Other Articles
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
அது ஒரு பாண்டியன்’காலம்!
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா?
(Sunday, 2nd November 2008)

ழம் என்றால் ஒரு யுத்த பூமி, சோக பூமி.. அங்கு இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை தவிடு பொடியாக்கிய ரஜினி, அங்குள்ள மக்களின் அன்பையும், இனிமையையும், அவர்கள் துயரையும் பல கோடி தமிழர்களும் உணரும் வண்ணம் உணர்த்தி இருக்கிறார். 

ரஜினி பேசியதால் யுத்தம் நின்று விடப் போவதில்லை.. சிங்களரின் கொட்டமும் அடங்கப் போவதில்லை.. ஆனால், பல லட்சம் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களின்பால் ஒரு கழிவிரக்கம் தோன்ற ஒரு தூண்டு கோலாக அவர் பேச்சு அமைந்தது என்றால் மிகையல்ல...

எவ்வளவோ பேர் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும், அவர்கள் உணர்ச்சிக்குப் பின்னால் ஒரு நம்பகமற்ற தன்மையும், சுய நலமும், அரசியல் ரீதியான சமாளிப்புகளும் தான் பிரதானமாகத் தெரியுமே தவிர அவர்களின் கருத்து எடுபடாது... மிகச் சிலர் உண்மையான உணர்வுகளை, சரியான முறையில் வெளிப் படுத்துவார்கள்... அந்த வகையில், தனது தெளிவான பேச்சின் மூலமும், தைரியமான கருத்தின் மூலமும், தனது பெரும் ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் இருக்கும் கோடானு கோடி தமிழ் நெஞ்சங்களுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்த பாங்கு என்றைக்கும் பாராட்டுக்கு உரியது...

நிதியையும் கொடுங்கள், நீதியையும் சொல்லுங்கள் என்று உரக்க குரல் கொடுத்து தான் தெளிவான பார்வை கொண்டவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் ரஜினி...

ராமேஸ்வரத்தில் ஈழருக்கு உதவி ஓடியிருக்க வேண்டிய வெள்ளத்தில் தம் வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொண்ட வாயுள்ள ஜீவன்கள் இனியாவது திருந்தி ஓரணியில், சத்தியத்தின் பக்கம் நின்றால் சரித்திரம் அவர்களை வாழ்த்தும்...

மடியில் கனமில்லாத, சுய நலம் இல்லாத, இதை வைத்து அரசியலோ விளம்பரமோ தேட வேண்டியிராத, ஆட்சியை பிடிக்கவோ - தக்க வைத்துக் கொள்ளவோ தேவை இல்லாத சராசரி தமிழனின் உணர்வைப் படம் பிடித்து, அந்த உணர்வை எழுப்பிய ரஜினி என்னும் மனிதனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்...

ஒரு நல்ல மனிதனின், வார்த்தைகள் எந்த விதமான நல்ல அதிர்வுகளை உருவாக்கும் என்பதை அவரது பேச்சைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் - அவர்களும் நல்லவர்களாக, சுய நலம் இல்லாதவர்களாக இருந்தால்.....
 
நண்பர்களே,
ஒ பக்கங்களில் மட்டுமல்ல ஓராயிரம் பக்கங்களினாலும் சாதிக்க முடியாத சாதனையை "ஆம்பளைங்களாடா நீங்க?" என்ற ஒரே வாக்கியத்தில் சாதித்து சாமானியனை தட்டி எழுப்பும் சக்தி அந்த காந்தத்தில் உள்ளது... அந்தக் காந்தத்தின் அதிர்வலை மென் மேலும் பரவி, சமுதாய அவலங்களை சருகாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை....

ஈழத் தமிழர் விவகாரத்தை அரசியல் ஆக்கும் வியாதிகளின் கூச்சலுக்கு மத்தியில் ஆதாயம் கருதாமல் ஒலிக்கும் இந்தக் குரலுக்கு மதிப்புக் கொடுத்து உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்....
இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவரவர் கடவுளை வேண்டி, நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் விரைவில் விடியல் பிறந்திட பிரார்த்திப்போமாக....

வாழ்க தமிழ், வாழ்க ரஜினி...

அன்புடன்
ஈ ரா


 
22 Comment(s)Views: 8795

12Next Page
Next
nanda,Chennai
Friday, 21st November 2008 at 08:38:17

மொஹன் அ........ ஹ்**mohan a** H**e, f**k, B******,
b.viswanathan,pollachi, tamil nadu, india
Saturday, 8th November 2008 at 02:36:56

அண்டை நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் மூலம் தமிழன் எனறு நிரூபித்துள்ளார்.
SL Boy,Sri Lanka
Thursday, 6th November 2008 at 02:49:56

கன்னா mohan.
dont try to prove that u are a fool cus already has proved.

