Related Articles
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Enthiran New Stills from Goa Shooting
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
(Tuesday, 21st October 2008)

ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.

தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)
ஆகியவை இந்தியிலிருந்தும்,

போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
ஆகியவை தெலுங்கில் இருந்தும்

பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
ஆகியவை கன்னடத்தில் இருந்தும்

முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)
ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.

வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே. இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்

பெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்‌ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார்.

* இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே. ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.

* இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது

* தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.

* தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.

* செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.

* அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.

-முரளிகண்ணன்






 
8 Comment(s)Views: 488

Diagarajan.T,India/Vanur
Saturday, 25th October 2008 at 02:02:41

THala please give some worthable movie like Batsha, Maapillai, . we just want some Chasing Movie...............
Anonymous,
Friday, 24th October 2008 at 00:10:49

Mr Bharath is remake of Amitabh starrer TRISHUL and not Kabhie Kabhie.

Naan adimai Illai is remake of Mithun Hit Pyar Jhuktha Nahi

shrinivas,UAE
Thursday, 23rd October 2008 at 06:39:02

Kabhie Kabhie was made in tamil as Mr. Bharat
edwinsimon,india/chennai
Thursday, 23rd October 2008 at 01:40:29

super thalaiver na thalaiver than
napoleon,India Bangalore
Wednesday, 22nd October 2008 at 02:47:45

Kuppathu Raja in Hindi Rampur Ka Laxman not Do yaar.
Very good article.Thanks for the informaton.

Sivakumar,Tirupur
Tuesday, 21st October 2008 at 22:22:38

Athana Thiramai Irundhadhunala than avar Super Star From Endhiran He is World Super Star
haji - Dubai,
Tuesday, 21st October 2008 at 14:34:09

Didn't you miss Peddharayudu and Bulandi. I heard from some of my North Indian and Telugu friends Without his 15 min screen appearance those films wouldn't be a such success. What you think?
k.santhoshkumar,india
Tuesday, 21st October 2008 at 13:47:12

Rajini is a powerfull man in Tamilnadu

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information