Other Articles
தலைவர் பிறந்தநாளைக் கொà
மனைவியின் உணர்வுகளுக்à
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜÃ
ரஜினி விஷயத்தில் நடுநில
இதுவும் தீவிரவாதம்தானà¯
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், à
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion.
ரஜினி தன்னைப் பற்றி சரிà®Â
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடுà
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
சூப்பர் ஸ்டார்னா அது ரஜà
(Wednesday, 3rd December 2008)
குறுகிய நேரம்தான் மதன் நம்மிடம் ரஜினி குறித்துப் பேசினார். ஆனாலும் தனது சின்ன கார்ட்டூனில் அவ்வளவு விஷயத்தையும் சொல்லிவிடுவதைப் போல, நான்கு பாரா என்றாலும் நச்சென்று கூறினார் மதன்.

அவர் கூறியதிலிருந்து...

எப்பேர்ப்பட்ட இன்டெலக்சுவலாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தனிப்பட்ட விருப்பங்களில் ஒரு ரசிகத் தன்மை இருக்கும். யாராவது ஒரு நடிகரின் ரசிகர்களாக தங்களை அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள் அந்த விருப்பம் அப்படியேதான் இருக்கும்.

நான் இன்டலெக்சுவலா... இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் எனக்குப் பிடித்த நடிகர்கள் வரிசையில் ரஜினிக்கு முக்கிய இடம் உண்டு.

ரஜினி ரசிகர்களை விட கொஞ்சம் அதிகமாகவே அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். நான்கு எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ செய்திருக்கிறேன். அந்த வகையில் அவரைப் பற்றி என்னால் ஒரு கணிப்புக்கு வரமுடியும்.

எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்கிற ரகமில்லை ரஜினி. எல்லாரையும் விட நல்ல ரசிகர், நிறைய படிப்பவர். தமிழின் சிறந்த நூல்களைப் படித்திருக்கிறார் ரஜினி. ஆன்மீகம் தொடங்கி அரசியல் வரை எல்லாவற்றையுமே விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

அவர் பொழுதுபோக்குப் படங்களை மட்டுமே தருகிறார் என சிலர் குறைபட்டுக் கொள்ளலாம். பொழுதுபோக்குப் படங்கள் தருவதில்தான் நிஜமான சேலன்ஞ் இருக்கிறது. இன்றைக்கும் எம்ஜிஆர் படங்களையும் பாடல்களையும் ரசிக்கிறோம் என்றால் என்ன காரணம்? அந்தப் படங்களை சிறந்த பொழுதுபோக்குப் படங்களாகத் தர அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவரது குழுவினரை அவரது நினைப்புக்கேற்ப வேலை வாங்கும் திறன்.

ரஜினியும் அப்படித்தான். தன் படம் மிகச் சிறந்த பொழுது போக்குப் படமாக அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். அதற்கான வேலையை ரொம்ப அழகாக வாங்கிவிடுவார்.

அவரது அரசியல் பிரவேசம் பற்றி அடிக்கடி பேசப்படுவது ரெகுலரான விஷயமாகிவிட்டது. ரஜினியே தெளிவாக சொல்லவிட்டார். அதற்கு மற்றொருவர் விளக்கத்தை ஏன் எதிர்பார்க்கிறீர்கள். அவரே சொல்லும்வரை பொறுமையாக இருங்கள்.

சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உண்மையில் அந்தப் பட்டத்தை மக்களாகப் பார்த்துக் கொடுத்தது ரஜினிக்கு மட்டும்தான். அவருக்குப் பிறகு இன்னொருவருக்கு அந்தப் பட்டத்தை மக்கள் தருவார்களா என்பதும் சந்தேகம்தான்!

