சத்யா மூவிஸ்
வெம்ளி விழா ஆண்டில்
ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''
ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்''
அதன் வெம்ளி விழா ஆண்டையொட்டி, ரஜினியை வைத்து "பணக்காரன்'' என்ற
படத்தைத் தயாரித்தது. அது 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெம்ளி விழா
கொண்டாடியது.
"லாவரிஸ்'' என்ற இந்திப்படம், "நாதேசம்'' என்ற பெயரில் தெலுங்கில்
தயாரிக்கப்பட்டது. அந்த கதையை வைத்து தமிழில் தயாரிக்கப்பட்ட படம்
"பணக்காரன்.''
இந்தப் படத்துக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் பி.வாசு.
ரஜினியுடன், கவுதமி இணைந்து நடித்தார்.
கதை
திருப்பங்கம் நிறைந்த குடும்பக்கதை "பணக்காரன்''
கோடீசுவரரான விஜயகுமார், பாடகி சுமித்ராவை திருமணம் செய்து
கொம்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பிணி ஆனதும் கைவிட்டு விடுகிறார்.
கர்ப்பிணியான சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மாமா ராதாரவி,
தாயார் சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தில் குழந்தை ஒரு
ரவுடியிடம் வந்து சேர்கிறது.
சிறுவன் வாலிபனாகிறான். வேலை தேடும்போது தனது அப்பா யார் என்பது
தெரிகிறது. அவர் கோடீசுவரர். இப்போது அவருக்கு இன்னொரு குடும்பம்,
குழந்தைகம் இருக்கிறார்கம்.
என்றாலும் தன் தாயார் மீதான களங்கம் துடைக்கப்பட முயற்சிகம்
மேற்கொம்கிறான். பல்வேறு அவமானங்கம் அடைகிறான். ஆனாலும்
எடுத்துக்கொண்ட முயற்சியில் வென்று, கோடீசுவரரான விஜயகுமாருடன் தனது
தாயாரை மறுபடியும் இணைத்து வைக்கிறான்.
உறவுகம் புனிதமானவை. அதை "பணம்'' என்ற போர்வைக்கும் போட்டு புதைத்து
விடக்கூடாது என்பதை விளக்கிய படம்.
பெண் வேடம்
அனாதை இளைஞனாக - தாயின் அவமானத்தை துடைக்கப் போராடும் இளைஞனாக ரஜினி
அற்புதமாக நடித்தார்.
ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் தோன்றி அசத்தினார்.
ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. ரஜினி - கவுதமிகடிகார
முட்களுடன் இணைந்து பாடும், "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது''
என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.
தனது நிலையை எண்ணி ரஜினி பாடுவதாக வரும், "நான் உம்ளுக்கும்ள
சக்கரவர்த்தி; ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி'' என்ற பாடல் காட்சியில்
ரஜினியின் உருக்கமான நடிப்பு நெகிழ வைத்தது.
படத்தில் வரும் "நூறு வருஷம் இந்த மாப்பிம்ளையும் பொண்ணும்தான் பேரு
விளங்க இங்கே வாழணும்'' என்ற பாடல், திருமண வீடுகளில் நிரந்தரமாகி
விட்டது.
புவனா ஒரு கேம்விக்குறி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா,
இந்தப் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
1990 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 25 வாரங்கம் ஓடி, வெம்ளி
விழா கொண்டாடியது.
மாப்பிம்ளை
ரஜினியின் மற்றொரு வெற்றிப்படம் "மாப்பிம்ளை.'' தெலுங்குப்படம்
ஒன்றை தழுவி, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் இயக்கினார்.
திமிர்த்தனமாக நடந்து கொம்ளும் ஒரு மாமியாரை, மருமகன் அடக்கி புத்தி
புகட்டும் கதை. (கிட்டத்தட்ட "பணமா, பாசமா?'' மாதிரி)
ராஜராஜேஸ்வரி என்ற பணக்கார மாமியாராக, ஸ்ரீவித்யா முதன் முதலாக `வில்லி'
முகம் காட்டிய படம்.
கதை
ராஜராஜேஸ்வரிக்கு 3 மகன்கம். ஒரே மகம். மகம் அமலா வெளிரில் தங்கி
மருத்துவப் படிப்பை தொடர்கிறாம். அந்த ஊரில் வேலையில் இருக்கும்
ரஜினிக்கும், அமலாவுக்கும் காதல் ஏற்படுகிறது. நடுத்தரக்
குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் தங்கை, பணக்கார ராஜராஜேஸ்வரியின்
மகன் ராஜா மீது காதலாகிறாம். `காதல்' எல்லை மீறியதில் தவறு
நிகழ்ந்துவிட, நிச்சயம் திருமணம் செய்து கொம்கிறேன் என்று சத்தியம்
செய்கிறான், ராஜா. சொன்னபடி தனது தாயார் ராஜராஜேஸ்வரியிடம் காதலியை
அழைத்துப்போகிறான்.
