Events & Functions
Fans Meet 2008
Srilankan Tamil Protest
NDTV Award
Manoramma 50
Sivaji Silver Jubilee
TN Award 2005
"Chennai 28" 100 Days
Chandramukhi 804 Days
Solli Adipen Audio Release
Imsai Arasan 100 Days
CM Karunanithi Felicitation
Sivaji Statue
Poi Audio
Paarijatham's Audio
Sivaji Poojai
CM 200th Day
Thiruvasagam Release
Gilli S J
K.Balachander
CM Audio Release
Aiswarya Marriage
JJ VCD Control
CM Poojai
Election 2004
Samy S J
G.V. Memorial
Gurudev Birthday
Cauvery Fast
Baba Audio Release
Star Night Show
TN Award 1999
Boys Poojai
Thenali S J
Padaiyappa S J
CE Award 96
Baasha S J
Pethrayudu Function
Thirupathy Function
Ejamaan Function
Uzhaipazhi Launch
CM JJ Felicitation - 1992
Singapore Show - 1991
Mandapam Opening - 1989
Manithan S J - 1988
Shankar Guru 100days - 1988
Rajini's Marriage - 1981

  Join our Official Superstar Fan Group

  Picture Gallery

Video Gallery

Kuselan Corner

Functions & Events

Chandramukhi Audio Function (2005)

கன்னிமராவைக் கலக்கிய 'சந்திரமுகி' விழா

cm2.jpg

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் `சந்திரமுகி' படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (5 March 2005)  மாலை நடந்தது.

கேசட்டை பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே வெளியிட, பிலிம்சேம்பர் தலைவர் சுதர்சன சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ஜி.தியாகராஜன் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

``டைரக்டர் பி.வாசு இங்கே பேசும்போது, இந்தப் படத்தில் நான் அழகாக இருப்பதாக சொன்னார். வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் நம்மை விட்டு போன பிறகுதான் தெரியும். ஒன்று இளமை. இன்னொன்று ஆரோக்கியம். அடுத்தது நல்ல நேரம். இந்த மூன்றும் இருக்கும் போது தெரியாது. போனபிறகுதான் தெரியும். இந்த படத்தில் என் அழகு, மேக்கப் போட்டு செட்அப் செய்தது. இந்த படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சின்ன `டென்ஷன்' கூட இல்லாமல், சின்ன குழந்தையை பார்த்துக் கொண்ட மாதிரி, அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார் - பிரபுவின் சித்தப்பா சண்முகம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். பெர்பெக்ட்டாக இருப்பார் என்று சொல்வார்கள். அதுமாதிரி ராம்குமார் - பிரபு சிறந்த தயாரிப்பாளர்கள்.

cm1.jpgசிவாஜி புரொடக்ஷன்ஸ் இனிமேல் வருடத்துக்கு இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என் வேண்டுகோள். `சந்திரமுகி' படம் பற்றி இப்போது நான் பேசவில்லை. இந்தப் படம் வெற்றி அடைந்தபின், அந்த விழாவில் பேசுவேன்.

`ஜக்குபாய்' படத்தின் கதை விவாதத்தின்போது, அந்த கதையில் `பாட்ஷா' சாயல் தெரிந்தது. இன்னொரு பாட்ஷாவை என்னால் கொடுக்க முடியாது. அந்த படம் செய்தால், பாட்ஷா மாதிரி இருக்கிறது என்று சொல்லி விடுவார்கள். அதனால் அந்தப் படம் இப்போது வேண்டாம் என்று ரவிகுமாரிடம் சொல்லி விட்டேன்.

அதன்பிறகு நான் கேரளா போனேன். அங்கே `கீதை' படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு இடத்தில் கண்ணனிடம் அர்ஜனன் சொல்கிறான். இந்த சண்டை வேண்டாம். இதில் கொல்லப்படுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள். அண்ணன்-தம்பிகள். அதனால் போர் வேண்டாம் என்கிறான். உடனே கண்ணன், ``நீ அப்படி நினைக்கிறாய். உன் எதிரி அப்படி நினைக்க மாட்டான். உன்னை கோழை என்று கருதி விடுவான். இத்தனை நாள் வீரனாக இருந்த நீ கோழை என்று பெயர் வாங்க வேண்டுமா?" என்று கேட்பார். அர்ஜனன் கோழை ஆகக் கூடாது என்று சொல்வார். இதைப்படித்த பிறகுதான் அடுத்த படம் உடனே செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

`பாபா' படம் சரியாக போகவில்லை. ஓஹோ... அண்ணன் ஆடிப் போய்விட்டார் என்று நினைத்தார்கள். நான் யானை அல்ல குதிரை.

