Other Articles
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
(Wednesday, 22nd October 2008)

அன்பு நண்பர்களே,

இன்றைக்கு கர்நாடகத்தையும் சிங்களரையும் எதிர்க்க ஓரணியில் திரள முடியாத பல பேர் ரஜினியை எதிர்ப்பது என்றால் ஒரு கிலோ அல்வாவை தின்ன முடியாமல் தின்னும் சந்தோஷத்துடன் ஒன்றாக மேடை ஏறுவார்கள்...

நமக்கு என்ன செல்வாக்கு இருக்கு, நாம சொல்வதை எத்தனை பேர் கேட்பார்கள் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் இவர்கள் உளறுவது வழக்கமாகிவிட்டது....

அடிமனதில் ஏற்படும் அளவிட முடியாத பொறாமையும், வயித்தெரிச்சலும்தான் இதற்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...

அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை, ஒரு பையன் ஒன்றாம் கிளாசில் இருந்து டிகிரி வரை அவனே முதல் ரேங்க் எடுத்துட்டு இருந்து அவனுக்கும் அடுத்தவங்களுக்கும் பல நூறு மார்க் வித்யாசம் இருந்தா எவனுக்குத்தான் வயிறு எரியாது?.... இதுல வேற வாத்தியாருங்களும், நல்ல பசங்களும், ஏன் பக்கத்து ஸ்கூல் வாத்தியாருங்களும் கூட அந்த பையனையே தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா இவனுங்களுக்கு நோவாம என்ன பண்ணும்? அந்த பையன் வேற நல்ல பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து அவங்களையும் பெரிய ஆளா ஆக்கறான்.. படிப்பை விட்டுட்டு போவான்னு பார்த்தா, டிகிரி, பிஎச்டி, ஆராய்ச்சின்னு மேல மேல படிச்சிட்டே இருக்கான்..... இதுங்களுக்கு அவன்கிட்ட போய் கேட்கவோ, அவனை புரிஞ்சிக்கவோ விருப்பம் இல்லை... இதுங்க வீட்ல வேற "அவனும் உங்கள மாதிரி பிள்ளை தானே, நாலு பேர் கிட்ட எப்படி நல்ல பேர் வாங்கறான், நீயும் இருக்கியே மர மண்டை, உதவாக்கரை.." என்று தினமும் திட்டு வேற... அதுங்க என்ன பண்ணும்? மனசு புழுங்கும்..... நல்ல புத்தி இருந்தா அவன்கிட்ட போய் சேரும், இல்லேன்னா, அப்பப்போ ஒளிஞ்சி நின்னு மண்ண வாரி தெளிக்கும். பொய்யான கோள் மூட்டும். அசந்த நேரத்துல கல்ல வீசி அடிக்கும்... இது போன்ற சின்னப் பிள்ளைங்கள என்ன பண்ண முடியும்? ஒழிஞ்சு போய் தொலைன்னு விட வேண்டியதுதான்....

சரி விஷயத்துக்கு வருவோம்...

இப்போ ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? நாலு பேர் சேந்து ஒரு மைக் செட் கிடைச்சிட்டா, என்ன விஷயமோ அதை விட்டுட்டு பித்துக்குளிதனமா தன்னோட ஆற்றாமையை வெளிப்படுத்தனும்னு நினைக்கிறவங்கள நினைச்சா சிரிக்கவா அழுவவான்னே தெரியலையே?

டி ராஜெந்திரர்னு ஒருத்தர்.... விஷய டி ராஜேந்திரரா இருந்த காலத்துல எல்லாருக்கும் அவரை பிடிச்சது..... இப்போ ரைமிங் வரணும்னு என்னத்தையோ பேசுற அவரை பார்த்தா பாவமா இருக்கு.... இன்னிக்கு, ஈழத் தமிழர் கொல்லப்படுராங்கன்னு நீலிக் கண்ணீர் வடிக்கும் இவரு, ஒரு மாசம் முன்னாடி அதே ஸ்ரீலங்காவில ஒருபக்கம் தமிழர்கள் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது இவரு பையன் இன்னொரு பக்கம் குத்து பாட்டு ஷூடிங்க்ல இருந்தான்னு பிரஸ்காரங்களக் கூட்டி பாஸ்போர்ட் ஆதாரத்தோட முழங்கினார்.. அப்போ தெரியலையா தமிழனோட வலி?