வெகுண்டெழுந்த ராஜராஜேஸ்வரி, மகனின் காதலியையும், அவம் தாயாரையும்
தனது செல்வாக்கால் போலீசில் மாட்டிவிடுகிறாம். தாயாரும், தங்கையும்
ஜெயிலில் இருக்கும் விஷயம், வெளிரில் இருக்கும் ரஜினிக்கு தெரியவர,
தாயாரையும், தங்கையையும் ஜெயிலில் சந்திக்கிறார்.
தங்கை மூலம் காதலன் யார் என்பதை தெரிந்து கொண்ட ரஜினி, ராஜாவை
கண்டுபிடித்து நொறுக்குகிறார். ஆனால் ராஜா நல்லவன். அவன் தாயாரின்
சூழ்ச்சிதான் இவ்வளவுக்கும் காரணம் என்று ரஜினி தெரிந்து கொம்கிறார்.
ஜெயிலில் இருந்து தாயாரையும், தங்கையையும் விடுவித்து, ரஜினியின்
தங்கைக்கு ராஜா ஒரு கோவிலில் தாலி கட்டுகிறான்.
ஆனால் நடந்தது எதுவும் ராஜராஜேஸ்வரிக்கு தெரியாது. ரகசியமாக நடந்த
இந்த திருமணத்தை ஊரறியச் செய்யவேண்டும், தங்கை அந்த வீட்டு
மருமகளாக ஏற்றுக்கொம்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி சில
முயற்சிகளை எடுக்கிறார்.
அப்போதுதான் தன்னை விரும்பிய அமலாவும், தன் தங்கை கணவர் ராஜாவும்
அண்ணன் - தங்கை என்று தெரிய வர, ராஜராஜேஸ்வரிக்கு பாடம் புகட்ட
திட்டம் போடுகிறார், ரஜினி. அமலாவை மணந்து கொண்டு, ராஜராஜேஸ்வரி
முன்பாக போய் நிற்கிறார்.
அதிர்ந்து போன ராஜராஜேஸ்வரி தனது மருமகன் ரஜினிக்கு அடுக்கடுக்காக
பல தொல்லைகம் கொடுக்கிறார். "முதல் இரவு'' கூட நடக்கவிடாமல்
தடுக்கிறார். ஆனால், தடைகம் தகர்க்கப்பட்டு ரஜினி வெற்றி பெறுகிறார்.
தோல்வியில் ஆத்திரமான ராஜராஜேஸ்வரி, மருமகன் என்றும் பாராமல்
ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவி விடுகிறார். ஆனால் அத்தனை பேரும்
அடிவாங்கிக் கொண்டு ஓடுகிறார்கம். ரஜினியும் மனைவி அமலாவுடன் வீட்டை
விட்டு வெளியேறுகிறார்.
இந்த நிலையில் ராஜராஜேஸ்வரி தனக்கு யார் பாதுகாப்பு என்று
நினைத்தாளோ, அவர்கம் அத்தனை பேரும் அவம் பணத்தை - திரண்ட சொத்தை
கபளீகரம் செய்வதற்காகவே அவளுடன் இருக்கிறார்கம் என்பதை தெரிந்து
கொம்கிறாம். சுதாரித்து அவர்கம் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
அவர்கம் முந்திக்கொண்டு ராஜராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி சொத்துக்களை
தங்கம் பெயருக்கு மாற்றித்தர கேட்கிறார்கம்.
ரஜினிக்கு இந்த விஷயம் தெரியவர, எதிரிகளை பந்தாடி, மாமியாரை
காப்பாற்றுகிறார். திருந்திய மாமியார், ரஜினியை தனது `மாப்பிம்ளை'
என்பதை ஊரறியச் செய்கிறார். ரஜினியின் தங்கையை தன் மருமகளாகவும்
மனப்பூர்வமாக ஏற்றுக்கொம்கிறார்.
மாமியார் ஸ்ரீவித்யா - மருமகன் ரஜினி இருவரும் மோதிக்கொம்ளும்
ஒவ்வொரு காட்சியும் கலகலப்பானவை. ரஜினி தனக்கே உரிய பாணியில்
காமெடியிலும் கலக்கியிருந்தார்.
நிழல்கம்ரவி, சோனியா, லலிதாகுமாரி, எஸ்.எஸ்.சந்திரன், ஜெய்சங்கர்,
வினுசக்ரவர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.
இசை: இளையராஜா. "மானின் இரு கண்கம் கொண்ட மானே மானே'', "என்னோட ராசி
நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி'', "என்னதான் சுகமோ
நெஞ்சினிலே'' போன்ற பாடல்கம் புகழ் பெற்றவை.
>>> Part
63
|