Other Articles
An interesting review on Rajini & Chiru
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
இவரல்லவா உண்மையான கலைஞர்!
(Sunday, 5th October 2008)

பொதுவாகவே, பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே சரியான தகவல்களைக் கொடுத்துவிட வேண்டும் எனபதில் தெளிவாக இருப்பவர் ரஜினி.

இதற்கு அவரது திருமண நிகழ்வே ஒரு சான்று.

திருப்பதியில் திருமணம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே புகைப்படக்காரர் ஒருவரை அழைத்து திருமணக் கோலத்தில் லதாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்ட ரஜினி, அன்று மாலையே அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அழைத்து பிரமாதமாக விருந்து கொடுத்தார். கூடவே கல்யாணப் பத்திரிகையுடன் அந்த ஸ்டில்லையும் கொடுத்து இதை பத்திரிகைகளில் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வந்துவிடாதீர்கள் என்று தெளிவாகக் கூறிவிட்டார்! (அந்த சந்திப்பில் நடந்த பல சுவையான சம்பவங்களை பின்னர் சொல்கிறேன்!)

பொதுவாக கல்யாண நேரத்தில் எல்லார் மனமும் அடுத்த நாள் நடக்கும் திருமண நிகழ்வில்தான் லயித்திருக்கும். ஆனால் இவரோ, தன்னைப் பற்றி அடுத்து நாள் கட்டுரை எழுத யாரும் சிரமப்படக் கூடாது, அதேநேரம் திருமணம் என்ற புனித நிகழ்வில் பப்ளிசிட்டி புகுந்து குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன் யோசனையோடு செயல்பட்டவர்.

அப்படிப்பட்டவர் எந்திரன் பட ஸ்டில்களை மட்டும் கொடுக்க வேண்டாம் என்றா சொல்லியிருப்பார்.

ஆனால் நடந்ததைக் கேளுங்கள்...

பெருவில் நடந்த எந்திரன் ஷூட்டிங்கில் நடந்த சில விஷயங்களை நம்மிடம் மனம் சிலிர்த்துச் சொன்னார் அந்தக் குழுவிலிருக்கும் நமது நண்பர்.

இந்தப் படத்தின் ஸ்டில்கள், செய்திகள் எதுவும் பத்திரிகைகளில் இப்போதைக்கு வரக் கூடாது என ஷங்கர் சொன்னபோது ரஜினி எந்த வித மறுப்பும் சொல்லவில்லை.

ஆனால், அனாவசிய எதிர்பார்ப்புகளைத் தவிர்க்க ஒரு செட் ஸ்டில்களைக் கொடுத்து விடலாமே, என யோசனைத் தெரிவித்தார்.

இயக்குநர் ஷங்கரோ, இந்தப் படம் பற்றிய எந்த தகவலும் இப்போதைக்குத் தரவேண்டாம். அதுதான் படத்தின் எதிர்பார்ப்பை அப்படியே வைத்திருக்கும். அதுமட்டுமல்ல, படத்தின் கதை ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். பத்திரிகையில் தொடராக வெளிவந்த பிரபலமான கதை இது. எனவே அதுபற்றி யாரும் எழுத மாட்டார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் தொழில்நுட்ப விஷயத்தில், நாம் செய்யும் ஒவ்வொன்றும் புதிதாக இருக்கும். எனவே அது பற்றி சின்ன விஷயம் கூட வெளியே கசியக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அதை ரஜினியும் ஒப்புக் கொண்டார்.

பின்னர் சில கட்டுப்பாடுகளை விதித்தார் ஷங்கர். செட்டில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் காமிரா போனை செட்டுக்குள் கொண்டு வரவே கூடாது.

யாரும் ஷூட்டிங் நிகழ்வுகளைக் குறிப்பு எடுக்கக் கூடாது. (இதையெல்லாம் மீறி ஒரு உதவியாளர் எடுத்த சென்போன் படங்கள்தான் லீக் ஆகி விட்டன...)

