Other Articles
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
(Saturday, 6th December 2008)

ளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா... சாட்சாத் நம்ம தலைவர்தான்!

பின்னே உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா தொடங்கி நம்ம உள்ளூர் இளம் ஸ்டார் விஜயலட்சுமி வரை தலைவர் புகழ் பாடினால், இவர்கள் என்னதான் செய்வார்கள்...!

அரசியல் என்றாலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்... திரையிலோ முடிசூடா முதல்வர் அவர்தான், முப்பது ஆண்டுகளாய்... யார் வாய் திறந்தாலும் சூப்பர் ஸ்டார் புகழைத்தான் பாடுகிறார்கள்!

இவர்கள் பேசாமல் அமைதியாக, வந்த வாய்ப்புகளைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக கோலோச்சிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி அமைதி காத்தாரே... அப்படி! திரையுலகில் நம் தலைவர் விரும்பும்வரை அவர்தான் முதல்வர்!!

மேட்டருக்கு வருவோம்...

பாலிவுட்டைப் பொறுத்தவரை, வெற்றிகரமான ஒரே தென்னிந்திய ஹீரோ நம்ம சூப்பர்ஸ்டார் மட்டும்தான். பொதுவாக அங்கெல்லாம் தென்னிந்திய நடிகர்களுக்கு பெரிய மரியாதை கிடையாது.

இங்கே பெரிய‌ நடிகன் என்று புகழப்பட்டாலும் அவர்கள் துணை நடிகர் ரேஞ்சுக்குத்தான் நடத்துவார்கள். திறமையிருந்தால் ஜெயிக்கலாம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்கள்.

ஆனால் தலைவர் விஷயம் அப்படியல்ல... அவரது வசீகரமும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும் மேனரிஸமும் (Charisma and Mass Appeal) எல்லாவற்றுக்கும் மேல் எவரையும் வெல்லும் அவரது இனிய சுபாவமும்... எல்லைகளைக் கடந்தும் அவர் மேல் மக்களைக் காதல் கொள்ள வைத்துள்ளது!

இன்றுதான் இந்த நிலை அல்ல... ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு பன்மொழிக் கலைஞனாக, பல மொழி பேசும் மக்களும் நேசிக்கும் நல்ல நடிகராகத் திகழ்கிறார் ரஜினி.

முன்பு ஒரு முறை நடிகை ரதி ஸ்டார்டஸ்ட்-டுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி ஒரு நிஜமான கண்ணியவான்... அவருக்கு இணையான நடிகர் இந்த துணைக் கண்டத்தில் யாருமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியுடன் நடித்த ஹேமமாலினி மற்றும் ஜெயப்ரதா இருவருமே அவரை பல பேட்டிகளில் மனதாரப் புகழ்ந்துள்ளனர்.

சமூத்தில்கூட எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் ரஜினியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வட இந்திய மீடியாவுக்கு அளித்த பேட்டி உலக அளவில் பேசப்பட்டது. அதில், 'உலக அளவில் ரஜினியைப் போன்ற ஒரு நடிகரைப் பார்ப்பது அரிது என்றும், ஒரு நடிகன் என்பதற்கு முழு அர்த்தம் ரஜினிதான்', என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன், ரஜினி குறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அன்றைய பாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் இப்படிச் சொல்லியிருப்பார்:

கேள்வி: அத்தனை நட்சத்திரங்களுக்கும் ரஜினி, கமலோடு நடிப்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி..?

பதில்: பின்னே… ரஜினியோடு நான் ‘உத்தர்தக்ஷின்’ படம் நடித்திருக்கிறேன். இன்னும் கமலோடு நடிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா… கமல் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ஐ லவ் ரஜினி!

இது, மாதுரி அன்று...

இன்னொரு நடிகை தலைவரைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார், இன்று:

கேள்வி: உங்கள் ஆசை என்ன?

பதில்: எப்படியாவது ரஜினி சாரோட ஒரு படத்துல நடிக்கணும். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால் அவர் பேசுவதைக் கேட்கும்போது, அவரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, என்னையும் மீறி அவர் மேல் தனி மரியாதையும் ஒருவித உரிமை கலந்த பற்றுதலும் வந்துவிட்டது.