நடிகர் சங்கத்துல வேற ஒரு நாள் அறிவிச்சு அதுக்கு கட்டுப்பாட்டு வரேன்னு சொன்ன ஒரு ஆள, இங்க ஏன் வரலைன்னு கேக்கிறீங்களே? நீங்க என்ன, உங்க எல்லா அமைப்புக்கும் அவருதான் பிரதிநிதி, தலைவர்னு சொல்லாமல் சொல்லுறீங்களா?

இன்னொருத்தர், பாரதி ராஜா. அவருக்கு எம்ஜியாரு மலையாளின்னோ ஜெயலலிதா கன்னடர் என்றோ தெரியாது... ஐயோ பாவம், ரஜினி மட்டும்தான் தெரியும்... என்ன பண்றது? செலெக்டிவ் அம்னீஷியா அப்படின்னு பெரிய வார்த்தையை எல்லாம் இவருக்கு உபயோகிக்க கூடாது.... டாக்டர்கள் வருத்தப் படுவார்கள்....

அப்புறம் சீமான்.... இவர் வந்து ஒட்டு மொத்த தமிழ் குடும்பத்தின் முகவரி என்று தானே நினைத்துக் கொண்டு இருப்பவர்.... திடீரென்று முளைத்து, அதற்குள்ளாகவே எங்க மைக், எங்க மைக் என்று துள்ளுபவர்....

இவங்க எல்லோருக்கும் ரஜினின்னா ஒரு விளையாட்டு பொம்மை.... ஏன்னா அதப் பத்தி ஏதாச்சும் பண்ணினா ஜனங்க பார்ப்பாங்க, அதுவும் எந்த இடைஞ்சலும் பண்ணாது, ஆட்டுற வரைக்கும் ஆட்டித்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம்.....

ஆனா ஒருநாள் இல்லன்னா ஒருநாள் அந்த பொம்மை, சம்ஹாரம் பண்ணும் ரோபோவாக மாறும்போது அதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஓடுவார்கள்....

அது வரைக்கும் நாம காந்தி சொன்ன மாதிரி கெட்டதை கேக்காம காதையும், கெட்டதைப் பார்க்காம கண்ணையும் முடிப்போம்... என்ன சரியா?

அன்புடன்
ஈ ரா


 
28 Comment(s)Views: 8102

12Next Page
Next
jurong j,jurong singapore
Tuesday, 28th October 2008 at 17:12:43

the boss to run for presidency in india. all over the world indians would be proud of it.

Anaivarukkum_Nanban,Canada
Monday, 27th October 2008 at 15:26:32

Vanakkam Friends....! Naan Super Star Fan...! Irunthaalum Eezha Thamizhan....! Ennoda Karuththu..., Mela E.Ra Anna Sonnathu Correct. Barathiraja Avarhal Kolhai Enakku Pidichchu Irunthathu...! Aanaalum Avar Namma Thalaivara Aadda Ninaikirathu Thappu ....! Rajini Sir Fan Ennum Peyar la Naan Nichchayam Thamizharukku Support ah Iruppan...! Thalaivara Disturb Panna Ninaicha, Fan Kooda Sernthu Naanum Ezhuvean...! Niraiya Irukku Enakku Ezhutha Manam Varala...! Apparam Fan cluba Thappa Ninaichuduvaanka...! Thalaivar Avar Fans Elloraiyum Ethukku Disturb Pannanumnu Ninaikkalaam..! Athanaala Namakku Sollaama Irukkalaam..! Sorry To Tell This Thalaivarukkaaha Naama Konjam Puratsi Seiyurathu Nallathu...! Naan Ethaavathu Thappa Solli Iruntha Sorry Friends.......! Thalaivar Vaazha..! Thalaivar Fans Ellorum Vaazha.......!
Anandharamakrishnan, India,Tamil Nadu
Sunday, 26th October 2008 at 01:39:55

Now a days "Theivam nindru kolluvathillai" Andre kollukiradhu. Whatever they spoke about rajini, now those fellows suffering in Jail. So dont say something which is not true. Otherwise immediate punishment will be there.
Thinakar,
Saturday, 25th October 2008 at 10:10:39

"வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்" ‍‍. தலைவர் ராஜா சின்ன ரோஜா வில் பாடியது.

ஆட்டம் போட்டவர்களின் வாயில் சனியை உக்கார வைத்து தண்டனையை கொடுத்து விட்டான் ஆண்டவன்.

தலைவர் சொன்னது போல் , நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய (மைக்குகள்?) கொடுப்பான் .ஆனா கை விட்டு விடுவான்.

