எஸ்.பி.முத்துராமன் னிட்டின் உதவிக்காக
ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''
டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கும்,
அவருடைய குழுவைச் சேர்ந்த 14 பேருக்கும் உதவுவதற்காக ரஜினிகாந்த்
எடுத்துக் கொடுத்த படம் "பாண்டியன்.''
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் 75 படங்களை டைரக்ட் செய்தவர்.
ரஜினியின் அதிக படங்களை (25) டைரக்ட் செய்தவர் என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
னிட்
எஸ்.பி.முத்துராமன் னிட்டில், கேமராமேன் (விநாயகம்), எடிட்டர் (ஆர்.விட்டல்),
மேக்கப்மேன் (முஸ்தபா) மற்றும் தயாரிப்பு நிர்வாகி, இணை டைரக்டர்,
உதவி டைரக்டர் என்று 15 பேர் உண்டு. இவர்கள், எந்த ஒரு படத்துக்கும்
குழுவாகவே பணிபுரிவார்கள். வேறு டைரக்டர்களிடமோ, தயாரிப்பாளர்களிடமோ
போய் பணியாற்றுவதில்லை.
சுமார் 15 ஆண்டுகள் எஸ்.பி.முத்துராமனுடன் இந்த னிட் பணிபுரிந்தது.
சினிமா கலைஞர்களும் சரி, தொழில் நுட்ப கலைஞர்களும் சரி, அவர்கள்
புகழோடு இருக்கும் வரைதான் வருமானம். பிற்காலத்துக்கு உதவ "பென்சன்''
எதுவும் கிடையாது.
ரஜினி உறுதிமொழி
தன்னுடன் இணைந்து பணியாற்றிய 14 பேர்களின் எதிர்காலத்துக்கும்
உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று முத்துராமன் எண்ணினார்.
அப்போது முத்துராமன் இயக்கத்தில் "ராஜா சின்ன ரோஜா'' படத்தில் ரஜினி
நடித்துக்கொண்டிருந்தார். அவருடன் முத்துராமன் இதுபற்றிப் பேசினார்.
"என்னுடன் இணைந்து பணியாற்றிய 14 பேருக்கும் உதவ விரும்புகிறேன்.
எங்களுக்காக நீங்கள் ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும்'' என்று
கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் சொன்னதை என் மனதில் வைத்துக் கொண்டேன். தக்க சமயத்தில்
உங்களுக்காகவும், உங்கள் னிட்டுக்காகவும் ஒரு படம் செய்து
கொடுக்கிறேன்'' என்றார்.
புதிய டைரக்டர்
இந்த சமயத்தில் ஏவி.எம்.மின் "ராஜா சின்ன ரோஜா'' படப்பிடிப்பு
முடிந்தது.
அதுவரை, ரஜினி நடித்த ஏவி.எம். படங்கள் அனைத்தையும்
எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார். அடுத்த படத்துக்கு, ஒரு
மாறுதலுக்காக புது டைரக்டரை போடலாம் என்று சிலர் சரவணனுக்கு யோசனை
தெரிவித்தார்கள்.
இதை சரவணன் ஏற்கவில்லை. "ரஜினியை வைத்து முத்துராமன் டைரக்ஷனில்
நாம் எடுத்த எல்லா படங்களும் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன.
அப்படியிருக்க, ஏன் மாற்றவேண்டும்'' என்று கேட்டார்.
எனினும், மாறுதல் தேவை என்ற கருத்து ஏவி.எம். ஸ்டியோவில் பலருக்கும்
தொடர்ந்து இருந்து வந்தது.
ரஜினி கண்ட தீர்வு
இந்த விஷயம் ரஜினியின் காதுக்கு எட்டியது. அவர் இதுபற்றி சரவணனிடம்
பேசினார்.
"ரசிகர்கள் மாறுதலை விரும்புவது இயற்கை. முத்துராமன் யதார்த்தவாதி.
மிக நல்ல மனிதர். இதுபோன்ற யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்பார். நான்
அவரிடம் பேசுகிறேன்'' என்றார், ரஜினி.
அப்போது சரவணன் ஒரு யோசனை சொன்னார். "முத்துராமன் னிட்டுக்காக ஒரு
படம் செய்து கொடுப்பதாக ஏற்கனவே நீங்கள் தெரிவித்து இருக்கிறீர்கள்.
