Rajinifans.com team arranged for Darbar special for kids
நமக்கு மிகப் பெரிய சந்தோசத்தையும், மன நிறைவையும் கொடுப்பது இயலாதோற்கு உதவுவதும்,அவர்களை சந்தோசப் படுத்துவதும் தான்.
தலைவரின் தர்பார் திரைப்படத்தை சென்னை கோவிலம்பாக்கம் ராமலிங்க அடிகளார் காப்பகத்தில் உள்ள 25 குழந்தைகள் இன்று பரங்கிமலை ஜோதி திரையரங்கில் பார்க்க Rajinifans.com இணைய தளம் ஏற்பாடு செய்து இருந்தது.
Balcony வகுப்பில் குழந்தைகள் மற்றும் காப்பக நிர்வாகிகள் அமர்ந்து திரைப்படத்தை கண்டு களித்தனர். அனைவருக்கும் சமோசா/லட்டு சிற்றுண்டி வழங்கப்பட்டது
திரைப்படம் முடிந்து கிளம்பும் போது குழந்தைகள் அனைவருக்கும் Pencil box வழங்கி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை திரைப்படம் காண வந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் Rajinifans.com நிர்வாகிகள் சத்தியநாராயணன், தேவ், கிருஷ்ணகுமார், முருகானந்தம், ரஜினிஸ்ரீராகவேந்திர முரளி மற்றும் தென் சென்னை ஆலந்தூர் வடக்கு செயலாளர் சண்முக பாண்டியன், இணை செயலாளர் மௌலிராஜா, துணை செயலாளர் ரஜினி பிரான்சிஷ், தென் சென்னை இளைஞரணி துணை செயலாளர் ஜெயராமன் மற்றும் ஆலந்தூர் வடக்கு பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
|