நம் தலைவர் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்குவாரா... அல்லது சமூக மேம்பாட்டுக்கான புதிய இயக்கம் தொடங்குவாரா என்ற விவாதம் இன்றைக்கு மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
முன்பே நாம் இங்கே குறிப்பிட்டதுபோல பெரும்பாலான முன்னணி பத்திரிகைகள், ரஜினி இந்த முறை ஏதாவது ஒரு முடிவை எடுக்கத்தான் போகிறார். அதுவும் யாருடைய நிர்ப்பந்தத்தின் போரிலும் அல்ல... தான் விரும்பியபடி, என்று கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன.
இப்போதைய நிலைமைகளை கூர்ந்து கவனித்து வரும் ரஜினி தனது அடிப்படையைக் கட்டிக் காக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார். இந்த தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தனது பரந்துபட்ட ரசிக சமுதாயத்துக்கு தான் சொல்லவிருக்கும் செய்தி என்ன என்பதையும் முடிவு செய்து வைத்திருக்கிறார், என ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதத் துவங்கிவிட்டனர்.
ரசிகர்களுக்கு அவர் தனியாக ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒரு பாடம்தான் ரசிகர்களுக்கு. (ஆனால் களத்தில் நேரடியாக தங்கள் தலைவரைப் பார்க்கும்போதுதான் ரசிக மனம் பரவசமடைகிறது!)
இங்கே காட்சியாக விரியும் அண்ணாமலை பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சிச்சுவேஷனுக்காக எழுதப்பட்டவையாகத் தெரியவில்லை. ரஜினியின் உள்ளத்திலிருந்து எழுந்ததாகவே படுகிறது. ஒவ்வொரு வரியிலும் ஒரு பஞ்ச் வசனம் இருப்பதைக் கவனியுங்கள்!
கிட்டத்தட்ட ரஜினியின் கொள்கை முழக்கப் பாடல் இது என்றுகூடச் சொல்ல்லாம்.
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்....
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடேய் நண்பா... உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்...
இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது...
ஒவ்வொரு விதாயிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே...
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே...
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே...
அடேய் நண்பா உண்மை சொல்வேன்....
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்!
இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
அடேய் நண்பா உண்மை சொல்வேன்....
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்!
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!!
ஒரு நேரத்தில் நண்பர்கள் போல் தலைவரிடம் நடித்து, அவருக்கு நெருக்கமானவர்களாய் தங்களைக் காட்டிக்கொண்டு மக்களின் அன்பைச் சம்பாதித்த நடிகர்கள், இன்று பணமும் புகழும் கண்களை மறைக்க ரஜினியையே தூற்றிப் பேசுகிறார்கள்.
அவரையும் மிஞ்சி விட்டோம் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.
இந்த கயவர்களின் போலிப் படைகள் தலைவரின் ஒரு நடையில் பொடிபடுவது நிச்சயம்.
இமய மலைக்கு நிகரான நிலைத்த புகழுடன் நம் தலைவர் இந்தத் தரணியில் வலம் வரப்போவதும் நிச்சயம்!
இந்த சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக நின்று, மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட அவர் உத்தரவுகள் வழங்கும் நாள்தான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு.
அந்த நாளும் வரத்தான் போகிறது... ரஜினி என்ற உத்தம மனிதர் எத்தனை தாமதமாக ‘வந்தாலும்’ வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்!
- சங்கநாதன்
Please note that your comment WILL NOT be published if:
It is not related to the above article.
It has marketing/promotion content.
It has personal attacks/verbal abuse/indecent words.
It has content that may hurt the feelings of anyone.
Thank you in advance for being decent when you express your comments.
Remember me?:
* Name:
* Email:
(Will not be published)
Country/City:
Word verification:
* Comment:
Language:English Tamil
Use F12 to toggle English & Tamil. Tamil typing powered by Thagadoor
Show Keymap Online Keymap Help
Fields marked with * are compulsary. Your Email id is just for our reference. It will not be displayed here or shared with anyone.
12 Comment(s)
Views: 6028
kumar,banglaore Thursday, 13th May 2010 at 06:51:42
Rajini is only actor. so he is not come political. Because he is unknown political. so he is only act filim......
Sekar,India Wednesday, 8th October 2008 at 22:40:01
Sanganthan,
Still assuming Thalaivar's dialogue in film as a political one? Even educated fans are same like rural fans. Thalaivar already clearly said in Kuselan on his political dialogues in his movie. Please wake up man.