-சங்கநாதன்

Previous

Next
 
   
12 Comment(s)Views: 4197

s.k.sabari,india.salem
Wednesday, 10th December 2008 at 04:37:50

மதனுக்கு நன்றி.தலைவரை பத்தி நாட்டுக்கே தெரியும்.
shannu,
Wednesday, 10th December 2008 at 00:02:10

Thanks for posting it in English. I was fed up with those in Tamil. Plz try to post in English. Continuation of all the articles in Tamil feels like quitting the site.
arun,india/kumbakonam
Sunday, 7th December 2008 at 14:13:46

அந்த கடைசி paragraph எல்லாவற்றையும் விட top.
சின்ன சூப்பர் ஸ்டார்,பெரிய சூப்பர் ஸ்டார்,லிட்டில் சூப்பர் ஸ்டார்,மெகா சூப்பர் ஸ்டார்,அப்படினு சொல்றவங்க இந்த விஷயத்தை நல்லா புரியும்படியா படிக்கட்டும்.

shravan,
Wednesday, 3rd December 2008 at 22:40:58

அது ... சூப்பர் தலைவா..
Vishwa,Bangalore
Wednesday, 3rd December 2008 at 21:41:29

In the entire indian film history, the name superstar remains only one man, thats our great rajinikant!
No one can retain the superstar title for more than 25 years and still more years to come...

Rasigar En 7,USA
Wednesday, 3rd December 2008 at 14:04:46

TRANSALATION IN ENGLISH:

Only for a few minutes was Madan able to speak to us about Rajini sir. In a manner similar to how he conveys a lot of information in his very small cartoon strip, Madan's four paragraphs were awesome.
Excerpts from what Madan told us,
Irrespective of how intellectual a person is or otherwise, there will be a hidden personal affinity towards a certain type of talent. Such intellectual beings might not be very open about which particular actor/actress they admire however, in their minds the secret affinity will continue to live.
Myself being an intellectual or not is a different story. In the list of my personal favorite actors Rajini has a very important position.
I believe I know a little bit more about Rajini sir than most of his fans. I have met him in person many times. I have had the oppurtunity for four 'exclusive' interviews with him. Owing to such interactions I can attempt to conclude a little about the Superstar.
Rajini is not the type who will get into any decision or do any action out of haste. He is probably the best observer who'll rejoice good things, he also reads a lot. Rajini has read some of the very best novels or literature in the Tamil Language. Starting from Spirituality and upto Politics (covering the vast knowledge in-between) Rajini has all information on his finger tips.
Some people complaint that he gives only 'entertainment' (read Masala) movies. One should note that entertaining the masses is the 'real challenge'. Even today MGR's films have the magic in them - their entertainment value is as good as it always was. Why do we enjoy watching MGR movies even today? Because MGR had put so much hard work and efforts while creating those movies. He undertook exception efforts to ensure the entertainment value of his films were good and was able to extract work out of the film crew as per his mental picture of the movie.
Rajini is similar too. His movies should come out as an excellent entertainment for people of all classes - this is something he sticks with a staunch mindset. He too will extract work from his film crew in a very beautiful manner - so the film meets his personal criteria.
It has become a regular thing to talk about Rajini's Political entry. When he has himself cleared the air why should one look for another person to explain it? All people should stay calm and be patient till he himself makes a decision.
You may call any one as Superstar, however, the true person who was honored with that title is Rajinikanth 'only'. After Rajinikanth will the people honor another person/actor with that title - it is highly doubtful.
-Sanganathan

Baijubalakrishnan,Coimbatore
Wednesday, 3rd December 2008 at 12:22:33

Thank you Mr.Madhan sir......
I know you always saying truth words onlyyy...
You are a good journalist also....
Regards,
Baijubalakrishnan.


Manikandan Bose,Chennai
Wednesday, 3rd December 2008 at 09:51:09

Great words...
SL Boy,Sri Lanka
Wednesday, 3rd December 2008 at 09:43:26

please post this article in english also
t.subramaniam,india
Wednesday, 3rd December 2008 at 07:45:38

In the rajini month....
whether its a gr8 article r not leave it...
whether he is gr8 person r not
just one thing is sharp and true....superstar is rajinikanth alone...and it was given by people of tamil nadu to him alone......others who want to be superstar,name themselves superstar are realy fake stars....just having coal in their face.......

Prasanna,India/Chennai
Wednesday, 3rd December 2008 at 06:59:40

Mathan’s Appreciation is equal to an Oscar award………..Thanks Mr. Mathan Sir
k s amarnath,India/Bangalore
Wednesday, 3rd December 2008 at 04:42:59

please post this article in english also

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information