Related Articles
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?
இவரல்லவா உண்மையான கலைஞர்!
An interesting review on Rajini & Chiru
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
(Saturday, 11th October 2008)

மது ரஜினிஃபேன்ஸ் இணையதளத்தில் நடத்தப்பட்ட இரு வாசகர் கருத்துக் கணிப்புகள் தந்துள்ள முடிவுகளைக் கூர்ந்து நோக்குபவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைவார்கள்.

அதுபற்றி விரிவாகப் பேசுவதற்கு முன், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்த்துவிடலாம்.

கேள்வி: தலைவர் ரஜினி அடுத்து செய்யப் போவதென்ன?

இந்த கேள்விக்கு 2135 பேர் வாக்களித்திருந்தனர்.

இவர்களில் பெரும்பான்மையோர் அதாவது 37 சதவிகிதம் பேர் (790), ரஜினி புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாகக் கணித்துள்ளனர்.

அடுத்து அவர் சமூக நல இயக்கம் ஆரம்பிப்பார் எனக் கணித்து வாக்களித்துள்ளவர்கள் 599 பேர், 28.06 சதவிகிதம்.

எதுவும் கூற முடியாது எனக் கூறியிருப்பவர்கள் 454 பேர், 21.26 சதவிகிதம்.
அவர் அரசியலுக்கே வரமாட்டார் எனக் கருத்துத் தெரிவித்தவர்கள் 292 பேர். அதாவது 13.68 சதவிகிதம்.

அரசியல் கட்சிதான் தொடங்கப் போகிறார் எனக் கணித்தவர்கள், அவர் அரசியலுக்கு ஏன் வரவேண்டும் என்ற கேள்விக்கான காரணங்களை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளனர், பல கமெண்டுகள் வழியாக.

அரசியல் கட்சி வேண்டாம் எனக் கூறியிருப்பவர்கள், வழக்கம் போல், ரஜினி எனும் நல்ல மனிதர் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது என்றும், அவரது இயல்புக்கு அரசியல் எனும் சாக்கடை வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

இருதரப்புமே தங்களுக்குத் தெரிந்த உண்மைகள் அல்லது ரஜினியின் இயல்புகளின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி மக்கள் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும், கூடவே அவ்வப்போது சிவாஜி, எந்திரன் போல அசாதாரணமான படங்களையும் தரவேண்டும் என்று கூறியுள்ளவர்கள் நிறையப் பேர். இதில் ஒருவித சுயநலம் இருந்தாலும், ரஜினிக்கு பாதுகாப்பான பந்தயமாக இது அமையும் என்பது அவர்கள் கருத்து.

அடுத்த கேள்வி மற்றும் அதற்கான பதிகலைக் கவனியுங்கள்!

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்துவிட்டால்...

இதுவரை 1718 பார்வையாளர்கள் இக்கேள்விக்கு வாக்களித்துள்ளனர். இவர்களில் 43 சதவிகிதம் பேர், அதாவது 753 பேர், ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் மகிழ்ச்சியடைவோம் என வாக்களித்துள்ளனர்.

இன்னும் ஒரு 30 சதவிகிதம் ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் அதிருப்தி அடைவோம், ஆனால் அவர் ரசிகர்களாகத் தொடர்வோம் எனக் கூறியுள்ளனர்.

22 சதவிகிதம் பேர், அதாவது 388 பேர் மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு கமெண்ட் எழுதியிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் இந்த கருத்துக் கணிப்பில் அதிகம். இறுதிவரை விதவிதமான வேடங்களில் தனது அசாதாரண நடிப்பால் ரஜினி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தால் போதும் என்பதே இவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் ஒட்டு மொத்த சாராம்சம்.

ஆக, நமது ஆட்களிடமே இன்னும் ரஜினியின் அரசியல் குறித்த தெளிந்த பார்வை இல்லை என்ற உண்மை இந்த இரு சிறிய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

வற்புறுத்தலின் பின்னணி!

இந்த பிரச்சினை பெரிதாகக் கூடாது என்பதற்காகத்தான், தலைவர் தனது அரசியல் குறித்த இறுதியான நிலைப்பாட்டை இம்முறை தெரிவித்துவிட வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் சில நிர்வாகிகள்.

இதற்கு ஒரு நல்ல காரணமும் உள்ளது. தலைவர் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அதை இப்போதே தெரிவிததுவிட்டால் நமது ரசிகர்களிடம் அதைப் பக்குவமாகச் சொல்லி புரிய வைத்து விட முடியும்.

இல்லையேல், குசேலன் ரிலீஸின் போது, தலைவர் கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக விளம்பரப்படுத்தி அவரது இமேஜூக்கு வேட்டு வைக்கப் பார்த்தார்களே பத்திரிகைக்காரர்கள், அந்த மாதிரியாகி விடும் அபாயமுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் நிர்வாகிகள் இவ்வளவு வேகம் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார் ரஜினி மன்ற நிர்வாகிகளுள் ஒருவரான ஓம் சேகர், ஒரு பத்திரிகைப் பேட்டியில்.

சிந்திக்க வேண்டிய கருத்து இது!

