Other Articles
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
(Tuesday, 21st October 2008)

து என்னமோ தெரியவில்லை... ஒரு நிகழ்வுக்கு ரஜினி வரமாட்டாரா என ஏங்கித் தவிப்பவர்களும் கூட, அவர் வந்துவிட்டார் என்றதும் இஷ்டத்துக்கும் வார்த்தைகளை விட்டுவிடுகிறார்கள்.

காவிரிக்காக இருமுறை நடந்த போராட்டங்களின் போதுதான் தமிழ் சினிமாக்காரர்கள் ஒவ்வொருவரும் ரஜினி மீது எந்த அளவு பொறாமையும் துவேஷமும் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை சாதாரண மக்களுக்கும் புரியத் தொடங்கியது.

அதிலும் ஒகேனக்கல் உண்ணாவிரத நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை மனக்கண்ணில் ஓட்டிப் பார்ப்பவர்கள், அடுத்து சொல்வது, இந்த மாதிரி முட்டாப் பசங்க நடத்தற நிகழ்ச்சிகளுக்கு ரஜினி ஏன் போகணும்... இதுல கலந்துகிட்டுதான் அவரோட தமிழுணர்வைக் காட்ட வேண்டியதில்லை, என்பதே!

உண்மைதான்... தங்களுக்கு உதவ வரும் ஒரு நல்ல மனிதரை சபையில் வைத்து அவமானப்படுத்திப் பார்க்கும் இவர்களுக்கு இடம் பொருள் ஏவலறிந்து பேசத் தெரியாது. கொடுக்க வரும் கையை வெடுக்கென்று பிடுங்கும் நான்கறிவு ஜீவன்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது!

இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் இவர் போய் ரஜினியைக் கூப்பிட்டிருக்கிறார். அவரும் பெருந்தன்மையோடு வர ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில் நிகழ்ந்ததைப் போன்ற அவமானங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் இதே சரத்குமார் உறுதியளிப்பாரா?

சந்தேகம்தான். அதனால்தான், ‘எப்போதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் குறியாக இருக்கும் தலைவர், இந்த முறை அப்படிச் செய்யாமல் இருந்தால் கூட நல்லதுதான்’ என பல ரசிகர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில்....

சமீபத்தில் ராமேஸ்வரம் வரை போய் இலங்கை அரசுக்கு எதிராகவும், செத்து மடியும் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்கள் தமிழ் கலைஞர்களும் படைப்பாளிகளும்.

ஆனால் கூடவே தங்கள் குறுகிய மனப்பான்மையையும் கொட்டிவிட்டு வந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு வராத நடிகர்களை, குறிப்பாக ரஜினியை விமர்சித்துப் பேசுவதில்தான் இவர்கள் கவனமெல்லாம் இருந்தது அன்றைக்கு.

ராஜேந்தருக்கும் அவர் மகனுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை ராமேஸ்வரம் கூட்டம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

‘தமிழகத்தை தமிழன்தான் ஆளணும், தெலுங்கனுக்கும் கன்னடர்களுக்கும் இடம் தரக்கூடாது. ஆட்சியைப் பிடிக்க மட்டும் ஆசையிருக்கு, ஆனா இந்தப் போராட்டத்துக்கு வர மனமில்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் இவரைப் போய் உச்ச நட்சத்திரம் என்று தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகிறீர்களே...’ என்று தன் வக்கிரத்தை வாரிறைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார் இந்த முன்னாள் இயக்குநர்.

இன்னும் சின்ன... பெரிய இயக்குநர்கள் சிலரும் தங்களால் முடிந்தளவு இதே ‘வேலை’யைத்தான் செய்தனர், ராமேஸ்வரத்தில்.

இப்போது இவர்கள் அனைவரும் சென்னை உண்ணாவிரதத்துக்கும் வருவார்கள், (இவர்களும் நடிகர்களாச்சே...) வாய்க்கு வந்ததை பேசி வம்பை விலைக்கு வாங்கவும் வாய்ப்புள்ளது. ஆக, இனப் படுகொலைக்குள்ளாகியிருக்கும் அந்த ஈழத்து சகோதரர்களை சாக்காக வைத்து தங்கள் மன விகாரங்களை ரஜினிக்கு எதிராக அரங்கேற்றுவார்களோ என்பதுதான் பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

கலைஞர்களே... ரஜினியின் வருகை இலங்கைப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கப் போவதில்லை என்றாலும், அவர் மீதான உங்கள் பொறாமையை, வக்கிரத்தைக் காட்டுவதற்குப் பதில் கலைக்குடும்ப ஒற்றுமையைக் காட்டும் வகையில் நடந்து கொள்ளுங்கள். பிரச்சினை உடனடியாகத் தீருகிறதோ இல்லையோ... உங்கள் குரலுக்கு ஒரு உலகளாவிய கவன ஈர்ப்பாவது கிடைக்கும்.!

-சங்கநாதன்


 
36 Comment(s)Views: 9482

Previous Page
Previous
123
Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information