அப்பாவியாக
வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''
"ஸ்டைல் மன்னன்'' ரஜினிகாந்த், குணச்சித்திர வேடம் ஏற்று,
வெற்றிக்கொடி நாட்டிய படங்களில் ஒன்று "தர்மதுரை.''
`ராசி கலாமந்திர்' தயாரித்த படம் இது. ரஜினிக்கு ஜோடி கவுதமி.
வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் டைரக்ட் செய்தார். இசை:
இளையராஜா.
இந்தப் படத்தில், ரஜினியின் தந்தையாக பிரபல மலையாள நடிகர் மது
நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தம்பிகளாக நிழல்கம்ரவி,
சரண்ராஜ், விஜய்பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
"அப்பாவியாய் இருப்பது தவறில்லை. மற்றவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையை
தொலைக்கும் அளவுக்கு அப்பாவியாய் இருப்பதுதான் தவறு'' என்பதை கதைக்
கருவாக்கியிருந்தார்கம்.
சொந்த சகோதரர்களுக்காக தன் வாழ்வை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட ரஜினி,
தனது பிற்பகுதி வாழ்க்கையிலாவது மீண்டாரா? என்பதை அழுத்தமான
காட்சிகளுடன் தந்திருந்தார், டைரக்டர் ராஜசேகர்.
கதை
தம்பிகளுக்காக எதையும் செய்யும் ஒரு அப்பாவி அண்ணன் ரஜினி. தம்பிகம்
இந்த அப்பாவி அண்ணனை தங்கம் சுயநலத்துக்குப் பயன்படுத்திக்
கொம்கிறார்கம்.
ஆனால் இது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. "பாசமாக இரு; ஆனால்
ஏமாளியாக இருக்காதே!'' என்று ரஜினிக்கு அவ்வப்போது
எடுத்துச்சொல்கிறார். ஆனால் ரஜினி கேட்பதாக இல்லை. "நான் வாழ்வதே
தம்பிகளுக்காகத்தான்'' என்கிறார்.
"உன் தம்பிகம் சுயநலக்காரர்கம். அவர்களை நம்பி ஏமாந்து போகாதே''
என்று மறுபடியும் எச்சரிக்கிறார். ரஜினி அதைக் கேட்கவில்லை.
இதனால் "என் மரணத்துக்குப் பிறகுதான் நான் கூறுவதன் உண்மையை
உணர்வாய். அப்போதாவது சுதாரித்துக் கொண்டு, உன்னைக் காப்பாற்றிக்
கொம்'' என்கிறார், அப்பா.
காலம் விரைகிறது. ரஜினிக்கும் திருமணமாகிறது. மனைவி கவுதமியுடன்
மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அப்பா இறந்து போகிறார்.
இதன் பிறகுதான் விதி விளையாடுகிறது. ரஜினியின் தம்பிகளில் ஒருவர்,
சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலையாளி ஆகிவிடுகிறார். ஜெயிலுக்குப்
போனால் மனைவி, குழந்தைகம் நிர்க்கதியாகி விடுவார்கம் என்று
பயப்படும் அவர், தனது அண்ணன் ரஜினியிடம் தன்னைக் காப்பாற்றும்படி
கண்ணீர் விடுகிறார்.
கொலைக்குற்றம் என்றதும் தயங்கும் ரஜினியிடம், "லட்சங்களை
வாரியிறைத்து உன்னை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி
விடுவோம். எனக்காக ஜெயிலுக்குப் போ அண்ணா'' என்று வேண்டுகிறார்,
தம்பி. மற்ற இரண்டு தம்பிகளும், ரஜினியிடம் கெஞ்சுகிறார்கம். அதனால்,
செய்யாத குற்றத்தை தான் செய்ததாகக் கூறி பழியை ஏற்கிறார், ரஜினி.
அவரை போலீஸ் கைது செய்கிறது. கோர்ட்டு அவருக்கு 7 ஆண்டு ஜெயில்
தண்டனை விதிக்கிறது.
தம்பிகளிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. தம்பிகளின்
துரோகத்தை தெரிந்து கொம்கிறார், ரஜினி.
தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் அவர், மனைவி கவுதமியை ஒரு
வீட்டில் வேலைக்காரியாக இருப்பதைப் பார்க்கிறார். தன் சகோதரர்களை
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கடுமையாக
உழைக்கிறார். படிப்படியாக முன்னேறி, சகோதரர்களை விட உயர்ந்த
நிலைக்கு வருகிறார். அவரைப் பொறுத்தவரையில் சகோதரர்கம் விஷயத்தில்
`யாரோ ஒருவர்' போல நடந்து கொண்டு அவர்களை ஒதுக்கி விடுகிறார்.
ஆனாலும் அப்படியே இருந்துவிட முடியாமல், சகோதரர்களுக்கு ஒரு பெரிய
பிரச்சினை வருகிறது. அதில் இருந்து தப்பிக்க சகோதரர்கம் அண்ணனின்
உதவியை நாடுகிறார்கம். தங்கம் துரோகத்தை மன்னித்து, இக்கட்டான இந்த
நேரத்தில் உதவவேண்டும் என்று வேண்டுகிறார்கம்.
ரஜினியின் மனம் மாறுகிறது. சகோதரர்களுக்காக களம் இறங்கி அவர்களின்
எதிரிகளை துரத்தியடிக்கிறார். மனம் திருந்திய சகோதரர்கம், ரஜினியை
தங்களுடன் சேர்ந்து இருக்கும்படி கேட்டுக்கொம்ள, அதை ஏற்க
மறுத்துவிடுகிறார், ரஜினி. தன் வழியில் தன் மனைவி, குடும்பம் என்று
வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.
இந்தக் கதையை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார், ராஜசேகர்.
பொங்கல் வெளியீடு
பொதுவாக, பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் ரஜினியின் படங்கம்
பெரிய வெற்றி பெறும் என்று, விநியோகஸ்தர்கம் கருதினார்கம்.
எனவே, 14-1-1991 பொங்கலன்று படம் திரையிடப்பட வேண்டும் என்ற
நோக்கத்துடன், படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஆயினும், படம்
முடிவடைய கொஞ்சம் தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டது.
72 மணி நேரம் படப்பிடிப்பு
இதை அறிந்த ரஜினிகாந்த், பட அதிபர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு -
பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 72 மணி நேரம் தொடர்ந்து
நடித்தார்!
படப்பிடிப்பு நடந்த அதே வேகத்தில், `டப்பிங்', `ரீ ரிக்கார்டிங்'
வேலைகம் மூன்றே நாட்களில் நடந்து முடிந்தன.
திட்டமிட்டபடி பொங்கலன்று படம் திரையிடப்பட்டது.
படம் முழுக்க ரஜினியின் உணர்ச்சிப் பிரவாக நடிப்பை ரசிக்க முடிந்தது.
ஜெயிலில் இருந்து வந்த ரஜினி பாடும் "அண்ணன் என்ன தம்பி என்ன!
சொந்தம் என்ன பந்தம் என்ன!'' என்ற பாடல் பிரபலமானது. ரஜினிக்காக
கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருந்தார்.
படம் 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.
(ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா? - நாளை)
*********
ரஜினி `சுயதரிசனம்'
நம் வாழ்க்கையில் அம்மா, அப்பா, நேரம் ஆகிய மூன்றும் முக்கியம்.
இந்த மூன்றையும் இழந்து விட்டால், மீண்டும் பெறமுடியாது.
அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தை நேரத்துக்கு - அதாவது காலத்துக்கு
கொடுத்திருக்கிறேன். இன்றைய தினத்தை நாம் சரியாக பயன்படுத்த
வேண்டும். இன்றைய தேதி மீண்டும் நம் வாழ்க்கையில் வராது. நேரத்தை
நாம் ஏமாற்றக்கூடாது. நேரத்தை நாம் ஏமாற்ற ஆரம்பித்தால், நேரம்
நம்மை ஏமாற்ற ஆரம்பித்து விடும்.
நேரத்தை சரியாப் பயன்படுத்தி, நமக்கும், நம் குடும்பத்துக்கும்,
சமுதாயத்துக்கும் பயன்படுகிற முறையில் நாம் வாழவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன்.''
- ரஜினிகாந்த்
>>> Part
65
|