Kaala Special
Standing Ovation for Pa Ranjith
Special Screening for Kids
Kaala Boxoffice
Celebrities Watching Kaala
Public Response and Celebrations
Movie Review
Celebrity Tweets on Kaala
FDFS - Tamil Nadu
FDFS - Mumbai
FDFS - Other States
FDFS - Singapore
FDFS - Malaysia
FDFS - USA
FDFS - UAE
FDFS - Middle East
FDFS - Sri Lanka
FDFS - Japan
FDFS - Overseas
Ticket Photos
Interesting Articles
Kaala Merchandise
Malaysia Kaala Marathon
Song Lyrics
Tamil Audio Release
Telugu Press Meet
Cast & Crew Interview
Kaala Trailer
Kaala Teaser
Kaala Working Stills
Photo Gallery

  Join Us

Kaala Special

Kaala Audio Release Function

காலா பாடல் விழாவில் செம்ம கூட்டம், நாங்க பின்னாடி அமர்ந்து இருந்தோம், ஒன்றுமே தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் Display Screen வைத்து இருந்த இடம் அருகே சென்று அமர்ந்ததும் பரவாயில்லை என்பது போல ஆனது. 

அனைவருமே தலைவர் ரசிகர்கள் என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு நடுவே அமர்ந்து இருந்தது மிக மகிழ்ச்சி. அதிலும் வித விதமான ரசிகர்கள். சிலரின் பேச்சு, கிண்டல், கோபம் என்று களை கட்டியது :-) . 

15,000 பேருக்கு மேல் நிச்சயம் இருக்கும், கடல் போல இருந்தது. நண்பர்கள் அனைவரும் YouTube Live செமையா இருந்ததாகக் கூறினார்கள். வாழ்த்துக்கள் தனுஷ். 

பாடல் வெளியீட்டுக்கே அழைப்பிதழ் இருந்தும் இவ்வளவு கூட்டம் என்றால், மாநாட்டுக்கு எல்லாம் எவ்வளோ பேர் வருவாங்க! 

தனுஷ் 

தனுஷ் பேசியது அவருடைய நடவடிக்கை எல்லாம் ஒரு தலைவர் ரசிகனாகவே இருந்தது. தலைவரை விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடிக்கு ரசிகர்களிடையே பலத்த கரகோஷம். 

அதிர்ந்த சத்தத்தில் தனுஷ் சில நொடிகள் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலையானது. 

தலைவரிடம் கற்றுக்கொண்டதாக அவர் விவரித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இணையத்திலும் தனுஷ் பேச்சுக்கு ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பு இருந்தது. 

தலைவர் 

தலைவர் எப்போதும் போலத் தன்னுடைய எளிமையான பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டார். அவர் பேசியதுக்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டே இருந்தனர். 

``இது இசை வெளியீட்டு விழாபோல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் இருக்கிறது’’ என்று கூறி வழக்கமான நக்கல், நையாண்டியுடன் பேச்சைத் தொடர்ந்தார். சிவாஜி பட வெற்றி விழா குறித்து பேசிய ரஜினி, அந்த விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த மக்களில் நானும் ஒருவன். விரைவில் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். சிவாஜி வெற்றி விழா தொடங்கி, காலா படத்தின் ஷூட்டிங் முடிந்தது வரை விரிவாகவே ரஜினி பேசினார். இயக்குநர் இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், ஒளிப்பதிவாளர் முரளி எனப் படக்குழுவினரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், கோச்சடையான் படத்தின் மூலம் புத்திசாலிகளுடன் மட்டுமே பழக வேண்டும், ஆலோசனைகள் கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளுடன் பழகக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். லிங்கா படத்திலிருந்து நல்லவனாக இருக்க வேண்டும், ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன்’ என்றார். அதேபோல், இமயமலைக்குப் போவதே கங்கையைப் பார்க்கத்தான். சில இடங்களில் மௌனமாகவும், சில இடங்களில் ரெளத்ரமாகவும் கங்கை நடமாடிக்கொண்டும் போகும். நதிகள் இணைப்பு என்பதே என் நீண்டநாள் கனவு. குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். அது நடந்த மறு கணமே நான், இறந்தால் கூட கவலை இல்லை’’ என்றார். காலா படத்தில் அரசியல் இருக்கும், ஆனால் அது அரசியல் படம் இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இதுவரை தனக்கு அமைந்த வில்லன் கேரக்டர்களில் எனக்குச் சவால் அளித்த கதாபாத்திரங்கள், பாட்ஷாவின் ஆண்டனி மற்றும் படையப்பாவின் நீலாம்பரி கேரக்டர்கள். அந்த கேரக்டர்கள் வரிசையில் காலாவில் நானா படேகரின் கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும் என்று குறிப்பிட்டார். அரசியல் வருகை குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றதுடன், விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என ரஜினி பேசினார்.