Vijay,USA Burlington
Monday, 3rd November 2008 at 19:43:42

Kannaa Mohan.. nee vaazhkaila ethanai perukku nallathu panni irukka..? Aduthavangalukkaaha ethaavathu uruppadiyaa senjirukkiya..? Nee adichirukka commenta paarthaa mothalla unakku thaan mael vaai.. keel vaai.. rendu adakkamum thevainu nallaa puriyuthu. Paarthu ma.. kilinjuda pohuthu.. unnoda vaai. (Moderators n all fans.. romba sorry.. mudiyala.. athe vadivel baashaila sonnen..)
mohan,USA
Monday, 3rd November 2008 at 14:33:42

ரஜினியின் பேச்சு, வடிவேலு பாஷையில் சொல்லப் போனால் "இது என்ன? சிறுபிள்ளைத்தனமா இருக்கு?". ஒரு முறை பட்ட பிறகும் கூட (ஒக்கேனக்கல் விஷயத்தில்) இந்த மனிதர் மாறவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான். இனிமேல் வருடத்துக்கு 10 முறை இமயத்துக்குச் செல்லவும். வாயடக்கம் வர ஒரு வாய்ப்பு இருக்கிறது.

nicholas samuel,malaysia
Monday, 3rd November 2008 at 10:52:24

excuse can u pls translate in english
so that people all over the world wants to knw wat is happening to rajini

prabhu,india/bangalore
Monday, 3rd November 2008 at 05:39:27

please transalate in english
rajini sir has fans all over the world

Kripa Saravanan,India
Monday, 3rd November 2008 at 02:06:10

Anonymous, உங்கள் பெயரை சொல்லி கூட உங்களால் உங்கள் கருத்தை பதிவு செய்ய முடியவில்லை... உங்களை என்னவென்று அழைப்பது...?

நம் தலைவர், "ஆம்பளைங்களா நீங்க...?" என்று யாரைப் பார்த்து கேட்டார்...? மக்களுக்கு நல்லாட்சி புரியும் அரசாங்கத்தை பார்த்தா...? இல்லை... மக்களை அவதியுற செய்யும் அரசாங்கத்தை பார்த்து... இப்படிப்பட்ட அரசாங்கத்தை பற்றி திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்று பார்போம்,


2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.18 கொடுங்கோன்மை
554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
விளக்கம்: நடு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.


இவ்வாறாக நல்ல உள்ளங்களின் மதிப்பை அந்த அரசு இழந்துவிட்டது... நம் தலைவரின் பேச்சுக்கு காரணமாய் அமைந்தது நம் ஈழ மக்களின் (ம‌)ரணங்கள்...

எனவே இனிமேலாவது நம் தலைவரை எப்போதும் குறை கூறுவதை நிறுததிவிட்டு... அவர் எதை பற்றி பேசுகிறார் என்று ஆராய்ந்து பேசுங்கள்... முடிந்தால் ந‌ம் மக்களுக்காக என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்... முடியவில்லை என்றால், அவர்களுகாக பிரார்த்தனை செய்யுங்கள்...

நன்றி
கிருபா. சரவணன்

tamil,Chennai
Monday, 3rd November 2008 at 00:25:46

ரஜினி ரசிகர்களே நான் தான் அந்த அனானி. அப்போதே தமிழன் என்று பேர்போட்டுத்தான் பதிவு செய்தேன். அது ஏன் வரவில்லை என்று எனக்கு புரியவில்லை. உங்கள் நாட்டாமை (admin) தான் சொல்லவேண்டும்.

//வழ வழ எனவும் வள வளவெனவும் சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் பல நூறு குரல்களுக்கு மத்தியில் உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் இழந்த தாய்மார்களின், குழந்தைகளின் வலியை உலகெங்கும் உள்ள இரக்க மனம் கொண்ட நெஞ்சங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்திய அந்த மனிதனுக்கு என் நன்றி……//

பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்தவா அந்த உண்ணாவிரதம்??

அதுமட்டும் அல்ல, ஏற்கனவே கொரில்லாத்தனமான காட்டுயுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இரக்கமற்ற இலங்கை அரசை பார்த்து, 30 வருடங்கள் சண்டைபோட்டும் ஜெயிக்காத நீ ஒரு ஆம்பளையா என்று கேட்பது அந்த காண்டாமிருகத்தை மேலும் உசுப்புவதுபோல் இல்லையா?? இதே தவற்றை செய்ததால்தானே சீமான் அமீர் உள்ளே போனார்கள்?? ரஜினியும் அப்படி பேசத்தான் வேண்டுமா??

boopathi,bangalore
Sunday, 2nd November 2008 at 22:50:48

best speech you can ever listen
Shareth,USA
Sunday, 2nd November 2008 at 22:39:46

I am quite surprised that the moderator allowed an anti-rajini post by "anonymous" - The replies to his questions by other members are very mature and nicely worded. Congrats guys!! and keep up the good work of being humble in your replies..just like our thalaivar..!!
Naveen,canada
Sunday, 2nd November 2008 at 15:47:19

Dear Anonymus,
kashmir terrorists are heartless terrorists. they are not a nation army, verrapan and bin laden are terrorists too. But Rajini is asking a nataional sri lankan army who is doing the terrorists act to their own srilankan people(tamils). a army duty is to save the people. not to kill their own people. what rajini said is right. Don't bring rajini's fan's into it. if you don't like rajini just comment about rajini's speech. you got it.

