ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம்
ரஜினி நடத்தி வைத்தார்
ஏழைப் பெண்களுக்கு, ரஜினிகாந்த் தன் சொந்த செலவில் திருமணம் நடத்தி
வைத்தார்.
முதன் முதலாக, 1997 ஜுலை 14-ந்தேதி 20 பெண்களுக்கு திருமணம் செய்து
வைத்தார். இந்த திருமண நகழ்ச்சி ரஜினியின் ராகவேந்திரா திருமண
மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 20 ஏழைப் பெண்களையும், அவர்களை
மணக்கப்போகும் 20 வாலிபர்களையும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
தேர்ந்து எடுத்திருந்தது.
ரஜினிகாந்த் திருமணம் நடத்தி வைத்த 20 ஜோடிகளின் பெயர்கள் வருமாறு:-
1. ரகுபதி - தனலட்சுமி (அம்பத்தூர்)
2. சுந்தர்ராஜ் - மேனகா (எருக்கஞ்சேரி)
3. டில்லி - அமலு (புரசைவாக்கம்)
4. சதீஷ் - சுமதி (கோட்டூர்புரம்)
5. முருகேசன் - லதா (கொடுங்கைர்)
6. சிவானந்தம் - கீதா (வண்ணாரப்பேட்டை)
7. சந்திரசேகர் - ஹேமலதா (திருவொற்றிர்)
8. நடராசன் - பார்வதி (எண்ணூர்)
9. மதன் - பாரதி (காமராஜர் காலனி)
10. லியோ - விமனா (தூத்துக்குடி)
11. பேச்சிராயர் - வள்ளி (ஸ்ரீவைகுண்டம்)
12. மணிமாறன் - வெண்ணிலா (சேலம்)
13. காதர் மொய்தீன் - சைத்துன் பீவி (மதுரை)
14. முருகேசன் - சித்ரா (திருச்சி)
15. சுப்பிரமணி - அருல்ளி (ஈரோடு)
16. பாண்டியன் - ரீனா (கடலூர்)
17. வேலு - சரளா (செங்கல்பட்டு)
18. முருகன் - மாரியம்மாள் (நெல்லை)
19. மணிகண்டன் - சுமதி (திண்டுக்கல்)
20. ஜான் அலெக்சாண்டர் - பாத்திமா (விருதுநகர்)
திருமண மண்டபத்தில் 20 ஜோடிகளுக்கும் 20 இடங்கள்
ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தந்த இடத்தில் வந்து ஒவ்வொரு ஜோடியினரும்
8.30 மணிக்கு அமர்ந்தனர். 18 இந்து ஜோடிகளுக்கும் 18 சாஸ்திரிகள்
இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார்கள்.
20 ஜோடிகளில் ஒரு ஜோடி முஸ்லிம் மதத்தையும், இன்னொரு ஜோடி கிறிஸ்தவ
மதத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அவர்கள் மத சம்பிரதாயப்படி
திருமணம் நடந்தது.
தாலி கட்டினார்கள்
காலை 9.05 மணிக்கு ரஜினிகாந்தும், மனைவி லதாவும் திருமணம் நடந்த
இடத்துக்கு வந்து அமர்ந்தனர். அவர்கள் வந்ததும் ஒரு மணி நேரம் வேத
மந்திரங்களை புரோகிதர்கள் சொன்னார்கள்.
அதன் பிறகு மணமகள்களின் பெற்றோர், தங்கள் மகள்களின் கையை பிடித்து
மணமகன்களின் கையில் கொடுத்தனர். பிறகு மாலை மாற்றிக்கொண்டனர்.
9-55 மணிக்கு கெட்டி மேளம் ஒலித்தது.
இந்த கோலாகலமான காட்சியை ரஜினிகாந்தும், லதாவும் கண்டு களித்தபடி
கையெடுத்து கும்பிட்டு அட்சதை தூவினார்கள்.
சந்திப்பு
திருமணம் முடிந்ததும், ரஜினிகாந்தும், லதாவும் அந்த இடத்தில்
இருந்து எழுந்து, ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனியாக சந்தித்தனர்.
அவர்களது காலில் மணமக்கள் விழுந்து ஆசி பெற இருவரும் அட்சதை தூவி
மணமக்களை வாழ்த்தினார்கள். பிறகு மணமக்களுடன் போட்டோ
எடுத்துக்கொண்டனர்.
திருமணம் செய்த 20 ஜோடிகளுக்கான எல்லா செலவுகளையும் ரஜினிகாந்தே
ஏற்றுக்கொண்டார்.
தாலி சங்கிலி 2 பவுன், தாலி ஷி பவுன் ஆகியவையும், மணமகனுக்கு 1ஷி
பவுனில் சங்கிலி, கைக்கெடிகாரம், பட்டு வேட்டி, சட்டை, துண்டு
வழங்கப்பட்டது.
இதுதவிர புதுமண தம்பதிகள் குடும்பம் நடத்துவதற்கு வசதியாக, குடம்,
அண்டா, சொம்பு, தட்டு, தம்ளர் அடங்கிய 37 வகையான எவர்சில்வர்
பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான ஸ்டவ், பானை, பொறிக்கும்
சட்டி என 22 வகையான எவர்சில்வர் பாத்திரங்கள், 2 தலையணை, ஒரு
படுக்கை, 6 அடி உயர ஸ்டீல் பீரோ ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
செலவுக்கு பணம்
திருமணத்தை நடத்தி முடித்த ரஜினிகாந்துக்கு போகும்போது திடீரென்று
இன்னொரு யோசனையும் தோன்றியது.
"புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குடும்பம் நடத்த செலவுக்கு பணம்
தேவைப்படும். எனவே ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கும்படி
கூறினார். அதன்படி 20 ஜோடிகளுக்கும் மொத்தம் ரூ.2 லட்சம்
வழங்கப்பட்டது.
மணமக்களின் உறவினர்களையும் ரஜினிகாந்த் தன் செலவில் சென்னைக்கு
அழைத்து வந்து இருந்தார். மொத்தம் 11 பஸ்கள், 18 வேன்களில் அவர்கள்
வந்தனர்.
வந்திருந்த அனைவரும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்க
வைக்கப்பட்டு இருந்தனர்.
பேட்டி
திருமணம் முடிந்ததும் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், "என்
வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சந்தோஷமான நாள் இது. இந்த திருமணம்
எனக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியில்
இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற செயலாளர்
சத்யநாராயணா செய்து இருந்தார்.
1997-க்குப் பிறகும், இத்தகைய இலவச திருமணங்களை ரஜினி நடத்தினார்.
(ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' - நாளை)
***
ரஜினி `சுயதரிசனம்'
"ரசிகர் மன்றங்கள் அமைப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்.
நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையா, இல்லையா என்கிற ஆராய்ச்சியும்
தேவையற்றது. அது நடிகர்களின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது.
என்னைக் கேட்காமல் ஏன் மன்றம் வைத்தீர்கள் என்று யாரையும் நான்
கேட்கமாட்டேன். எனக்குக் கெட்ட பெயர் ஏதும் வராமல்
பார்த்துக்கொண்டாலே போதும்.''
- ரஜினிகாந்த்.
>>> Part
100
|