-சங்கநாதன்


 
15 Comment(s)Views: 5334

Anaivarukkum_Nanban,Canada
Monday, 27th October 2008 at 15:56:07

Naanka(Fans) Thalaivara Arasiyalukku Vara Ventraam Entru Sonnaal.., Athu Nam "Paasa" Chinnam...! Athuve Mattavarhal Arasiyalukku Vara Ventraam Entraal...., Athu Avarhalin "Poraamai" Chinnam...! Paasaththitkum Poraamaikkum Evalavu Viththiyaasam Paarunka......!
Nagai Thalapathi. S.Shaha Malim,India/Nagore
Wednesday, 15th October 2008 at 05:14:48

12 வருடம் காத்திருக்கின்றோம் ஒரு மாஹாமஹம் போல பொறுத்தார் பூமி ஆள்வார்... என்ற நம்பிக்கையில்
Sankaran Krishnamoorthy,Indonesia
Tuesday, 14th October 2008 at 05:33:50

Dear all,

It is better to form "MAKKAL IYAKKAM". If Super star enters into politics, then it is difficult to run the party as everybody knows about our india's politics (SAAKKADAI). And Our super star know it very well. So that he still not make up his mind to enter in politics. I am a fan of rajini for the past twenty eight years. And for Super star, may be at the intial stage he came accorss failures. But after settled as super star, he never fail. In case if he fails in politics, i cannot bear that. I never let him go down.

Final word, "WHETHER OUR THALAIVAR ENTER TO POLITICS OR NOT, I (WE) WILL BE ALWAYS HIS TRUE FAN"

HOPE THE ABOVE STATMENT OF ME IS NOT ONLY MY STATEMENT. KODAANU KODI THALAIVAR RASIGARGALIN STATMENTUM KOODA.ED

EAGERLY WAITING FOR THALAIVAR NEXT MOVIE "ENDHIRAN"

THANKS N REGARDS
SANKARAN
JAKARTA, INDONESIA


bala,
Monday, 13th October 2008 at 04:16:40

there aresome mistakes in 2nd part of the writing....
the question asked was if thalaivar doesnt come to politics..
30% said they will be upset will continue as his fan.
but is has been written other way around(question)

sunil,India, Bengaluru
Monday, 13th October 2008 at 02:11:42

Hi to Boss fans, 101% boss won't come in to
Politics... Boss Nows How to help Pepole
(EX, our Mothers NO taking care of there Children , same thing will happen our boss nows takeing care of pepole with out politics our boss will take care of us this 1000%)

sunil

mohanraj,coimbatore
Sunday, 12th October 2008 at 22:37:20

thalivarin mudive nam yeitrukolvom
govind,abu dhabi
Sunday, 12th October 2008 at 10:09:42

நாம் யாரையும் குறைகூறமுடியாது, வடிவேலுக்கு பிரச்சினை வந்தபோது உடன் அரசியலில் போட்டியிடுவேன் என்று கூறுகிரார், அதிக அளவிலும் தமிழக மக்கள் விரும்பும் தலைவர் எத்தனை பிரச்சினை வந்தாலும் அமைதியாக உள்ளவர் நமது தலைவர் மட்டுமே, சாமான்ய ரசிகனின் ஆவலின் வெளிப்பாடு இருக்கத்தானே இருக்கும், நம் தலைவரின் ஆனையின் கீழ்தான் செயல்படவேண்டும் தவிர, மற்றவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாக கூடாது, அரசியல் கட்ச்சி ஆரம்பிப்பதை விட மக்கள இயக்கம் துவங்கினால் அனைவருக்கும் மிக சந்தோஷமாக இருக்கும், எல்லாம் வல்ல இறைவனை நாம் வேண்டிக்கொள்வேஅம்
Manikandan Bose,Chennai
Sunday, 12th October 2008 at 05:13:09

உன்னத‌ மனிதன் அவர். அவ‌ர் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாகவே அமையும். அவரின் எந்த முடிவுக்கும் நான் தலை வணங்குவேன்..
sivajirao,india/hyderabad
Sunday, 12th October 2008 at 04:21:13

HOLD YOUR BREATH MY SUPERSTAR IS COMING.......
RAJINI ENTRY-THE WAIT BEGINS!!!!!!!!!

Sridhar Ramachandran,
Sunday, 12th October 2008 at 04:18:44

Let us respect Rajini's decision and move on with our lives. It will be nice if he comes to politics. But if not, that should be fine with him and his fans: he has acheieved in his life and made us feel proud. He is great for sure. Let us move on. As a one man, practically, he is not going change the fate of Tamil Nadu even if he becomes the CM.
BAS...BASHA,chennai
Sunday, 12th October 2008 at 03:25:22

Hi friend there is a mistake : for this Question : I will be upset but still will be his fan. : Tamilil : இன்னும் ஒரு 30 சதவிகிதம் ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் அதிருப்தி அடைவோம், ஆனால் அவர் ரசிகர்களாகத் தொடர்வோம் எனக் கூறியுள்ளனர்.

Wrongly translated Pls check and clear the sentence.

Bas...basha

p.senthilraj,erode
Sunday, 12th October 2008 at 01:38:49

தலைவர் கட்சி ஆரம்பித்தால் நிரைய பணம் பார்க்கலாம் என நினைப்பவன் உண்மையான ரசிகனாக இருக்கமுடியாது அவர் என்ன செய்தாலும் துனையாய் இருப்பவன் தான் உண்மையான ரஜினி ரசிகன்.
rajagopalan,
Sunday, 12th October 2008 at 00:18:32

people who say tat talaivar shouldn't come to politics r not real rajini fans.......they are some black sheeps trying to messmerize the real fans
safiya sridhar,singapore
Saturday, 11th October 2008 at 23:45:37

I am the fan of our thalaivar near by 28 years, until now, we are waiting for our thalaivar entry the politics, but he is the humanic nature man, he know very well about every thing, suppose he decided to enter the politics mean, i am the first one appriciate him, because we know, in every election how the polticians use our thalaivar, after finish the election they are all throw away, but they dont know we are not a rubbish, we are a seeds
Peru,Kumbakonam
Saturday, 11th October 2008 at 23:03:30

I eagerly waiting for Thalaivr politics entry but the same time whatever he will decide it should come from Thalaiver heart then only it will be worth. Let he take the decision. If he will come to the politics I have 20 votes for our Thalaiver.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information