ஆரம்பத்தில் ரஜினி சாருக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒருநாள் அவர் காதுக்கும் இந்த கட்டுப்பாடுகள் போக, அடுத்த நிமிடமே அந்த அந்த கட்டுப்பாடுகளை தானும் கடைப்பிடிப்பதாகக் கூறிவிட்டார்.

‘பரவாயில்ல சார்... நீங்க இதுக்காக சங்கடப்பட வேண்டாம். உங்கள் வழக்கத்தில் எந்த மாறுதலும் இந்தப் படத்துக்காக செய்து கொள்ள வேண்டாம்’ என ஷங்கர் கூறியும், கேட்கவில்லை ரஜினி சார்.

வழக்கமாக தனது தினசரி நிகழ்வுகளை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்வாராம் ரஜினி சார். ஆனால் ஷங்கர் சாரின் புதிய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த குறிப்பு எழுதும் வழக்கத்தையே விட்டுவிட்டார்.

ஷங்கர் சார் ஒரு நாள் இதையெல்லாம் எங்களிடம் கூறி, ஒரு மிகச் சிறந்த நடிகருக்கான உதாரணம் ரஜினி சார்தான். வளரும் எல்லாருக்கும் அவர் ஒரு பாடம், என்றார் ரத்தினச் சுருக்கமாக.

இதைக் கேட்ட பிறகுதான் நாங்கள் முழு மனதோடு இயக்குநரின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட ஆரம்பித்தோம். பெரும்பாலும் ஷூட்டிங்கில் இருந்த நேரங்களில் நாங்கள் அனாவசியமாக ஊருக்கு ஒரு போன் கூட செய்யவில்லை.

இப்போதும், எந்திரன் ஷூட்டிங்கில் என்னவெல்லாம் நடந்தது என்று என் மனைவி கேட்டால்கூட நான் சொல்லமாட்டேன். உங்களிடம் நான் சொன்னது ரஜினி சாரின் பெருந்தன்மையைக் குறிப்பிடத்தான், என்றார் அந்த நண்பர்.

தானொரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. அதேபோல தொழில் என்று வந்து விட்டால், இயக்குநருக்கு எந்த அளவு கட்டுப்படுகிறார் பாருங்கள்... அதான் ரஜினி!

தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்!

-சங்கநாதன்






 
10 Comment(s)Views: 2919

THAMIN SYED,INDIA , CHENNAI
Sunday, 12th October 2008 at 03:19:04

தலைவா நி தமிழனும் அல்ல இந்தியனும் அல்ல உயர்ந்த மாபெரும் மனிதன்
raja,india/tuticorin
Wednesday, 8th October 2008 at 10:01:01

seyyum tholile theivam
babujitheboss,tirupur
Tuesday, 7th October 2008 at 02:28:54

மனுஷ‌ன்டா........
Nagai Thalapathi.S.Shaha Malim,India/Naore
Monday, 6th October 2008 at 13:10:59

இதனால் தான் தமிழகமே கொண்டடுகிறது....
Ramachandran,Dubai
Monday, 6th October 2008 at 02:45:04

Rajini is a very obedient actor. He listens to the director and work as per his order. Apdi illainaa.. ore oru director ivara vachi 25 padam direct pannirukka mudiyaadhu.. ippo ulla arai kurai acting skilled persons yaaraalayum oru director kitta prachnai illaama velila vara mudiyaadhu

Adhudhaan Rajini..

MAT,Penang, Malaysia
Sunday, 5th October 2008 at 12:28:16

superrrrrrr
Rajesh J,Chennai, india
Sunday, 5th October 2008 at 07:44:04

I think our rajini sir is the last actor for our tamilnadu to posses such a qualities and righteous attitutes. We should only thank GOD for this person and dwell in the goodness of Rajini sir.
RAJA,INDIA
Sunday, 5th October 2008 at 06:02:14

ADAN IPPAVUM AVAR ASAIKA MUDIATHA SUPER STARA IRUKAR...............................
kumaran,pondicherry
Sunday, 5th October 2008 at 02:51:09

great
m.mariappan,india/tuticorin
Sunday, 5th October 2008 at 01:45:48

Dear Sanga nathan

Your Title and comments and last explain is super.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information