நண்பர்களே...
உள்ளத்தில் நல்ல உள்ளம் எது தெரியுமா... வாரி வாரிக் கொடுப்பதும், வாடிய போது வாடுவதும் மட்டுமல்ல... தான் உணர்ந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் உணரும்படி எடுத்துரைப்பதும் கூட.
அத்தகைய நல்ல உள்ளம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. கடவுள் பார்த்துப் பார்த்துதான் நல்ல மனம் கொண்ட மனிதர்களையே படைக்கிறான்.
அப்படி அரிதாய் படைக்கப்பட்ட அற்புத வார்ப்பு நமது சூப்பர் ஸ்டார். அவரது எதிர்முகாம் நபர்கள் கூட ரஜினி என்றதும் எழுந்து நிற்கக் காரணம், ரஜினி பவர்புல் மனிதர் என்பதால் மட்டுமல்ல... அவரது தரும சிந்தனையும், தாராள மனமுமே தம்மைத் தோற்கடித்துவிடும் என்பதால்தான்.
இருக்கட்டும்... இதுபற்றி பின்னர் நிறைய பேசுவோம்...
இப்போது 'நான் கடவுள்' படத்துக்கு நமது தலைவர் எழுதியுள்ள மனம் திறந்த மடல்தான் ஹைலைட்டே. இந்த அளவு பெருந்தன்மை காவியப் பாத்திரம் கர்ணனுக்குக்கூட இருந்திருக்காது.
அந்தக் கடிதத்தின் நகலை இங்கே தந்திருக்கிறோம்... ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள உண்மையையும் சத்தியத்தையும் உணரும்போதே உடல் சிலிர்க்கிறது.
'பாலாவின் திறமைக்கும், அசாத்திய துணிச்சலுக்கும் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்!'
-தன் சக கலைஞனை இதைவிட சிறப்பாக பாராட்டிவிட முடியுமா... யாராலும் முடியாது, ரஜினியைத் தவிர. காரணம் இந்த வார்த்தைகள் அவர் உள்ளத்திலிருந்து பிறக்கும் சத்திய வார்த்தைகள்.
பாலா சார்... உங்களுக்கு முதல் விருது கிடைச்சிடுச்சி!
-சங்கநாதன்
|