிறது. நமக்கு வேர்கள் வேறு எங்கோ இருந்தாலும் அவர்களுக்கு எல்லாமே இந்த ஊர்தானே?
இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. என்னைப் போல் லட்சக்கணக்கானோர் உண்டு என்பதை நான் அறிவேன். நமது பெற்றோர்கள் இருக்கும் வரை சொந்த ஊர் சென்று வர நியாயமான காரணங்கள் இருக்கும். பெற்றோர்களோ வேறு சொந்தங்களோ இல்லாவிட்டால் சோதனைதான். தாய் மண் உடனான தொப்புள் கொடி பந்தம், அறுந்து, காய்ந்து, கருகி கடைசியில் காணாமலே போய்விடுகிறது.
பூர்வீக சொத்தை பராமரிக்க முடியாமல் போய்விடும். சொத்தை பாதுகாக்க உறவுகளை நாட வேண்டியிருக்கும். ஏதாவது நிலமோ, வீடோ இருந்தால் சொந்தக்காரர்கள்தான் குத்தகைக்கு எடுத்திருப்பார்கள். ஓரு தலைமுறைக்கு இதில் ஒன்றும் பிரச்சனை வராது. அடுத்த தலைறையினரும் நிலத்தை பத்திரமாக பாதுகாப்பார்கள் என்று சொல்ல முடியாது. விளைநிலத்தை வீணாக்கி வேறு ஏதாவது தொழிற்சாலை கட்டவோ, வேறு யாரிடமாவது குத்தகைக்கு விடுவதாலோ பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். விளை நிலங்கள் தரிசு நிலங்களாகும்.
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ஒரு காட்சி வரும். ஊரில் உள்ளவர்களின் நிலத்தை வாங்கி தொழிற்சாலை அமைக்க வினுசக்கரவர்த்தியும், ஷ்ரிகாந்த்தும் பேரம் பேசுவார்கள். செந்தாமரை, நிலத்தை அவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது என்று அருமையாக மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவார். நம் தலைவர் வசனம் இல்லாமல், முகபாவத்திலேயே அதை ஆமோதிப்பார். விவசாயம் செய்ய முடியாத நிலங்கள் நம் நாட்டில் எவ்வளவோ இருக்கிறது. தொழிற்சாலைகள், கணணிஅலுவலகங்கள் அங்கு வரட்டுமே. இது அப்துல் கலாம் அவர்களின் கருத்து.
இன்றைய நிலைமையில் தமிழ்நாட்டில் எவ்வளவோ விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விட்டன. விசாரித்துப் பார்த்தால் நில உரிமையாளர் வெளியூரில் உள்ளார் என்கிறார்கள். உள்ளுரில் விவசாயம் பார்க்கும் மற்றவர்களுக்கும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றாகி விடக்கூடாதல்லவா? தொழில் நிறுவனங்களும், நில புரோக்கர்களும் சுற்றி வந்து விலை பேசுகிறார்கள். என்றாவது ஒரு நாள், நில மதிப்பு கூடும் என்று, பணக்கார தொழிலதிபர்கள் வாங்கி நிலத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட வருடங்கள் விவசாயம் செய்ய வில்லை என்றால், அதை வெற்றிடமாக காண்பித்து விடுவார்கள். சில காலம் கழித்து பார்த்தால் குடோன்களாகவும் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களாகவும் மாறி இருக்கும். தொழிற்சாலைகள் நிறுவவதற்கு எதிராக பேசுவதாக நினைக்கவேண்டாம். விளைநிலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும். ஒரு பக்கம் விவசாயப்புரட்சி, இன்னொரு பக்கம் தொழிற்புரட்சி இரண்டுமே நமக்கு அவசியம். இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்வது?
தொடரும்....
அன்புடன் தினகர்.
Please note that your comment WILL NOT be published if:
It is not related to the above article.
It has marketing/promotion content.
It has personal attacks/verbal abuse/indecent words.
It has content that may hurt the feelings of anyone.
Thank you in advance for being decent when you express your comments.
Remember me?:
* Name:
* Email:
(Will not be published)
Country/City:
Word verification:
* Comment:
Language:English Tamil
Use F12 to toggle English & Tamil. Tamil typing powered by Thagadoor
Show Keymap Online Keymap Help
Fields marked with * are compulsary. Your Email id is just for our reference. It will not be displayed here or shared with anyone.