Unn Kannil Neer Vazhindal
கண்ணில் என்ன கார்காலம்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே…. (கண்ணில்)
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும் (கண்ணில்)
இருள் மூடும் கடலோடு நானிங்கே
என் தோணி கரை சேரும் நாளெங்கே
பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம் (கண்ணில்)
கண்ணில் என்ன கார்காலம்
என்ன தேசமோ இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ (என்ன)
இன்ப துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
சோகம் என்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு நீ இன்று ஓய்வெடு (என்ன)
பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கப் போகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா ஓ உண்மை நீயடா (என்ன)
இளமை இதோ இதோ
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
என் இளமை இதோ இதோ
நல்ல இனிமை இதோ இதோ..
உன்னைப் போல் மன்மதன் ஊருக்குள்ளே இல்ல
இளமை இதோ இதோ....
பொன்னைப் போல் அள்ளுங்க இன்னுமென்ன சொல்ல
நல்ல இனிமை இதோ இதோ..
பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே பனிக்காத்திலே....
எல்லோரும் செய்தாப்பல
நானும் செய்யப் போவதில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க
பழந்துணி புதுத்துணி கிழிஞ்சது பார்...
நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னால நாய்யகரு தோட்டத்துக்கு
பேசாத கண்ணால என்னாடி அம்மாளு
வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது
செவந்த முகம் கண்டு எம் மனசும் பதறுது
பவள வாயில தெரியுற அழக
பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது...
ஹே ஆத்தா ஆத்தோரமா வாறியா நான்
பாத்தா பாக்காமலே போறியா
அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
செக்கச் செவந்தவன் புள்ள உன்
அத்தப் பெத்த சிங்கம்டி இந்த ஆம்பிள..
அன்பே.......இன்பம்......எங்கே......இங்கே......
மாறாத பேரின்ப நீராடலாம்
நீரோட நீர் போல நாம் கூடலாம் (அன்பே)
மலரே மலரே உல்லாசம்
மலரே மலரே உல்லாசம் உந்தன்
நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ.........(மலரே)
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ
ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ
தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா.....(மலரே)
வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ
மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ
வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம்
கண்களோ சம்மதம் கால்களே தாமதம்
ஆடைகள் ஏது நீராடும் போது
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா.....(மலரே)
|