யானை விழுந்தால், எழுந்து கொள்ள நேரம் ஆகும். நான் குதிரை என்பதால், உடனே எழுந்து கொண்டேன். நான் எதிர்பார்த்தது போல் `சந்திரமுகி' படத்தை ராம்குமாரும், பிரபுவும் சிறப்பாக எடுத்து இருக்கிறார்கள். தமிழ்ப் பட வரலாற்றில், இந்த மாதிரி படம் வந்திருக்க முடியாது.

cm8.jpgராம்குமார் வரவேற்று பேசும்போது, இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள் ஒரே நாளில் 2 லட்சம் விற்று தீர்ந்து விட்டன. 30 ஆயிரம் டிஸ்க்குகள் விற்று தீர்ந்தன" என்றார்.

பிரபு நன்றி தெரிவித்து பேசும்போது, ``எங்க அப்பா எங்களுக்காக விட்டுச் சென்றது நட்பு, அன்பு, பாசம், சந்திரமுகி படத்தில் ரஜினி அண்ணன் ஆக்சிஜனாகவும், தண்ணீராகவும் இருந்தார்" என்றார்.

 

இதன் கன்டினியூட்டி போலிருந்தது வாசுவின் பேச்சு, "எட்டு மாதத்திற்கும் முன்பே 'சந்திரமுகி'கதையை ராம்குமாரிடம் கூறினேன். முதலில் இந்தியில் இந்த கதையை பண்ணுவதாகதான் இருந்தது." என்று கூறியவர்,'சந்திரமுகி' உருவான பிளாஷ் பேக்கில் மூழ்கினார். "இந்தப் படத்தின் முக்கிய விஷயம் ரஜினியின் இளமையும் அழகும்தான். படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதும் அவர் முதலில் கேட்ட கேள்வி மியூசிக் யார் என்பது வித்யாசாகர் பெயரை சொன்னதும் ஒ.கே என்று ஒத்துக்கொண்டார். முப்பது வயசு நா. முத்துக்குமார், கபிலனுக்கு சவாலாக வாலிசார் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார். அது நிச்சயம் பெரியஹிட்டாகும்" என்று வணக்கம் போட்டார்.

 

cm9.jpgவாலி வழக்கம் போல ஜாலி."சிவாஜி புரொடக்ஷன் ஆலமரம். சிவாஜி அதன் ஆணிவேர். ராம்குமார், பிரபு அதன் விழுதுகள். இங்கு எம். எஸ்.விக்கு சிறப்பு செய்தது சந்தோஷமாக இருந்தது. எம். எஸ். வியை நான் பார்ப்பதற்கு முன் சோத்துக்கு வழியிருக்காது. அவரை பார்த்தபிறகு சோறு திங்க நேரமிருக்காது. எம். எஸ. வி இசையில் எழுதுவதற்கு முன் நான் எழுதும் வரிக்கு வருமானம் வந்தது. அவரைப்பார்த்தது பிறகு வருமானத்துக்கே வரி வந்தது.

திரையுலகில் மூன்றெழுத்துப் பெயர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அன்று திரையில் கலக்கியவர்கள் எம்.ஜிஆர், சிவாஜி, ஜெமினி. பிறகு கமல், ரஜினி, பிரபு,அதற்கடுத்து விஜய்,அஜித், இப்போது தனுஷ்,சிம்பு. எல்லோருக்கும் மூன்றெழுத்துதான். மாமனாருக்கும் மூன்றெழுத்து. மருமகனுக்கும் மூன்றெழுத்து" என்று ரஜனி,தனுஷை குறிப்பால் உணர்த்த, சூப்பர் முகத்தில் சின்ன புன்னகை. "கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தந்த இரண்டு கொடைகளில் ஒன்று காவிரி,மற்றோன்று ரஜினி. காவிரியால் செழித்தது தமிழ்த்தரை. ரஜினியால் செழித்தது தமிழ்த்திரை" வாலி கூறிமுடிக்க அரங்கம் அதிர்ந்தது.

பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பேசும்போது, ``அத்தான் என்னத்தான்", ``பாலிருக்கும், பழமிருக்கும்", ``யார் யார் யாரவர் யாரோ" ஆகிய பழைய பாடல்களை பாடினார்.

விழாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மாலை - பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், எடிட்டர் மோகன், இப்ராகிம் ராவுத்தர், அபிராமி ராமநாதன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக் குமார், தரணி, ராஜா, மனோபாலா, நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, துஷ்யந்த், ஜீவா, விஜயகுமார், நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, ஷீலா, எம்.என்.ராஜம், இசையமைப்பாளர் வித்யாசாகர், பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன், டான்ஸ் மாஸ்டர்கள் தருண், டி.கே.எஸ்.பாபு, வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ஜி.சேகரன், ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ், பிரசிடன்ட் அபு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.

 

CHANDRAMUKHI AUDIO RELEASE FUNCTION

 

cm11.jpg
 

Emotion, goodwill and camaraderie flowed seamlessly at the Chandramukhi Audio release function tonight (5th March 2005) as Rajnikanth, the film's hero, made it clear that he was ready for a major gallop after the failure of Baba.

On a night when adjectives quickly ran out of stock, it was left to Rajni to put things in dispassionate perspective. In a typical succinct speech Rajni likened himself to a horse as opposed to an elephant. "If I were an elephant my getting up from the fall due to Baba would have been difficult. But I am like horse, able to get up easily." Stating that he was very happy to do a film for Sivaji films, the superstar ended his speech with a triumphal "see you at the success function of the film".

Rajni, clad in a simple white kurta pyjama, looked fresh and ebullient. The cast of the film including Prabhu, Jothika, Nayanthara were seated on the dais.

Earlier in the evening, veteran singer Asha Bhonsle released the audio that was received by Rajni himself.

cm4.jpgAsha Bhosle, speaking on the occasion, recalled her experiences with 'Brother Shivji'. She also spoke thoughtfully about her first film Amardeep with Sivaji Productions. Asha Bhosle also sang a few lines from some old Sivaji films and said she was a fan of P Susheela ("Latha Mangeshkar of South").

Ramkumar, Sivaji's, elder son, talked of Rajni's gentlemanly qualities and professionalism, Prabhu (who is also starring in the film) spoke about how it is a privilege to work with 'elder brother' Rajni, P Vasu, the director, about the rapport he enjoyed with Rajni and Prabhu.

Of course, every one talked of music director Vidyasagar as the 'man of the match'. To a person, they said that the six songs have turned out very well.

The audio looks to be on its way to a historical success. On the first day itself, all the 35,000 CDs and two lakh cassettes have been sold out. The cassettes priced at Rs 45 and CDs at Rs 99, are now over-booked.

There are six songs listed and all of them have different lyric writers- Vaali, Yugabharathi, Pa Vijay, Na Muthukumar, Bhavanachandran and Kabilan.

The six songs are:
"DevudaDevuda" sung by S.P.Balasubramaniam
"Konjam Neram"- Asha Bhonsle, Madhu Balakrishnan
"Athithom"- S.P.Balasubramaniam, Vaishali
"Kokku Para Para."- Tipu, Manicka Vinayagam, Rajalakshmi
"Raa Raa.."- Binni Krishna Kumar, Tipu
"Annanoda Paatu"- KK, Karthik, Sujatha

cm10.jpgEarlier in the evening, veteran music composer M S Vishwanathan was given a special commemorative award on behalf of Sivaji Charities.

The star-spangled evening show, held at the Ball Room of Taj Connemara, was graced by a host of film dignitaries and Rajni fans.

Among those sighted were K Balachander, Editor Mohan, Vijay, Jeyam Ravi, Jeeva, and Sheela.

Rajni's family members including wife Latha, daughter Soundarya and the newly married Ishwarya were present on the occasion.

Dhanush, Rajni's son-in-law, was conspicuous in his absence.

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

Visitors Since December 2008

1984197

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View