இந்த அளவு மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் வேறு எந்த நாட்டிலும் கேள்விப்பட்டது கூட இல்லை. அவருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்... ரோபோ (எந்திரன்) படத்துக்காக என் பெயர் பேசப்பட்டதே பெரிய விஷயம்தான்...”

-பாலிவுட்டில் இன்றைக்கு ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்குப் பேசப்படும் நடிகை தீபிகா படுகோன், தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில்!

இதெப்டி இருக்கு!

-சங்கநாதன்


 
24 Comment(s)Views: 5170

12Next Page
Next
Prasad,India
Wednesday, 10th December 2008 at 14:48:12

Definitely These heroiens will never suits...
R.V.SARAVANAN,chennai
Tuesday, 9th December 2008 at 01:02:26

super , super star polavey this news
Steve,Malaysia
Monday, 8th December 2008 at 08:59:18

I want to see Deepika Padukone pair with Superstar in next project...Haha, that will be nice.
annamalai,tuticorin
Monday, 8th December 2008 at 01:02:19

Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
My Heartly Wishes to U becuse every one to come in cinema industry say only one woed "my dream is superstar chair"

Kripa Saravanan,Chennai
Monday, 8th December 2008 at 00:31:03

மேலும் ஒரு பாலிவுட் நடிகை (ராக்கி சாவந்த்) ஒரு படி மேலே போய்... "ரஜினி சம்மதித்தால் நான் அவர் மனைவி ஆவேன்!!" என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு (டெக்கான் க்ரோனிகல்) தடாலடியாக ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்...
Arul Jai.J,Mumbai
Sunday, 7th December 2008 at 22:29:06

I am speechless
mahendran m,chennai / india
Sunday, 7th December 2008 at 21:52:41

The one man army
dhanabal,london
Sunday, 7th December 2008 at 12:55:38

THE MAN , THE ONE ONLY , THE BOSS EVERYTING YOU THALIVA. NOBODY CAN'T REACH YOU
Raja,
Sunday, 7th December 2008 at 10:26:13

புகை மட்டுமா வரவழைக்கிறார்? சூப்பரா நியூஸ் கலெக்ட் பண்ணி கலக்குறீங்க.
arun,india/kumbakonam
Sunday, 7th December 2008 at 09:04:58

சூப்பர் தலைவா!!
KADKAT,Qatar, India
Sunday, 7th December 2008 at 07:31:34

I AM EXCITED
R.B.Ramakrishnan,Thalaivar vaazhum idam
Sunday, 7th December 2008 at 05:43:47

Dear Sanganathan,
Thank you Thank you Thank you Thank you

K.A.Sivaramalingam,Singapore
Sunday, 7th December 2008 at 04:54:40

Super star is always great.

Super star Vazghaa

yuvaraj,india/Pondicherry
Sunday, 7th December 2008 at 03:59:14

பின்னுறீங்க நன்பா.
arul,chennai
Sunday, 7th December 2008 at 01:54:41

yenna sanganathan sir pottu kilapureenga.conductor to world superstar without any strong background.thalaiva you are not an ordinary man but an examplier figure to the world.
SL Boy,Sri Lanka
Sunday, 7th December 2008 at 01:19:48

He is THE EVER GREEN SUPER STAR in the WORLD
T.Subramaniam,India
Saturday, 6th December 2008 at 23:27:19

Dear sanganathan,
U r so Naughty...again making fumes for the young stars and olden mans too....
Enna than sollunga.....Thalaivara Minja Yaru...
Frankly speaking..Ks.Ravikumar had misused one song..which is fit for thalai var alone...World Superstar..RaJnIkAnTh

Prasanna,India/Chennai
Saturday, 6th December 2008 at 23:24:09

Its very proud to be thalaivar fan
Jegan,UAE
Saturday, 6th December 2008 at 23:23:08

தெய்வமே உன் தரிசனம் கிடைக்க காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைப் பார்....

பக்தியுடன்,
ஜெகன்.

k s amarnath,India/Bangalore
Saturday, 6th December 2008 at 22:36:03

this article seems to be interesting please post in english also please
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information