|
தொழிலில் போட்டி
இருந்தாலும்
"எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது''
கமலஹாசன் பேட்டி
"ரஜினிக்கும் எனக்கும் உம்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது''
என்று கமலஹாசன் கூறினார்.
கமலஹாசன் நடித்த "அபூர்வ ராகங்கம்'' படத்தில் சிறு வேடத்தில்
அறிமுகமான ரஜினி, பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
நடிப்பில் "உலக நாயகன்'' என்று போற்றப்படுகிறார், கமலஹாசன்.
நட்பு
"அபூர்வராகங்கம்'' படத்தில் நடிக்கும்போதே கமலும், ரஜினியும்
நண்பர்கம் ஆனார்கம்.
இருவரும் வெவ்வேறு பாதையில் நடந்து சென்றபோதிலும், அவர்கம்
இடையேயான ஆழமான நட்பு இன்றும் தொடருகிறது.
இருவரும் பல படங்களில் நடித்து, "பிசி''யாக இருந்த காலக்கட்டத்தில்,
இருவருக்கும் இடையே நட்புறவு இல்லை என்று ரசிகர்கம் நனைத்தனர். அதை
ஒரு பேட்டியில் கமல் மறுத்தார். அவர் அப்போது கூறியதாவது:-
"எனக்கும், ரஜினிக்கும் ஆகாது என்றும், ஒருவரை ஒருவர் விழுங்கப்
பார்க்கிறோம் என்றும் எங்களது எதிரிகம் சிலரும், எங்களுக்கும் `கோம்'
மூட்டிவிடப் பார்க்கும் சிலரும் சொல்வது உண்டு.
எனக்கும், ரஜினிக்கும் உம்ள நட்பு, சினிமா அந்தஸ்தையும் மீறி
நிற்பதாகும். அந்த உயரத்துக்கு வந்து, எங்களை - எங்கம் நட்பை -
எதுவும் செய்துவிட முடியாது.
"கேரக்டர்'' நடிப்பு
"அபூர்வ ராகங்கம்'' படத்தில் தொடங்கி, எங்கம் நட்பு வளர்ந்தது. "அவர்கம்''
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து
ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே. கொஞ்சம் கேரக்டர்
நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?'' என்று கேட்டேன்.
ரஜினி அமைதியாக என்னிடம், "கமல்! நீங்கம் உங்கம் வழியில்
செல்லுங்கம். எனக்கு ஸ்டைல் நடிப்புதான் சரி!'' என்றார்.
அவருடைய பதில் எப்போதுமே இப்படி நேரடியாகத்தான் வரும். சுற்றி
வளைத்து பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.
"அவர்கம்'' படத்தில் ரஜினியின் `நெகடிவ்' நடிப்பு மிக வித்தியாசமாக
அமைந்திருந்தது. அவரும் அதை சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான்
அவரிடம் `அவர்கம்' நடிப்பை சுட்டிக்காட்டி மேற்கண்ட கேம்வியைக்
கேட்டேன்.
"நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்பு, சிங்கப்பூரில் நடந்தது.
தினமும் படப்பிடிப்பு முடிந்தபின், ரஜினி ஊரை சுற்றிப் பார்க்கக்
கிளம்பி விடுவார். என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாம்
படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக
தயங்குவேன். "அட, சும்மா வாங்க! சிங்கப்பூருக்கு எதுக்கு
வந்திருக்கோம்!'' என்று அழைத்துச் செல்வார்.
ஊர் சுற்றிவிட்டு எங்கம் இருப்பிடம் திரும்ப, நம்ளிரவு 2 மணிக்கு
மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் சுற்றுவது எனக்கு
சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே
வந்துவிடுவேன்.
சுறுசுறுப்பு
ரஜினி அதிகாலை 3 மணி, 4 மணிக்கு திரும்பி வருவார். ஆனால் மறுநாம்
காலையில் பார்த்தால், முந்தின நாம் இரவு விழித்திருந்த அசதி அவரிடம்
தெரியாது.
