சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவருடன், வாழும் கலை ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் ராமோஜி ராவ், மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலை விருது பத்ம விபூஷண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 2000 ஆண்டு ரஜினிக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “பத்ம விபூஷண் விருது அறிவிப்பால் பெருமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி,” என கூறியுள்ளார்.
|