Rajini- Legend's fan,
Sunday, 2nd November 2008 at 15:44:19

ஹி அனானி,

அது சரி, ரஜினி என்ன உங்களயா கேட்டாரு? பேர் போடாததே, அப்படி கேட்டாக்கூட தப்பு இல்லன்னே தோனுது, ஏன் இப்ப ரஜினிய எப்பிடி சந்தைக்கு இழுக்கறதுன்னு பிளான் பன்றமாதிரி இல்ல உங்க பேச்சு இருக்கு? நேற்றைய பிரச்சனை ஈழம் பற்றியது மட்டுமே, பெரிய பக்கீரன்ன்னு நெனைப்பு!
இது வரை இருந்த பார்வை வேறுபட்டிருக்கிறது; அதற்கு இப்போதய உணர்வு தான் சரி

Raja,Washington DC
Sunday, 2nd November 2008 at 14:16:15

இலங்கைத் தமிழர்கள் சம உரிமைக்காக போரடுகிறார்கள். ஆனால் பின்லேடனும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் எதற்க்காக போரடுகிறார்க்ள். அதை யோசித்து பார்க்க வேண்டும். ரஜினியின் பேச்சில் உள்ள உன்மையான அர்த்ததை தெரிந்‍து கொள்ளுங்கள் Anonymous. ரஜினியின் மீது உள்ள தனிப்பட்ட வெறுப்பை ரஜினியின் ஈழப் பேச்சிலும் காண்பிக்காதீர்கள்.அருமையான பதிவு ஈ.ரா.
Arooran,London
Sunday, 2nd November 2008 at 11:31:03

Btw, Rajnikanth looked nice in the protest...
Arooran,London
Sunday, 2nd November 2008 at 11:29:38

In English plz!!!!
EE RAA,
Sunday, 2nd November 2008 at 09:57:32

// போர் நிச்சயம் மாபெரும் தவறுதான். அதேசமயம் ஆம்பளைங்களா என்ற அடிமுட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனமான சொற்பிரவாகம் தேவைதானா ?? அதுவும் ஒரு அண்டைனாட்டின் அரசினை பார்த்து? //


என் ப‌தில்

வழ வழ எனவும் வள வளவெனவும் சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் பல நூறு குரல்களுக்கு மத்தியில் உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் இழந்த தாய்மார்களின், குழந்தைகளின் வலியை உலகெங்கும் உள்ள இரக்க மனம் கொண்ட நெஞ்சங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்திய அந்த மனிதனுக்கு என் நன்றி……

ஈ ரா


கிரி,Singapore
Sunday, 2nd November 2008 at 09:54:17

பிரச்சனையாக்க நினைத்த பலருக்கும் தன் பேச்சின் மூலம் ரஜினி பதில் கொடுத்து விட்டார்.


Anonymous,
Sunday, 2nd November 2008 at 09:34:59

ரஜினியும் சரி அவர் ரசிகர்களும் சரி அபத்தங்களை நிறுத்தவே போவதில்லை என்று தோன்றுகிறது..

போர் நிச்சயம் மாபெரும் தவறுதான். அதேசமயம் ஆம்பளைங்களா என்ற அடிமுட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனமான சொற்பிரவாகம் தேவைதானா ?? அதுவும் ஒரு அண்டைனாட்டின் அரசினை பார்த்து?

பலவருடங்களாக அமெரிக்க அரசு பின் லேடனை பிடிக்க முயன்று இன்னும் முடியவில்லை

நம் இந்திய அரசால் பாகிஸ்தான் மற்றும் இந்திய முகாஜைன்களால் வரும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இந்தியா முழுவதும் குண்டுகள் வெடித்தவண்ணம் உள்ளன‌

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோதும் ஆட்சியில் இருந்த கலைஞரால் அவனை பிடிக்கமுடியவில்லை

அதே கலைஞர் ஆட்சியில்தான் கோவை குண்டுவெடிப்பு நடந்தது.

இவர்கள் எல்லாம் ஆம்பிளைகள் இல்லையா??

என்ன கொடுமை ரஜினி சார் இது??? உங்க ரசிகர்களைதான் காலத்துக்கும் திருத்தமுடியாது. உங்ளைப்போல் தவறை புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கும் பக்குவமெல்லாம் அவர்களுக்கு இல்லை. நீங்களுமா??!!

இலங்கை அரசின் மேல் கோபத்தை எதிர்ப்பை நீங்கள் ஏன் jusட் சாத்விக முறையில் மட்டும் காட்டி இருக்ககூடாது? நெடுமாரன் அவர்கள் பலவருடங்களாக அதைதானே செய்துகொண்டிடருக்கிரார்?

govind,abu dhabi
Sunday, 2nd November 2008 at 09:14:02

தலைவரின் இலங்கை தமிழருக்காக பேச்சு இலங்கையில் அல்லலல் படும் அவர்களுக்கு ஒரு மருந்தாக அமையும், மத்தியரசு இலங்கைக்கு சலாம் போடாமல் அமைதிதீர்வை ஏற்படுத்த முயல வேண்டும்
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information