எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் முதல் ஸ்டில் சுவரொட்டிகள் வடிவில் வெளியாகயுள்ளது.
இந்த ஸ்டில்தான் நாளை பப்ளிசிட்டி டிசைனாகவும் செய்தித் தாள்களுக்குத் தரப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுவரை பத்திரிகைகளுக்கு எந்த ஸ்டில்லும் அதிகாரப்பூர்வமாகத் தரப்படவில்லை.
இன்னும் ஒரு மாதத்துக்கல்ல... ஒரு வருடம் வரைகூட மீடியா காலத்தை ஓட்டிவிடும் இந்த ஒரு ஸ்டில் மற்றும் அதற்கான பின்னணிக் கதையை பின்னி எடுப்பதில்.
இதைத் தவிர மேலும் இரண்டு வித்தியாசமான, மிரட்டல் ஸ்டில்களும் உண்டாம். அவை விரைவில் வெளிவரக் கூடும்.
அதேநேரம் படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேட்டட் டிசைன்களை மட்டுமே தரப்போகிறார்களாம்.
அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்து.
இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கூறினாராம்.
அதுதான் ரஜினி!
|