Thai Meethu Sathiyam
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக ட்ரியோ...ட்ரியோ...
இந்த குமரிப்பொண்ணு உனக்காக ட்ரியோ...ட்ரியோ...
பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்
பட்டு வேட்டி இதை கட்டுங்க மச்சான்
அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லை
வெக்கப்படவும் தேவையே இல்லை
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
நீ பொறந்தே எனக்காக ட்ரியோ...ட்ரியோ...
நான் பொறந்தேன் உனக்காக ட்ரியோ...ட்ரியோ..
சிட்டுக்குருவியே கிட்ட வாடி உன்னைத்
தொட்டு தொட்டு மனம் விட்டு சிரிப்பேன்
பட்டாம்பூச்சி போல வட்டமிட்டே உன்னை
விட்டுப் பிரியாம ஒட்டி இருப்பேன்....(நேரம்)
வச்சப் பயிரு வளந்தாச்சு
வளர்ந்த பயிரு கதிராச்சு
அடுத்த நிலை நாம் அடைந்து
ஆனந்தமாய் வாழ்ந்திடணும்
எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்
இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்
நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வந்து
பாக்கு வெத்தல மாத்துங்க மச்சான்
வயலுக்கு ஒரு வரப்பாவேன்
வாழ்க்கைக்கு நான் துணையாவேன்
காலம் நேரம் பார்த்துக்கிட்டு
கல்யாணத்தை வச்சுக்குவோம்
மருதமலை முருகனுக்கு
மாவிளக்கு போட்டிடுவோம்
வேலவனை நாம் துதிப்போம்
வேண்டியதை அவன் கொடுப்பான்....(நேரம்)
பாபு பாபு பாபு இங்கே
பாபு பாபு பாபு இங்கே
கோபு கோபு கோபு எங்கே
கோபு எங்கே கோபு எங்கே
பாபுவானால் கட்டிக் கொள்ளு
கோபுவானால் எட்டிச் செல்லு.......
பாசமுள்ள பாபு நானே
வேஷத்தாலே கோபு ஆனேன்
கோபு ஆனேன் கோபு ஆனேன்
ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன்
அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்.....
ஓ.....ஓ.....ஓ.....ஓ....
கையிலடிச்சு தையில நமக்கு
கல்யாணமுன்னு சொன்னே
நான் கன்னம் சிவந்து நின்னேன்
கன்னம் சிவப்பு மாறும் முன்னே
காத்தாய் பறந்து போனே......
போனது போகட்டும் காரியம் ஆகட்டும்
உனக்கு நானும் துணை இருப்பேன்
உயிரைக் கூட நான் கொடுப்பேன் (பாசமுள்ள)
ஆவணி மாதம் தாவணி போட்டு
ஆத்தங்கரையில் சிரிச்சே
நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே
ஐப்பசிக்குள்ளே எப்படியோ
என் மனச கவ்விப் பிடிச்சே
அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு
நிச்சியம் உன்னை மறவேனே
சத்திய வார்த்தை இதுதானே......(பாபு)
புறப்படடா தம்பி புறப்படடா
சத்தியத்தின் தத்துவத்தை நம்படா......அதன்
சக்தியே உனக்கு தரும் தெம்படா........
புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும் நிலையாய் வாழ
புறப்படடா தம்பி புறப்படடா தம்பி
புறப்படடா தம்பி புறப்படடா........
தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தவறு செய்தால் தண்டித்தே ஆகணும் –இதை
சபதமாக நீ ஏற்று வாழணும்.......(புறப்படடா)
சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம் –அது
வீணர்களை வீழ்த்துமடா நிச்சயம்.......( புறப்படடா )
உறவும் உண்டு பிரிவும் உண்டு
ஆ......ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ.....
உறவும் உண்டு பிரிவும் உண்டு உலகிலே
ஆ.......ஆ......ஆ......ஆ.......ஆ.......ஆ.....
வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்விலே.....
ஆ......ஆ.......ஆ........ஆ........ஆ........ஆ.....
நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு
கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
கழித்தல் என்பதே இனி அதில் இல்லை
பெருக்கல் என்பதுதான் அதன் எல்லை
இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும் (கூட்டல்)
நெஞ்சம் நினைப்பதற்கே இளமை ரசிப்பதற்கே
கனிகள் சுவைப்பதற்கே கைகள் கொடுப்பதற்கே
ஆ......ஆ.......ஆ........ஆ........ஆ........ஆ.....
துள்ளி துள்ளி இங்கு துடிக்குது மனசு
கிள்ளி கிள்ளி நெஞ்சை கிளறுது வயசு
அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு
கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு
கூட்டல் கணக்குத்தான்..........
|