Related Articles
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
(Friday, 24th October 2008)

ருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!

இந்த வழக்குச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் அனுபவப்பட்டுமிருப்பீர்கள்.
அதற்கு இப்போதைய உதாரணம் சத்யராஜ்.

‘இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்காக எழுதறீங்க...’ என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் இன்றைய சபைகளில் யோக்கியனின் குரல் எடுபடுவதில்லை. நிஜத்திலும் பிரமாதமாக நடிப்பவர்தான் இன்றைக்கு புரட்சித் தமிழன்களாக... இன முரசுகளாக உலா வர முடியும்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்களைப் பற்றியும்,. இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் பற்றியும் நீண்ட நாள் கழித்து இப்போது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் சத்யராஜ்: ]

“...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி இருந்தது. அதைவிட்டுவிட்டு போக முடியாத சூழல்..!

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

கலைஞரின் இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்...”

- தமிழுணர்வெல்லாம் சரிதான். இவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று சாதாரண ரசிகனுக்கே புரியும்போது ரஜினி ரசிகர்களான நமக்குப் புரியாதா...

ஆனால் எந்த அடிப்படையில், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழகத்திலிருக்கவே லாயக்கற்றவர்கள் என்று சொல்கிறார் சத்யராஜ்?
ராமேஸ்வரம் போராட்டத்தின்போது இவருக்கு எப்படி இவரது வீட்டு விசேஷம் முக்கியமாக இருந்ததோ, அதேமாதிரியான விசேஷங்கள் மற்றவர்களுக்கும் இருக்காதா... அல்லது இவர் ஒருவருக்குத்தான் குடும்பமே இருக்கிறதா...?

ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் தமிழர்களே அல்ல என்றார் பாரதிராஜா. அப்படியெனில் அது இவருக்கும் பொருந்தும் அல்லவா!

அடுத்து இவர் எத்தனைப் பெரிய பொய்யர் என்பதற்கு ஒரு உதாரணம் இந்தப் பேச்சு. இவர் வீட்டு விசேஷம் என்று சொன்னதெல்லாம் சும்மா... இவருக்கு அன்றைய தினம் பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு இவரே தகவல் அனுப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எதையும் தீர்மானிக்கிற சக்தியாக இல்லாத இவருக்கே இவ்வளவு என்றால், ஒரு மொழியின் திரைத்துறையையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழும் ரஜினிக்கு எத்தனை முக்கிய பணிகள் இருக்கும்... அவர் மட்டும் அவற்றையெல்லாம் கவனிக்காமல் கூப்பிட்டவுடன் ஓடி வந்துவிட வேண்டுமா...?

இவரைப் போன்ற ஆசாமிகள் பேச்சுக்கெல்லாம் மீடியா தருகிற முக்கியத்துவம்தான் மைக் கிடைத்தவுடன் இவர்களை கண்டபடி உளற வைக்கிறது.

ஆனால் ஒன்று...

ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ!

-சங்கநாதன்


 
45 Comment(s)Views: 12162

Previous Page
Previous
123
கிரி,Singapore
Friday, 24th October 2008 at 07:00:52

நல்ல உரைக்கிற மாதிரி சொன்னீங்க.

நானும் ஏன் பங்குக்கு சத்யராஜ் மற்றும் திரை உலகினரை கொஞ்சம் "வாங்கி" இருக்கிறேன்

http://girirajnet.blogspot.com/2008/10/blog-post_24.html

yuvaraj,India/Puducherry
Friday, 24th October 2008 at 06:58:19

சரியா சொன்னீங்க நன்பா......... நன்றி
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Friday, 24th October 2008 at 06:52:34

இவனெல்லாம் ஒரு ஆளூன்னு நாம இவனுக்கெல்லாம் ஒரு பதில் சொல்லனுமா... நம்ம நிலைய பார்த்திர்களா நண்பர்களே. வீட்ல விசேஷமா (எத்தனை மாசம்) மானம் கெட்ட ஜென்மைங்கள்..

PALANI,India/Tuticorin
Friday, 24th October 2008 at 06:46:24

mariyathaikkuria sanganathan avarkale
ungaludya indha kadaisi paragraph sathayarjukku mattumalla thadi nadikarukkum, bharathi rajavukkum porundhum.
ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ

Jeyabalaji,Chennai
Friday, 24th October 2008 at 06:37:22

Ignore this dog's speech at any cost.

R. Jeyabalaji

Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information