பாலசந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கே தயாராகி
விடுவார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் என்றால், காட்சியை தயார்
செய்ய அரை மணி நேரமாவது ஆகும். அந்த இடைவெளியை நானும், ரஜினியும்
வீணாக்குவது இல்லை. அருகே உம்ள பூங்காக்களிலும் நடைபாதைகளிலும்
சிமெண்ட் சாய்மானங்கம் இருக்கும். அங்கே ஓய்வு எடுப்போம்.
நான் ஒரு இடத்திலும், ரஜினி வேறு இடத்திலும் இருக்க முடியாது.
ஏனென்றால், டைரக்டர் அழைத்ததும் எழுந்து ஓடவேண்டும். எனவே, ஒரே
இடத்தில் இருவரும் ஒருவர் தோம் மீது ஒருவர் தலை சாய்த்தபடி
தூங்குவோம்.
ஒரே காரில் பயணம் செய்யும்போதும், விமான நிலையத்திலும் இப்படி
தூங்கித்தான் ஓய்வு எடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ
தெரியாது. ஆனால் உண்மை.
"அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படப்பிடிப்பு சத்யா ஸ்டூடியோவில்
நடந்தபோதுதான், இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு
எடுத்தோம். ஏனென்றால், நாங்கம் இருவரும் இணைந்து நடிக்கும்போது,
படத்தயாரிப்பாளர்கம் எங்கம் இருவருக்குமே ஒரு தொகையை பேசிக்கொடுத்து
விடுவார்கம். தனித்தனியாக நடித்தால் இருவருமே முன்னேற முடியும்
என்று கருதி, அந்த முடிவுக்கு வந்தோம்.
வெற்றியில் போட்டி
சினிமாவைப் பொறுத்தவரை நாங்கம் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம்.
ஒரு சமயம், நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அடுத்து அதைவிடப்
பெரிய வெற்றியாக அவர் வெடித்து சிதறுவார். அதைப்பார்த்து, அதைவிட
வெற்றி பெறவேண்டும் என்று நான் முயலுவேன்.
எங்கம் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில்
எங்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை.
ராஜபார்வை
நான் முதன் முதலாகத் தயாரித்த "ராஜபார்வை''யைப் பற்றி பலரும் `ஆகா,
ஓகோ' என்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் `சரியில்லை'
என்றார்.
"டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்?''
என்று கேட்டார்.
ரஜினியின் பெரிய படம் ஒன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு, எனக்குப்
பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி
விமர்சிப்பதிலும், நாங்கம் பின்வாங்கியதில்லை.
அதுமட்டுமின்றி எங்கம் தவறுகளையும் நாங்கம் விமர்சிக்க பயந்ததில்லை.
இந்த மனப்பாங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜியிடம்கூட இருந்திருக்க
முடியாது. ஏன், வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காணமுடியாதது
என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொம்வேன்.
அரசியல்
முன்பு, அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற கேம்வி ரஜினிக்கு
எழுந்தபோது, என்னிடம் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டார்.
"வேண்டாம்'' என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். அதை ரஜினி
ஏற்றுக்கொண்டு, "எனது நலனை விரும்பும் வேறு சிலரும் இதுமாதிரிதான்
கூறுகிறார்கம்'' என்றார்.
நாயகன்
நான் நடித்த "நாயகன்'' படத்தைப் பார்த்துவிட்டு, "நடிகனுக்கு நடிகன்''
என்று பாராட்டினார், ரஜினி.
"புன்னகை மன்னன்'' நூறாவது நாம் விழாவில் கலந்து கொண்ட ரஜினி,
அப்படத்தில் நான் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, "இதுபோல்
எந்த நடிகராலும் செய்ய முடியாது'' என்று கூறினார்.
"எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து
ரசித்தேன். அந்தப்படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும்
வருத்தமுண்டு. வெற்றிகம்தான் கலைஞர்களை பெரிய அளவில்
உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புகிறவன் நான்.''
இவ்வாறு கமல் கூறினார்.
>>> Part
67
| |