புரட்சி தமிழனுக்கு வேற மாதிரி வித்தியாசமா ஏதோ காத்திருக்குன்னு நெனைக்கிறேன்

Chithamparam,Sri lanka
Saturday, 25th October 2008 at 01:24:23

rajni is a good man i love him
Chithamparam,Sri lanka
Saturday, 25th October 2008 at 01:23:38

RAjni is a very good actor and good man i love him
kisho,colombo
Saturday, 25th October 2008 at 01:05:44

u can,t tell that ur rajni is da bst .u r jst sittin in india
natessan,Chennai
Friday, 24th October 2008 at 10:36:44

excellent and crystal clear article---the contents of the article should necessarily reach everyone's head----a day will come when our superstar is the Chief Minister of tamilnadu.
ss,Chennai
Friday, 24th October 2008 at 08:33:47

அந்த நடிகை பெயர் பூஜா. படம் தம்பி!
kanthi mathi nathan,india,chennai
Thursday, 23rd October 2008 at 21:28:07

dear admin,

which was the movie that Mr.Seeman directed in which a srilankan artist acted,pls confirm

Nagai Thalapathi S.Shaha malim,INDIA/ NAGORE
Thursday, 23rd October 2008 at 11:04:37

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதில் உறுதிகொள்வோம். சிங்கள நடிகையை வைத்து படம் எடுத்த சீமான் தமிழர்களை பற்றி பேச அறுகதை இல்லை...
கிரி,Singapore
Thursday, 23rd October 2008 at 08:53:08

//Giri This article was written by E.RA for Rajinifans.com. Thanks Admin// மன்னிக்கவும், நான் நமது இன்னொரு பதிவர் ஈ ரா என்று நினைத்து விட்டேன். எதுவாகினும் பதிவை எழுதிய ஈ ரா அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

----------------------------


Hi Giri

No apologies between us pls.

BTB,

This ஈ ரா is none other than இன்னொரு நமது பதிவர் ஈ ரா :)


Thanks

Admin

-------------------------


mohanraj,coimbatore
Thursday, 23rd October 2008 at 08:16:16

nama Gandhi valil povom, nam kalam varum evarkal nammedam manipu katkum nal varum
azhakan,UK
Thursday, 23rd October 2008 at 08:12:27

seeman..barathi raja and company.. is just a group of clowns.. they are nothing to the ordinary public.

rajini should stay calm as he's now.

கிரி,Singapore
Thursday, 23rd October 2008 at 03:26:52

நல்ல பதிவு.. பதிவர் ஈ ரா அவர்களின் (இவரை போல யாருடைய பதிவை எடுத்து போட்டாலும்) தளத்தின் சுட்டியையும் கொடுத்தால் நன்றாக இருக்கும். அவருக்கும் ஒரு திருப்தி இருக்கும்.


----------------------------------

Giri

This article was written by E.RA for Rajinifans.com.


Thanks

Admin

--------------------------------

vetrivelmurugan,tuticorin
Thursday, 23rd October 2008 at 03:12:34

மனது வேதனையால் துடிக்குது அண்ணா ஓரு
முடிவு எடுங்கள்.

m.mariappan30,b9931
Thursday, 23rd October 2008 at 02:38:09

Dear Thalaivar

You are teaching always to us only piece and silent

chandru,tamilnadu
Thursday, 23rd October 2008 at 00:45:40

singam thoongura time la eli(rat) atoda pidari(hair) pudichu vilayadum . paavam singam eluntha athu ene panum nu eli ku theriyathu . athuthan tamilnatla nadanthu kittu iruku .
Jeyabalaji,Chennai
Thursday, 23rd October 2008 at 00:30:00

Ivanunga Meda pottu pesitta intha pirachinai mudinchiduma. Yaar Naattai aala venumnu makkal than mudivu pannanum. Ivanungalukku makkal kitta selvaakke kedayathu. Ivanungalukka Tamil Heroine'se kedaikkaliya. Sooriyana pathu kathura .....
arul,bangalore
Thursday, 23rd October 2008 at 00:27:06

yenda vetti naigala.yenda neengallem muttalugala oru nadikanal intha ceylon thamil prachanaiyai mudikkamudiyuma.ac busil yethavathu oru orrukku poi mental mathiri kathavendiyathu kettal tamil unarvu enru solvathu.yenda ungallukku unmaiyana unarvu ullathendral ungal pillaigalana simbu,manojai ellam poi ltte serthuvidavendiyathuthane.dei neengal migaperiya nadigargal enru ella tamil makkalukkum theriyum.appadiye tamil makkal ungalai hero akkividuvargal enru nappasiyil thiriyavendam neengal ennaikkum oru fuse pona palbuthan.


12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information