வில்லன் 

தலைவர் படங்கள்ல வில்லனுக்கு அதீத முக்கியத்துவம் இருக்கும், அதனாலே படத்துக்குக் கூடுதல் வரவேற்பு இருக்கும். நடிகர்கள் பலர் தங்கள் மேல் நம்பிக்கையில்லாததால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவார்கள். 

எங்கே! நம்மை விட இவர்கள் பெயர் வாங்கி விடுவார்களோ என்று! 

ஆனால், தலைவர் இதில் பட்டையைக்கிளப்புவார். அவரே ரசித்த ஆண்டனி, நீலாம்பரி க்கு பிறகு காலா தான் கடும் போட்டி தந்ததாகக் கூறி ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார். 

 

 

அனுபவங்கள் 

கபாலியில் தனது மனைவியை தேடும் பகுதியை நகைச்சுவையுடன் விவரித்ததை ரசிக்காதவர் இருக்க முடியாது :-) .

ரஞ்சித் திறமையையும், அவர் இயக்குநராக மட்டும் தனது வாழ்க்கையை முடித்து விட மாட்டார் என்று தலைவர் கூறியது, ரஞ்சித் மீது வைத்து இருந்த நம்பிக்கையை காட்டியது.

கோச்சடையான், லிங்கா படங்கள் குறித்த கருத்துகள் உண்மையாகவே எந்த ஒரு நடிகரும் இது போலத் தன்னுடைய படங்களைப் பற்றிக் கூறி விட மாட்டார். 

என்ன பிரச்சனை? தான் செய்த தவறு என்ன? என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். 

அதுவும் லிங்கா படத்துக்கு அவர் கூறியதெல்லாம், மற்றவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது. 

ஒருத்தரை என்னவெல்லாமோ விமர்சித்தும் திரும்ப அநாகரீகமாகப் பதில் அளிக்காமல், நம்முடைய வேலையை மட்டும் பார்ப்போம்! என்று கூறுபவரை எப்படித் திட்ட பலருக்கு மனசு வருகிறது என்றே வியப்பாக உள்ளது. 

தமிழக அரசாங்கத்தையே தலைவர் நடத்துவது போல எல்லோரும் இப்படிப் பாய என்ன காரணம்?! சம்பந்தப்பட்டர்களைக் கேள்வி கேட்பதை தவிர்த்து அனைவரும் அனைத்துக்கும் இவரையே எதிர்பார்ப்பது ஏன்? 

இறுதியில் கூட எப்போதும் போல அம்மா அப்பாவை மதிங்க! எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நல்லதை சொல்கிறார். 

ஆனாலும், அவர் கூறிய நல்லதையும் எதிர்மறையாகத் தான் ஊடகங்களில் எழுதுகிறார்கள். 

இன்று ஊடகங்கள், சமூகவலைதளங்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன பேசுகிறார்கள், எவ்வளவு எதிர்மறையாகச் சிந்திக்கிறார்கள், அடுத்தவரை குறை கூறுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். 

ஆனால், தலைவர் இது போல ஒருமுறை கூடச் சொன்னது இல்லை ஆனால், இவரைத்தான் எல்லோரும் திட்டுகிறார்கள். 

தலைவரே சொன்னது போல அவரோட வெற்றிக்குக் காரணம் "செவுட்டு தவளை" யாக இருப்பது தான். இல்லையென்றால் 40+ வருடங்களைக் கடந்தும் தன்னுடைய நிலையைத் தக்க வைத்து இருக்க முடியுமா! 

நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்!





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information