அந்தப் படத்தை முதலில் செய்து கொடுத்து விடுங்கள். அதன் பிறகு
ஏவி.எம். படத்தில் நடிக்கலாம். அதுதான் நியாயமானதாக இருக்கும்''
என்பதே சரவணன் தெரிவித்த யோசனை.
"ஓ.கே. இதுதான் நல்ல யோசனை'' என்றார், ரஜினி.
பாண்டியன்
இதன் பிறகு ரஜினியும், எஸ்.பி.முத்துராமனும் சந்தித்துப் பேசியதில்,
முத்துராமனின் னிட்டுக்காக "பாண்டியன்'' என்ற படத்தைத் தயாரிப்பது
என்று முடிவாயிற்று.
"என்ன பேனரில் படத்தை தயாரிக்கலாம்?'' என்று முத்துராமன் கேட்டபோது,
"உங்கள் தாயார் பெயரையே வையுங்கள்'' என்று ரஜினி கூறினார். அதன்படி
"விசாலம் புரொடக்ஷன்ஸ்'' என்ற பெயரில் படக்கம்பெனி தொடங்கப்பட்டது.
பொதுவாக, முத்துராமன் டைரக்ஷன் பணியை தவிர வேறு எந்த பணியிலும்
தலையிடுவதில்லை. ஆனால் தன் னிட்டுக்காக "பாண்டியன்'' படத்தைத்
தயாரித்ததால், அதன் தயாரிப்பாளராகவும் செயல்பட வேண்டியிருந்தது.
இந்தப் பொறுப்பை சேர்த்து கவனிப்பதில் உள்ள சிரமங்களை ரஜினியிடமும்,
சரவணனிடமும் முத்துராமன் கூறினார். "நீங்கள் கவலைப்படவேண்டாம்.
நீங்கள் டைரக்ஷனில் கவனம் செலுத்துங்கள். மற்ற வேலைகளை நாங்கள்
கவனித்துக் கொள்கிறோம'' என்று ரஜினியும், சரவணனும் கூறினார்கள்.
அதன்படி தயாரிப்பு பணிகளின் பளுவை அவர்கள் ஏற்றார்கள். குறித்த
காலத்தில் படத்தை எடுத்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்தார்.
படச்செலவுகள், பட விற்பனை போன்ற விஷயங்களை சரவணன் கவனித்துக்
கொண்டார்.
இதனால், எஸ்.பி.முத்துராமன் வேறு கவலைகள் இன்றி படத்தின் டைரக்ஷனில்
மட்டும் கவனம் செலுத்த முடிந்தது.
குஷ்பு
இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்தார். முத்துராமன்
டைரக்ட் செய்த படத்தில் அறிமுகம் ஆனவர் என்பதால், அவரிடம் குஷ்பு
மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். எனவே, குறைந்த
சம்பளத்தில் நடிக்க முன்வந்தார்.
படம் வேகமாக வளர்ந்தது. 1992 தீபாவளிக்கு (அக்டோபர் 25) படம்
வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.
படம் கிட்டத்தட்ட தயாராகி முடிந்துவிட்டது. ஒரு சில வேலைகளே பாக்கி.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.
படம் வருவதற்கு 10 நாட்களே இருந்த நிலையில், டைரக்டர்
எஸ்.பி.முத்துராமனின் மனைவி கமலா திடீரென்று காலமானார்.
மனைவியின் மரணம் முத்துராமனை வெகுவாக பாதித்தது.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், படத்தை திரையிட
எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த விநியோகஸ்தர்களும்,
தியேட்டர்காரர்களும் கையைப் பிசைந்தனர்.
"படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடலாம்'' என்று ரஜினியும் கூறினார்.
எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்த முத்துராமன், ஒரு முடிவுக்கு
வந்தார்.
(முத்துராமன் எடுத்த முடிவு - நாளை)
ரஜினி `சுயதரிசனம்'
"ஆரம்ப காலங்களில் நான் முரட்டுத்தனமாகப் பலரிடம் நடந்து கொண்டதை
நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். ஆனால் அதற்குக்காரணம்,
குறுகிய மனப்பான்மை அல்ல. அவர்களின் அணுகுமுறையும் ஒரு காரணம்.''
- ரஜினிகாந்த்.
>>> Part
82
|