Related Articles
கன்னட திரையுலக பவளவிழாவில் சூப்பர் ஸ்டார்!
Rajinikanth at his best friend Mohan Babu son wedding
Arasan rocking Posters & TOI Article
கனவை நனவாக்கிய ரஹ்மானுக்கு ரஜினி வாழ்த்து!
நான் கடவுள் படத்துக்கு தலைவர் எழுதியுள்ள மடல்
வெண்ணிலா கபடிக்குழு - சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!
ரகசிய ஏஜென்ட் ரஜினி - ஒரு அட்டகாச காமிக்ஸ்!
நாகேஷ் மறைவு: தலைவர் ரஜினி இரங்கல்!
படிக்காதவனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும்
Rajinikanth Endhiran Media News & Articles

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரஜினி திருமண விழா மற்றும் 30 வது ஆண்டு மன்ற விழா
(Wednesday, 4th March 2009)


 

ஒரு தேர்ந்த இயக்கம் போல வளசை ரசிகர்கள் நடத்திய மன்ற விழா!!

னைவரும் வியக்கும் வண்ணம் ஒரு மன்ற நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக்காட்டியிருக்கிறார்கள் வளசரவாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர். கட்டுக்கோப்பாக ஒரு தேர்ந்த அரசியல் இயக்கத்தின் நிகழ்ச்சி போல இந்த மன்ற விழாவை நடத்திக்காட்டியதன் மூலம் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளனர் நம் ரசிகர்கள்.

இது ஏதோ பரபரப்புக்க்காகவோ விளம்பரத்துக்காகவோ நடத்தப்பட்டது அல்ல. மரம் நடுதல், பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை வருடா வருடம் வளசை ரசிகர்கள் மன்ற விழா மூலம் செய்வதுண்டு. இந்த முறை தங்கள் மன்றத்தின் 30 வது ஆண்டு விழாவையும் சேர்த்து பிரமாண்டமாக நடத்தியிருக்கின்றனர்.

 

முப்பெரும் விழா

வளசரவாக்கம் நகர ரஜினி ரசிகர் மன்றத்தினர் சென்ற வாரம் வளசை நகர தலைமை ரஜினி மன்றத்தின் 30 வது ஆண்டு விழாவை வளசரவாக்கத்தில் உள்ள டாகடர் அம்பேத்கார் திடலில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்ட தலைமை மன்றம் சார்பாக திரு. வலசை ஆனந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து, விழாவை முன்னின்று நடத்தினார்.

அம்பேத்காருக்கு முதல் மரியாதை

விழா துவங்குவதற்கு முன்பு ரஜினி ரசிகர்கள் திடலில் இருந்த அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 10,000 வாளா சரவெடி வெடிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

வளசை நகர் சேர்மன் ஈ.சி. சேகர் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கினார். பிரபல ஆர்ட் டைரக்டர் திரு.ஜி.கே. கலந்துகொண்டு முதியோர்களுக்கு வேட்டிகள் வழங்கினார். நகராட்சி துணை சேர்மன் எம்.கதிரவன் அவர்கள் நேசம் காப்பகத்தில் ஆதரவற்ற மாணவ மாணவியருக்கு உணவு வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் க.அன்பழகன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கினார். சென்னை மாவட்ட செயலளார் என்.எஸ். ரமேஷ் இனிப்புகள் வழங்கினார். மாவட்ட பொருளாளர் என்.ராமதாஸ் தாய்மார்களுக்கு அரிசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.ஜி. சௌந்தர் ராஜன், ஜீ.பி.சீனு, வி.பழனி, கொடுங்கையூர் ரஜினி ஆனந்த், எம்.கே. சுகுமார், ரஜினி டில்லி, கே.அப்பன் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட ரஜினி நற்பணி மன்ற பொறுப்பாளர் வளசை ரஜினி ஆனந்த் செய்திருந்தார்.

இன்றைய மாலை மலரில் நாம் அளித்த இந்த விழாவின் புகைப்படம் +  செய்தி இடம்பெற்றுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல அண்டை மாவட்டங்களிலிருந்தும் மன்ற தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தினர்.

விழாவையொட்டி விழா நடைபெற்ற திடல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா நடைபெற்ற இடத்தின் அருகில் ரஜினி மன்ற கொடிகள் நடப்பட்டிருந்தன. அந்த பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

 






 
22 Comment(s)Views: 1934

Previous Page
Previous
12
Mallikarjuna,Secunderabad, India
Wednesday, 4th March 2009 at 09:38:06

Hi Sir,,,,,
A Very Very Happy Happy Anniversary to you Sir....

Sharada,Canada
Wednesday, 4th March 2009 at 09:07:05

Happy Anivessary to Sri. Rajini sir and Smt.Rajini.May God bless this divine couple for many more years together live in this earth..
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information