Other Articles
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜÃ
ரஜினி விஷயத்தில் நடுநில
இதுவும் தீவிரவாதம்தானà¯
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், à
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion.
ரஜினி தன்னைப் பற்றி சரிà®Â
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடுà
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
மனைவியின் உணர்வுகளுக்à
(Tuesday, 2nd December 2008)
'மூன்று முகம்' படத்தில் ரஜினிக்கும் மூன்று வேடம். நான் அந்தப் படத்தில் கதை, வசனம் எழுதினேன். நான் எழுதியதையெல்லாம் ரஜினி தன் அபார திறமையால் மெருகேற்றி நடித்தார்.

அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்காக மேக்கப்பில் தானே சில வித்தியாசங்களைச் செய்து கொண்டார். விக், மீசை இவற்றில் மட்டுமின்றி, முகத்தில் மேலும் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக கீழ்த் தாடையை பெரிதாக்கிக் கொள்ள பொய்யான தாடையொன்றைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருக்குமென்றாலும், கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி அதைப் பொறுத்துக் கொண்டார்.

படத்தில் அலெக்ஸ் பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல் நிலையத்தில் வந்து மிரட்டுவார். அதற்கு அலெக்ஸ் மசிய மாட்டார். மாறாக ஆளவந்தாரையே சிறையில் தள்ளுவார். இந்தக் காட்சியில் ரஜினிக்கும் செந்தாமரைக்கும் சற்று நீண்ட வாக்குவாதம் இருக்கும். அதில் ரஜினிக்குச் சற்று மாறுபட்ட கருத்து இருந்தது. "பீட்டர் சார்! போலீஸ்காரன் எதுக்கு சாராய முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள வேண்டியதுதானே?" என்று கேட்டார்.

நான் அதற்கு, "சாராய முதலாளி சாதாரண ஆளல்ல. பெரிய பின்னணி உடையவன். அவ்வளவு எளிதில் யாரும் அவனை உள்ளே தள்ள முடியாது என்று இருந்தால்தான் கதையில் சாராம்சம் வலுவாக இருக்கும்" என்றதை ரஜினி ஏற்றுக் கொண்டார். ரஜினியின் விருப்பப்படி அந்தக் காட்சியில் சில திருத்தங்களையும் செய்தேன்.

படமாக்கி முடித்தபின் ரஜினி என்னிடம் தனியாக "நான் உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா?" என்று கேட்டார்.

"நீங்கள் செய்வது தவறே அல்ல. ஏதோ வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் உங்கள் கேரக்டரில் ஈடுபாடு இருப்பதால்தான் உங்களுக்கு சந்தேகங்களும், யோசனைகளும் எழுகிறது. உங்கள் யோசனைகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். இல்லையென்றால் உங்களுக்கு விளக்கம் சொல்லி ஒத்துக் கொள்ளச் செய்கிறோம்" என்றபோது ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

'மூன்று முகம்' படத்தில் ரௌடியாக மற்றொரு கேரக்டரில் ரஜினி வருவார். அந்த ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடித்து கீழே தள்ளுவதாக ஒரு காட்சி இருந்தது. யூனிட்டிலிருந்து சிலர் ரஜினியிடம் "உங்களை ராதிகா அடித்துத் தள்ளுவதாக இருந்தால் உங்கள் இமேஜ் பாதிக்கும். ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்கள். அப்படி நடித்தால் தவறாகுமோ என்று ரஜினியும் யோசித்திருக்கிறார்.

வாகினியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினி என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். மேக்கப் ரூமில் இருந்த ரஜினியைப் பார்க்கச் சென்றேன். படத்தில் ராதிகா தன்னை அடிப்பது பற்றிய சந்தேகம் கேட்டார்.

படத்தில் இரண்டு கேரக்டர்களில் ஒன்று ஹீரோ இமேஜ
் உடையது. மற்றொன்று செந்தாமரைக்கு உதவும் ரௌடியாக; வில்லத்தனமான வேடம். வில்லன் அடிபட்டால்தான் கேரக்டருக்கு பலம். அதனால் கராத்தே தெரிந்த ஒரு பெண்ணிடம் அடிபடுவதாக நடித்தால் தவறாகாது என்று காட்சியின் தன்மையைப் பற்றிச் சொன்னபோது, ரஜினி சரிதான் என்று ஒத்துக் கொண்டார்.

ரௌடி வேடத்தில் ரஜினி ஜாலியான வசனங்கள் சிலவற்றைப் பேசுவார். சாராயத்தைக் கையில் ஊற்றிக் குடிப்பார். அதெல்லாம் படப்பிடிப்பின் போது ரஜினியே சேர்த்துக் கொண்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

'சிவப்பு சூரியன்' படத்திற்கு கதாசிரியராக இருந்தபோது படப்பிடிப்பு நாட்களிலÃ

Previous

Next
 
   
8 Comment(s)Views: 3999

Parthiban,Singapore
Thursday, 18th December 2008 at 06:23:18

எனக்கு ரஜினியை என்னுடைய உயிருக்கு மேலாகஉம் பிடிக்கும்.
அய்யா நான் உங்கலை பார்க்கனும்

நிரைய்ய பேசனும்
ஏன்னா என்னிட‌ம் உங்கலோட‌ வ‌ழிக்கு நான் பாதை வ‌ச்சிருக்கேன்

Mohan,USA
Wednesday, 3rd December 2008 at 14:26:06

மூன்று முகத்தில் செந்தாமரையின் பெயர் ஆளவந்தான் என்றுதான் இருந்தது. கள்ளச் சாராய ஆள், மேலும் பெயரும் அன்று நிஜமாகவே இருந்த ஒரு கள்ளச் சாராயப் பெரும்புள்ளியின் பெயரும் ரொம்ப் நெருக்கமாக இருந்ததால் பின்னர் மாற்றப்பட்டது. நான் குறிப்பிடும் நபர் யாரெனப் பலருக்கும் தெரியும்.
SL Boy,Sri Lanka
Wednesday, 3rd December 2008 at 08:59:45

please translate into ENGLISH pleaseeeeeeeeeee
Steve,Malaysia
Wednesday, 3rd December 2008 at 03:42:19

Moondru Mugam Alex Pandian,is still my favourite character portrayed by Superstar till now.
R.Gopi,UAE / Dubai
Tuesday, 2nd December 2008 at 22:06:14

படத்தில் அலெக்ஸ் பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல் நிலையத்தில் வந்து மிரட்டுவார்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

மூன்று முகம் படத்தில் செந்தாமரையின் பெயர் ஏகாம்பரம் என நினைக்கிறேன் ...... பின்னால் பெயர் மாற்றப்பட்டதோ ??!!!

k s amarnath,India/Bangalore
Tuesday, 2nd December 2008 at 20:51:50

please post this article in english also
Manikandan Bose,Chennai
Tuesday, 2nd December 2008 at 16:51:46

Thank you Petter Sir...
Please share any interesting mistakes Our Thalaivar did during shootings..
And do you know any interesting meeting Between superstar and MGR in your present.?
Also please share a same time movie release for MGR and Superstar and both were hit..

M.Shankar.,India,TN,Neyveli.
Tuesday, 2nd December 2008 at 12:48:14

In 'Moondru Mugam', actor Senthamarai's charecter was 'Aekamabaram'

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information